Published:Updated:

`இதோ, கிளம்பிட்டேன்..!' - திக் திக் சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image ( Vikatan Team )

``வேண்டியதில்ல.. ஜிபிஎஸ் இருக்கு... நா வந்துருவேன்... இன்னும் 10 நிமிசத்தில வர்றேன்... ரெடியா இருங்க எங்க போகணும் ஜிஹெச்சுக்கா...''

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

பைபாஸ் சாலையில் பொன்மேனி நகரில் இருந்து அழைப்பு. மாரடைப்பு கேஸ். அப்போதுதான் ஆஸ்பத்திரியில் இருந்து வந்திருந்தான் கண்ணன். ஆம்புலன்ஸை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு மதிய உணவுக்காக. இங்கியிருந்தான். அப்பொழுதுதான் ஒரு விபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞனைக் குற்றுயிரும் குலையுயிருமாக ஜிஹெச்சில் சேர்த்துவிட்டு வந்திருந்தான். அவன் பணியாற்றும் ஆம்புலன்ஸ் நிறுவனம் பாத்திமா கல்லூரி அருகில் இருந்தது. ஒவ்வொரு முறையும் கேஸ் அட்டண்ட் செய்தபின் தண்ணீர் ஊற்றி வேன் முழுவதும் சிதறிக்கிடக்கும்.

Representational Image
Representational Image
Vikatan Team

ரத்தக்கறைகளையும் ஸ்ட்ரெச்சரையும் கழுவுவது வழக்கம். அதனால் நிறுவனத்தில் வண்டியை நிறுத்திவிட்டு மாற்று வண்டியை எடுத்துக்கொண்டு அருகிலேயே கரிசல்குளம் பெட்ரோல் பங்க் அருகில் இருந்த வீட்டிற்கு சாப்பிட வந்தவன் சாப்பிட உட்கார்ந்தபோதுதான் அழைப்பு வந்தது.

பதற்றத்துடன் பெண்குரல் ஒலித்தது.

"சார், அப்பா மயக்கமாயிட்டாரு... பக்கத்தில டாக்டர்கிட்ட காட்டுனோம்… ஹார்ட் அட்டாக் மாதிரி இருக்கு. உடன ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போங்கன்னு சொல்றாங்க வர்ரீங்களா..." என்றது.

'சாப்பிடப் போறேன்.. கா மணி நேரத்துல வந்துர்ரேன்' என்று சொல்ல நினைத்தவன், பெண்ணின் பதற்றத்தை அறிந்து,

" இந்தா வர்ரேன்மா எந்த ஏரியா.. வீட்டில இருக்கீங்களா.. ஆஸ்பத்திரியிலயா" என்றான்.

``வீட்டிலதான் பொன்மேனி அம்பேத்கார் சில பக்கத்துல …. சீக்கிரமா வந்துருங்க..லொகேஸன் சொல்லட்டுமா..''

Representational Image
Representational Image
Pixabay

``வேண்டியதில்ல.. ஜிபிஎஸ் இருக்கு .. நா வந்துருவேன் .. இன்னும் பத்து நிமிசத்தில வர்ரேன்.. ரெடியா இருங்க எங்க போகணும் ஜிஎச்சுக்கா..''

``தெரீல. எல்லோரும் பதறிப் போயிட்டிருக்காங்க…''

``சரி பதறாதீங்க. அவர காத்தோட்டமா இருக்க விடுங்க..சுகர் இருக்கா?''

``சுகர்லாம் இல்லிங்க ... சீக்கிரம் வாங்க.. பயமா இருக்கு..''

``வண்டிய எடுத்திட்டேன்.. வரதுக்க ஆவுற நேரம்தான்… பயப்படாதீங்க..''

``சரிம்மா.. எதுக்கும் கொஞ்சமா தண்ணி கொடுங்க. நாங்க வந்திருவோம்.''

ருத்துவப் பயிற்சி பெற்றிருந்த உதவியாளர் நிறுவனத்தில் தயாராக இருந்தார்.

அவரையும் அழைத்துக்கொண்டு விரைந்தான் கண்ணன்.

வேனை எடுக்கும் போது வீட்டுக்குள் இருந்து அம்மா குரல் கேட்டது..

``ஒரு வா சாப்பிட்டுப் போடா ..காலையிலயும் சாப்பிடல..''

என்ற குரலும் தொடர்ந்து ஒலித்த ``அது எப்பச் சாப்பிட்டுருக்கு..கேஸ்னா விழுந்து ஓடிருமில்ல..’’ என்ற பிரசவத்திற்காக வந்திருந்த தங்கையின் குரலும் தேய்ந்து மறைந்தன.

Representational Image
Representational Image
Pixabay

பெரியவரை வண்டியில் பின்புறப் படுக்கையில் படுக்க வைத்திருந்தார்கள். அவரோடு அவரது மனைவியும், மகளும், பயமும் அழுகையும் பதற்றமும் நிறைந்த முகங்களுடன் ஏறி அமர்ந்திருந்தனர். உதவியாளர் மட்டும் டிரைவர் இருக்கையின் அருகில் அமர்ந்து கொள்ள, அந்த 108 ஆம்பூலன்ஸ் பைபாஸ் சாலையில் வேகமெடுத்தது.

"சார் எங்க விட "

" அவருக்கு நெஞ்சுவலி ஜாஸ்தியா இருக்கு அட்டாக் சிம்ப்டம்லாம் இருக்கு.. நல்ல வேளை சுகர் இல்ல.. வேற மாதிரி க்ளாட் இருக்கான்னு பாக்கணும்னு இப்பப் பாத்த டாக்டர் சொல்லியிருக்காரு.. "

" பல்ஸ் எப்படி இருக்கு பாத்தீகளா "

" பல்ஸ் கொஞ்சம் டவுட்டுலதான் இருக்கு. எவ்வளவு சீக்கிரம் வெண்டிலேட்டர் வைக்கலாமோ அவ்வளவு நேரத்துக்குளள்ள டாக்டர்கிட்ட போனா நல்லது.."

" அப்பன்னா ஜிஎச்சுக்கு வேண்டாம் சார்.. காமாட்சிக்கு ஹாஸ்பிட்டல் போயிரலாம்.."

" நானும் அப்படித்தான் சொல்லியிருக்கேன்..மீனாச்சிக்குப் போலாம்.. "

ண்ணன் இந்த 108 சர்வீசுக்கு வந்து ஆறுமாசம் தான் ஆகியிருந்தது..அவன் இப்படி நெஞ்சுவலி கேஸ் எல்லாம் ஏற்றிச் சென்றதில்லை.. இதுவரை வந்த பத்து இருபது கேஸ்களும் ஆக்ஸிடென்ட் கேஸ்கள்தான். எல்லாமே குற்றுயிரும் குலையுயிருமாக இரத்தமும் இழிந்த சதைகளுடனும்தான் அவன் பார்த்திருக்கிறான். இப்படி முழு உடலோடு ஏற்றியது இது இரண்டாவது முறை..முதல் கேஸ் ஒரு இளம்பெண்ணின் பிரசவ கேஸ். அப்போது அந்தப் பெண்ணுக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்தது.

ஆரம்பத்தில் இதுபோல் அடிபட்டவர்களையும் நோயாளிகளையும் ஏற்றிச் செல்லும் போதெல்லாம் மனம் படபடத்திருக்கும்.

நிறுவன முதலாளி சொல்லியிருந்தார்.

Representational Image
Representational Image
Pixabay

" தம்பி, கேஸ் ஏத்திக்கிட்டு வண்டில போகும்போது நிதானமா இருக்கணும்.. பதட்டப்படவே கூடாது.. வேகமாவும் ஓட்டணும் ஆனா ஜாக்கிரதையாவும் போவணும்..

இந்த வேலை கிட்டத்தட்ட டாக்டர் வேலை மாதிரிதான்.. உசிரக் காப்பாத்தணும்கிறத மனசில வச்சிக்கணும்.. சாப்பாடு தூக்கமெல்லாம் நினைக்கக் கூடாது.. நம்ம வேலை அடிபட்டவங்கள சீக்கிரமா ஆஸ்பத்திரிக்கு கொண்டு போறதுதான்.. அப்புறமா டாக்டருங்க பாத்துப்பாங்க.. மனுசங்க பொழைக்கிறதும் சாகுறதும் டாக்டர் கைல மட்டுமில்ல … நம்ம கையிலயும் கூட இருக்கு...அதுதான் இந்த வேலைக்கு கிடைக்கிற மரியாதை "

என்று அடிக்கடி சொல்லி பணியாளர்களை ஊக்கப் படுத்துவார்..

" கண்ணா .. மீனாச்சிக்குப் போலாம்னு நீ எதுக்கு நினைச்சே "

உதவியாளர் முத்துச்சாமி கேட்டதும் சைரன் ஒலியை மட்டுப்படுத்தி விட்டு வேகத்தைக் குறைக்காமலே,

" அங்க ஒரு வசதி என்னன்னா எமர்ஜென்சி வெளியிலயே இருக்கும்.. வேனையும் எமர்ஜென்சி வாசல் வரை கொண்டு போகலாமில்ல..மத்த இடங்கள்னா இந்த வசதி இருக்காது.. சீக்கிரமா அட்டண்ட் பண்ணிருவாங்க.. "

ஆமோதித்தார் முத்துச்சாமி.

ண்டி இப்போது தத்தனேரிப்பாலம் அருகில் வந்துவிட்டது. எதிரில் கூட்டமாக மக்கள். இறந்தவர் உடலை தத்தநேரிக்கு எடுத்துச் செல்லும் ஊர்வலம்.. கண்ணன் வண்டியின் வேகத்தைக் குறைக்க வேண்டியதாயிற்று. சைரனை அலற விட்டான். பாதிப்பேர் ஒதுங்கி வழிவிட்டாலும் மேளதாளங்களுடன் ஆடிக் கொண்டு வந்த இளைஞர் கூட்டம் 108 ஐக்கண்டு வழிவிடுவதாய் இல்லை..

பின்பக்கம் திரும்பிப் பார்த்த முத்துச்சாமியின் முகம் கலவரமடைந்திருந்தது. பெரியவர் மனைவி, மகள் இருவரின் கைகளையும் இருக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தார். வண்டி வேகமாகச் செல்வதாலும் சைரன் இடைவிடாமல் ஒலித்ததாலும் அது புது அனுபவமாக இருந்ததால் ஒருவித கலவரமான மனநிலையில் இருந்த அவர்கள் வண்டி ஊவலத்தால் நின்றதையும் பிணஊவலத்தையும் கண்டு அழத் தொடங்கிவிட்டார்கள். முத்துச்சாமியும் வண்டியை விட்டு இறங்கி பின்புறமாக வந்து வண்டியில் ஏறிக்கொண்டார்.அதற்குள் ஊர்வலம் வழிவிட்டிருந்தது. பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் வழிவிட வண்டி சீறிக் கொண்டு கிளம்பியது.

Representational Image
Representational Image
Pixabay

பெரியவரின் நாடித்துடிப்பை ஆராய்ந்த முத்துசாமிக்கு சற்று நிம்மதியாய் இருந்தது.

"நல்ல வேளை பல்ஸ் நல்லா இருக்கு ...பதறாம இருங்க ஒண்ணும் ஆகாது.. " என்றவர் "கண்ணா சீக்கிரமாப் போப்பா.. ஒவ்வொரு நிமிசமும் முக்கியம்.."

என்றபோது வண்டி கோரிப்பாளையும் சிக்னல் அருகில் வந்திருந்தது. சிக்னலைத் தாண்டி அண்ணா நிலையத்தை நெருங்கியபோது ஒரு பைக்கில் வந்த நபர் வண்டியை நெருங்கி வந்து சில நொடிகளில் மோதும் நிலைக்கு வந்து விட, கண்ணன் லாவகமாகத் திருப்பியபோது, பைக் நபர் தப்பிவிட்டான். ஆனால் வேன் இன்சின் அணைந்துபோனது..வண்டி வேகம் இழந்து விட்டது.சைரன் ஒலியும் நின்றுவிட்டது..திணறிவிட்டான் கண்ணன். உள்ளே இருந்தவர்கள் பெருங்குரலில் கத்திவிட்டார்கள்..

என்ன முயன்றும் இஞ்சின் இயங்க மறுத்துவிட்டது.. அவனுக்கு வயிற்றுக்குள் ஏதோ அடைத்துக் கொண்டது.. வேர்த்துக் கொட்டியது. நெஞ்சுக்குள் சுரீர் என்ற வலி வேறு வந்து கண்ணை இருட்டியது.. கண் முன்னால் ஏதேதோ எண்ணங்கள் எழுந்து அடங்கியது. கைகள் மட்டும் வண்டியின் கண்ட்ரோலை இழந்து விடாமல் எதிர்வரும் வாகனங்களில் மோதிவிடாமல் இயக்கியது.. இரண்டொரு நிமிடங்களில் சரியாகி இயல்புநிலைக்கு வந்து விட்டான்.

முத்துச்சாமி கத்தத் தொங்கிவிட்டார்.

"என்னப்பா இப்படிப் பண்ணிட்ட..வண்டிய நிப்பாட்டிட்டியே.."

`இதோ, கிளம்பிட்டேன்..!' - திக் திக் சிறுகதை #MyVikatan

"இல்ல சார் திடீர்னு இஞ்சின் ஆப்பாயிடுச்சி.சார்..இதோ கிளம்பிரலாம்."

"இதெல்லாம் முன்னாடியே பாத்து வைக்க மாட்டியா."

இதுபோன்ற நேரங்களில் முத்துச்சாமி டென்சன் ஆகிவிடுவார்.. ஏதாவது பதில் சொன்னால் கோபத்தின் உச்சிக்கே செல்வார்.

தன்னை நிதானப்படுத்திக்கொண்டு வண்டியை இயக்குவதில் முனைந்தான். தாகம் அதிகப்பட்டிருந்தது.

"உனக்குப் புரியலையா.. சீக்கிரம் போயிட்டா ஒரு உயிரைக் காப்பாத்த முடியுமில்ல.. அஞ்சு நிமிசம் பத்து நிமிச லேட்டுனால எத்தனை பேர் உசிரு போயிருக்குன்னு உனக்குத் தெரியாதா..." கத்திக்கொண்டிருந்தார்.

நல்ல வேளை வண்டி ஸ்டார்ட் ஆகி மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியது..ஆனால் தாமதமாகி விட்டிருந்தது.எதுவும் உத்திரவாதமில்லாத நிலை நெருங்கிக் கொண்டிருந்தது.

'உண்மைதானே... ஒவ்வொரு நிமிசமும் முக்கியம்தான். ஒரு கா மணிக்கு முன்னால அப்பாவைக் கொண்டுபோய் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தா அவரு பொழைச்சிருப்பாரு.. அம்மாவையும் இரண்டு தங்கச்சிங்களையும் காப்பாத்துர பொறுப்பும் வந்திருக்காது..படிப்பையும் பாதில விட்டிருக்க வேண்டாம். மனதிற்குள் அப்பா உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லமுடியாமல் இறந்து போனதை எண்ணிப் பெருமூச்சு விட்டான்.

" கண்ணா பாத்துப் போப்பா டென்சன் ஆகாத .. பக்கத்தில வந்திட்டம். பதறாம ஓட்டு..மாட்டுத் தாவணியில டிராபிக் மோசம் .. பாத்துப்பா என்றார்."

அவனுக்கு தாகம் அதிகப்பட்டிருந்தது. பதற்றமும் டென்சனும் எப்போதும் வந்ததில்ல.. இப்ப என்னாச்சு.. காரணம் புரியவில்லை.. ஆனால் அப்பாவைப் போல் இருக்கும் இந்தப் பெரியவரைக் காப்பாற்றிவிட வேண்டும் என்ற பதைப்பு மட்டும் இருந்தது.

Representational Image
Representational Image
Francisco Gonzalez on Unsplash

ஆஸ்பத்திரியில் நிறுத்தும்போது பெரியவருக்கு நல்ல நினைவு இருந்தது. உடனடியாக சிகிச்சை வழங்கப்பட்டது. பெரியவர் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டார். பிழைத்துக்கொள்வார் என்று தெரிந்துகொண்ட பின் தான் நிம்மதியாய் இருந்தது. கேட்டில் இருந்த செக்யூரிட்டி சப்தமிட்டதால் உள்ளே செல்ல முயன்றவன் வண்டியை எடுத்து வெளியே நிறுத்திவிட்டு எமர்ஜென்சிக்குள் ஓடினான். பெரியவர் பிழைத்துவிட்டார். இனி திரும்பலாம் என்று முடிவெடுத்து, ரிசப்சனில் பேஷன்ட் விவரங்களைப் பதிவு செய்து கொண்டிருந்த முத்துச்சாமியை அழைக்கச் சென்றபோது, மீண்டும் நெஞ்சில் பந்து போல் அடைத்துக்கொண்டு கண்கள் இருட்டிக் கொண்டுவந்தது. பேச்சுக் குழறிப் போய் மயக்கமாகி சுருண்டு விழுந்தான்.

மீண்டும் கண் விழித்தபோது சுற்றிலும் டாக்டரும் நர்சுகளும் நின்றிருந்தார்கள்.

"வெறும் பசி மயக்கம்தான். அதோட bpயும் சேர்ந்திருச்சு... இது அட்டாக்ல விட்டுரும்..பாத்துக்கங்க"என்றார் டாக்டர்.

"நல்ல வேளை ஹார்ட் அட்டாக்னு பயந்திட்டோம். முதல்ல போய்ச் சாப்பிட்டு வா..."

'மாரடைப்பால்தானே அப்பா போனாரு... நானும் போயிட்டா, குடும்பத்தை யார் பாக்குறது... சீக்கிரமா வேற வேலைக்குப் போயிரணும்' என்று எண்ணியபடி கேன்டீனில் சாப்பிட்டுக் கை கழுவிக்கொண்டு இருந்தபோது, அடுத்த அழைப்பு வந்தது. ரிங் ரோட்டில் ஆக்ஸிடென்ட்.

"இதோ கிளம்பிட்டேன்... 5 நிமிடத்தில் வந்துருவேன்."

சைரனை அலற விட்டபடி வண்டியைக் கிளப்பியபோது நிர்வாகியின் வார்த்தைகள் மனதுக்குள் ஓடின.

'உயிரக் காப்பாத்துறது டாக்டர் கையில மட்டும் இல்ல... நம்ம கையிலயும்கூட இருக்கு...'

- கமலநாபன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு