Published:Updated:

பல்லி! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

ஆவலோடும் வியப்போடும் பார்த்துக் கொண்டிருந்த பேரனிடம் பல்லியின் வாலைக்காட்டிப் பேசிக்கொண்டிருந்தார். ராமமூர்த்திக்குக் கோபம் தலைக்கேறியது..

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

" லையில ஏதோ விழுந்த மாதிரி இருக்கு..பல்லியாண்ணு பாரு.."

அப்பா கூறியதும் விருட்டென்று ஓடிப் பார்த்தான் ராமமூர்த்தி..எதுவுமில்லை ..வெறும் சருகுதான்.பனியனில் ஒட்டிக் கொண்டிருந்தது.

"ஒண்ணுமில்ல வெறும் சருகுதான் பல்லி ஒண்ணும் விழல.."

எரிச்சலாய் வந்தது. எரிச்சலுக்குக் காரணம் இருந்தது..கொஞ்ச நாட்களாகவே அப்பா பல்லி பற்றி அதிகம் பேசுகிறார். அவரது படுக்கையை ஒருநாள் தற்செயலாகப் பார்த்த போது இறந்து போன பல்லி ஒன்று, காய்ந்து சருகாகிப் போன நிலையில் படுக்கைக்குப் பக்கத்தில் இருந்த ஜன்னலில் இருந்தது.

இப்படித்தான் அன்றொருநாள் ஒரு பல்லி கதவிடுக்கில் இருந்ததைப் பார்க்காமல் கதவை மூடிவிட்டான் ராமமூர்த்தி..வால் கதவிடுக்கில் மாட்டிக் கொண்டு நசுங்கியதில் வால் மட்டும் அறுந்து விழ பல்லி தப்பித்துக் கொண்டது..அறுந்து விழுந்த வால் துடித்துக் கொண்டு கிடந்தது.அதைப் பார்த்துவிட்ட அப்பா விரைந்து வந்து,

" பாவம்டா ..பல்லியக் கொல்லப் பாத்தியே..பாரு துடிக்கிறத"..என்றவாறு அதை ஒரு காகிதத்தில் பத்திரமாக அள்ளி எடுத்துக் கொண்டுபோய் பேரனிடம் காட்டினார்.

Representational Image
Representational Image
Pixabay

" பல்லிக்கு மட்டும் தற்காப்பு உணர்ச்சி அதிகம்...தன் உயிருக்கு ஆபத்துண்ணா வாலை மட்டும் இழந்துட்டுத் தப்பிச்சிக்கும்.".

ஆவலோடும் வியப்போடும் பார்த்துக் கொண்டிருந்த பேரனிடம் பல்லியின் வாலைக்காட்டிப் பேசிக்கொண்டிருந்தார்.

ராமமூர்த்திக்குக் கோபம் தலைக்கேறியது..

" அதை வெளியில் வீசி எறிங்கப்பா" கத்தினான்.

அப்பா அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தார். பையனும் மிரண்டு போய் விட்டான். சத்தம் கேட்டு ஓடி வந்த ராதா அவனைச் சமாதானப் படுத்தினாள்.

" ஏங்க இப்படிக் கத்துறீங்க.."

"உனக்குத் தெரியாது..எப்பப் பாத்தாலும் இவருக்குப் பல்லி பல்லின்னு ஒரே பல்லிப் புலம்பலாப் போச்சு.." கத்தினான்.

"சரி மாமா , அவர்தான் கத்துறாரே..அத வெளியில போட்டிருங்க"..என்றபடி ராமமூர்த்தியைப் பார்த்து

" ஏங்க. இதுக்குப் போய் இப்படிக் கத்துறீங்க..உங்களுக்கு என்ன ஆச்சு.."என்றாள் கலக்கமாக

" பிறகு சொல்றேன் முதல்ல அவரை அத வெளியில போடச் சொல்லு"

தற்குப்பிறகு அடிக்கடி பல்லியைப் பற்றிப் பேச்சு வருவதை ராமமூர்த்தி கவனிக்கத் தொடங்கினான்..ஒரு நாள் ஒரு பேப்பர் கட்டிங்கைக் கொண்டுவந்து படுக்கையின் அடியில் அப்பா வைத்திருக்கிறார் என்று எடுத்துக் கொண்டு வந்தான்..அதில் சாம்பாரில் பல்லி விழுந்ததில் எண்பது மாணவிகள் வாந்தி என்று செய்தி இருந்தது..மனைவியிடம் காட்டிக் கவலைப் பட்டான்..

மற்றொரு நாளில் அப்பா இரவு நேரத்தில் விளக்குமாற்றை எடுத்து ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தார்..

" என்னப்பா இது ..ராத்திரியில ஒட்டடை அடிக்கிறீங்க."

" ஒட்டடை இல்லைடா ...எத்தனை பல்லி பாரு..தலையில விழுந்து வச்சா என்ன பண்றது..ஓட்டு வீடுங்குறது சரியாத்தான் இருக்கு.. உத்திரத்துல எத்தனை பல்லி பாரு….நிம்மதியாப் படுக்க முடியல்ல. "என்றார்.

உண்மைதான்..நிறைய பல்லிகள் ஓடி ஒளிந்தவாறு இருந்தன. இரண்டொன்று கீழே விழுந்து ஓடின..

மற்றொரு நாள் ராதா பூஜை செய்யும்போது உத்தரத்தில் இருந்து பல்லி குரல் கொடுத்தது..

"ரொம்ப நல்ல நேரம்தான்..பல்லி சொன்னாப் பலிக்கும்னு சொல்லுவாங்க.. கிழக்கு மூலைல பல்லி பேசியிருக்கு.. பலன் நல்லதாத்தான் இருக்கும்.. வீடு கட்டுற வேலைய இனி ஆரம்பிச்சிடலாம்.." என்றார்.

"என்னப்பா பல்லி சொன்னாத்தான் வீடு கட்டுவோமா.. எனக்கு ஏற்கெனவே வீட்டு லோன் சாங்சன் ஆயிருச்சு.."

" அதுக்கில்லப்பா பல்லி ஒவ்வொரு மூலையில சொல்றதுக்கும் ஒவ்வொரு பலன் இருக்கு ..பஞ்சாங்கத்தில போட்டிருக்கான்.."

ராமமூர்த்திக்கு என்னவோ போல் இருந்தது..

Representational Image
Representational Image
Pexels

நேற்றும் அப்படித்தான்.. அவரது அலமாரியில் ஏதோ தேடும்போது ஒரு பேப்பர் கட்டிங் மடித்து வைத்திருந்தது.. பிரித்துப் பார்த்தபோது 'பல்லி விழும் பலன்கள் 'என்றிருந்தது..

ராமமூர்த்திக்கு கவலை அதிகரிக்கத் தொடங்கியது…

போதாக்குறைக்கு அவன் பையன் கையில் இருந்த புத்தகம் அவனைத் திடுக்கிட வைத்தது..உயிரினங்கள் பற்றிய புத்தகத்தில் விதம் விதமாய் பல்லிகளின் படங்களுடன் பல்லிகளின் வாழ்க்கை பற்றி போட்டிருந்ததைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

"ஏதுடா"

"தாத்தா வாங்கிக் கொடுத்திருக்கிறார்"

"கொண்டா…"

பல்லிகள் பலவகை நிலைகளிலும் வண்ணப் படங்களாக

பெரிது ..பெரிதாக..

குழப்பமும் கவலையும் அதிகமாகிவிட்டது

"அப்பா எப்ப பார்த்தாலும் பல்லி பல்லின்னு அலையிராறே..எனக்கு பயமா இருக்கு" என்றான் ராதாவிடம்.

" அப்படியெல்லாம் ஒன்றுமில்லை... வீடுன்னு இருந்தா பல்லியும் இருக்கத்தான் செய்யும் ..அதுவும் பழைய கால ஓட்டு வீடு ...பல்லிக்கு குறைச்சலா என்ன"

" அதுக்கில்லை.. அவர் கொஞ்சம் அதிகப்படியாக பல்லி பல்லின்னு ஆர்வமா இருக்காரோன்னு படுது.. அது தான் எனக்கு கவலையா இருக்கு"

" வீணாப் போட்டு அலட்டிக்காதீங்க ...மாமா அப்படி எல்லாம் இல்ல.. நார்மலாத்தான் இருக்காரு"

"எனக்கு என்னவோ மனசு கேக்கலை.. நானும் இதை எதார்த்தமாக எடுத்துக்கத்தான் நினைக்கிறேன்"

னால் பிரச்சினை அதோடு முடியவில்லை.. அன்று காலையில் அப்பா பழைய ட்ரங்க் பெட்டி ஒன்றில் எதையோ குடைந்து கொண்டிருந்தார் … அவர் அப்பால் சென்றதும் ராமமூர்த்தி வேகமாக சென்று பெட்டியை திறந்து பார்த்தான்.. ஒரு காக்கி நிறக் கவர் கவனத்தைக் கவர்ந்தது ...

திறந்து பார்த்ததும் அதிர்ச்சியாகிவிட்டது…

கவருக்குள் இறந்துபோய் பாடமாகிப் போன ஏழு எட்டு பல்லிகள் ..

குடும்ப டாக்டரும் மனோதத்துவ நிபுணருமான சம்பத்திடம் சென்றபோது,

" நீ சொல்றதைப் பார்த்தா இது ஒரு வகையான மனச்சிதைவுன்னு சொல்லலாம்... ஆபத்து ஒண்ணுமில்லை.. ஏதோ ஒரு விஷயத்தில தீவிரமான சிந்தனையும் அதை ஒட்டிய செயலும் அதிகப்படியாகச் செய்யலாம்னு தோணும் எதுக்கும் உங்க அப்பாவை கூட்டிட்டு வந்தா நான் டெஸ்ட் பண்ணி ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுடுவேன்.. இது ஒருவிதமான அப்சஸன்தான்.."

" உங்க கிட்ட காட்டலாம்னு அப்பாவக் கூப்பிட்டா வருவாரோ என்னவோ…"

Representational Image
Representational Image
Pixabay

"அதப்பத்தி என்ன கவலை.. ஜாக்கிங் போறப்ப அவர்கிட்ட பேசுவேன்ல. .. அப்பவே கொஞ்சம் கொஞ்சமாக பேச்சுககொடுத்து விஷயத்தைப் புரிஞ்சிக்கறேன் "

றுபடியும் அவரைச் சந்தித்தபோது

"ராமமூர்த்தி…. உங்க அப்பாகிட்ட எல்லா விஷயமும் கேட்டுட்டேன் .. உன் கவலை நியாயமானது தான்.. ஒரு சின்ன கோர்ஸ் மெடிசன் எடுத்துக்கிட்டா எல்லாம் சரியாயிடும்... வீட்டை வேணா மாத்திப்பாரேன்.."

"வீட்டை மாத்தப் போறோம் ..சொந்த வீடு இன்னும் ஒரு மாசத்துல ரெடி ஆகிடும்.. அங்க குடி போறோம்"

"அப்ப சௌகர்யமாகப் போச்சு... வீடுமாறினப்பறம் என்ன ரியாக்ஸன்னு பார்த்துட்டு மருந்து எடுத்துக்கலாம்"

னால் அதற்கு அவசியமில்லாமல் போய்விட்டது. அப்பா திடீரென்று மாரடைப்பால் போய் சேர்ந்துவிட்டார் ...தொடர்ந்து அவருக்கான சடங்குகள் ...வீடு கட்டிக் கிரகப்பிரவேசம் என்று தொடர் நிகழ்ச்சிகள் முடிந்து, புது வீட்டில் குடியேறி விட்டார்கள்.

பூஜை அறையில் அப்பாவின் படம் பிரேம் போட்டு மாலை எல்லாம் அணிவித்து மாட்டியிருந்தது.. வீடு முழுவதும் அக்ரலிக் பெயின்டு அடித்து இருந்ததால் பெரும்பாலும் சுவர்கள் எல்லாம், வழுவழுவென்று இருந்தன பல்லி என்பது மருந்துக்குக் கூட இல்லை ..

" அப்பா இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.. புது வீட்டில் ஒரு நாள் கூட வாழாமல் போய்ச் சேர்ந்துட்டாரு.. மனசுக்கு

ரொம்பக் கஷ்டமா இருக்கு.."

"அப்பா மட்டும் இல்லைங்க.. பல்லி கூட இந்த வீட்டில் இல்ல, பார்த்தீங்களா"

என்று ராதா சொன்னபோது ராமமூர்த்தி அவளை முறைத்தான்..

யுத பூஜை தினத்தில் வீட்டுச் சாமான்களை எல்லாம் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது அப்பாவின் படத்தை நகர்த்தினான்.. அப்பாவின் படத்துக்குப் பின்னால் இருந்து பல்லிகள் தாவி ஓடின... ஒன்று, இரண்டு, பத்து , ஐம்பது …..எங்கும் பல்லிகள் பல்லிகள் ...

"ராதா" கத்தினான் ராமமூர்த்தி..

பதறியபடி ஓடி வந்த ராதாவிடம்

"அங்கே பாரு ..அப்பா படத்துக்குப் பின்னால எத்தனை பல்லிகண்ணு பாரு.. செத்த பிறகும் அப்பாவுக்கு பல்லி பயித்தியம் தீரலை.. இங்க பபாரு அம்பது அறுபது பல்லிக ஓடுது…"

எங்ககேங்க. .. எங்கேங்க பல்லி ஒன்னும் காணலியே"

"இதோ பாரு . இங்கே படத்துக்குப் பின்னாலிருந்து ஓடுது பாரு.."

எங்கேங்க. ஒரு பல்லியும் காணல... ஏன் இப்படி உளர்ரீங்க.. என்ற ராதாவிடம் மீண்டும் கத்தினான்.

"பாரு.. இங்க பாரு.. நல்லா பாரு.. பல்லி எத்தனை ஓடுதுன்னு பாரு.."

என்ற அவனைக் கவலையோடு பார்த்தாள்.

Representational Image
Representational Image
Pixabay

டாக்டர் சம்பத், முன்னால் அமர்ந்திருந்த ராதாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

"பயப்படாதம்மா... உன் வீட்டுக்காரருக்கு மனசுல ஒரு வித டிப்ரஷன் இருக்கு... பல்லி சம்பந்தமான ஏதோ ஒன்னு இருக்கு... உங்க மாமனார் சாகறதுக்கு முன்னாடி என்கிட்ட சொல்லி இருக்கார் ... செத்த பல்லி எல்லாம் எடுத்து கவர்ல வச்சிருந்தானாம்.. பல்லி பற்றிய பேப்பர் கட்டிங், பல்லி சொல்லுக்குப் பலன்,, செத்த பல்லியோட எலும்புக்கூடுன்னு நிறையக் கலெக்சன் வச்சிருந்தான்னு சொல்லி இருக்கார் . அவன் கூட உங்க மாமாவுக்குத்தான் மனசு சரியில்லன்னு என்கிட்ட வந்து சொல்லி இருக்கான்..

உண்மையில இவனுக்குத்தான் பிரச்சனை.. கவலைப்பட ஒண்ணுமில்லை.. ஒரு கோர்ஸ் மெடிசன் எடுத்துக் கொண்டால் எல்லாம் சரியாயிடும்….!

-கமலநாபன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு