Published:Updated:

`பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்!' - மைக்ரோ கதை #MyVikatan

Representational image
Representational image

``அம்மா இன்னும் மூணு மாசம்தான்மா. இன்னைக்கு லாஸ்ட் எக்ஸாம். அடுத்த மாசம் ரிசல்ட் வந்ததும், இன்னொரு மாசத்துல எனக்கும் வேலை கெடச்சுடும். அப்புறம் எல்லாரும் ஒன்னா இருக்கலாம்...“ என்றாள்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மணி இரவு 1.00

``டக் டக்...” என்று கதவைத் தட்டினார் சீதா.

``பானு” என்று மெல்லிய குரலில் அழைத்தார்.

``வரேன் மா” என்று கதவைத் திறந்தாள் பானு ஒடி வந்து.

``நிலா முழிச்சுட்டாளா?” என்று கேட்டாள்.

``ஆமாம்மா… பால் கொடுத்துட்டு கொடு, தூங்கிடுவா” என்று பானுவின் எட்டு மாதம் ஆன குழந்தையைக் கொடுத்தார்.

அழுது கொண்டிருந்த குழந்தையை வாங்கிக் கொண்டு தன் அறைக்குள் சென்றாள் தாய்ப்பால் கொடுக்க.

அரைமணி நேரம் கழித்து, டீ ஃப்ளாஸ்குடன் வந்தார் சீதா.

தாய்ப்பால் கொடுத்த வண்ணம் பானுவும் உறங்கியிருந்தாள், குழந்தையும் உறங்கிக் கொண்டிருந்தது.

மெல்ல நிலாவை எடுத்து தன் அறைக்குச் சென்று தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு, பானுவின் அறைக்கு வந்த சீதா,

``பானு….” என்று மெதுவாக எழுப்பினார்.

திடுக்கென முழித்த பானு,

``ரொம்ப நேரம் தூக்கிட்டேனா மா?“ என்று கேட்டாள்.

``இல்ல இல்லமா. கொஞ்ச நேரம் தான். டீ குடிச்சுட்டு படி. கடைசி பரீட்சைதான நாளைக்கு? இத முடிச்சிட்டா எம்.பி.ஏ பட்டதாரி ஆயுடுவ” என்றார் புன்னகையோடு.

``ஆமாம்மா, தேங்க்யூ சோ மச் ஃபார் த சூப்பர் டீ “ என்றாள் பானு.

``யு ஆர் சோ மச் வெல்கம்” என்று கூறி சிரித்து பானுவின் கன்னத்தில் தட்டிவிட்டு அறையை விட்டுச் சென்றார்.

விடிந்தது.

சீதா எழுந்து தன் பேரக் குழந்தையை தொட்டிலில் எட்டிப் பார்த்தார்.

சத்தம் ஏதும் இல்லாமல் தன் கோழிக் குண்டு கண்களை உருட்டி பொக்கை வாயைப் பிளந்து சிரித்தது.

``அடி ராஸ்கோலு. முழிச்சுட்டு அமைதியா படுத்திருக்கியா?” என்று செல்லமாகக் கேட்டார்.

``உன் பேத்தியாச்சே!!” என்று கூறிக் கொண்டு வந்தார் சீதாவின் கணவர் வெங்கட்.

``ம் நம்ம பேத்தின்னு சொல்லுங்க “ என்று தோளில் கிள்ளினார்.

``ஆ… ஆமாம்மா நம்ம பேத்திதான்” என்று தோளைத் தேய்த்துக் கொண்டு,

``நீ போய் டிபன் ரெடி பண்ணு சீதா... நான் நிலாவப் பாத்துக்குறேன்” என்று கூறி சீதாவை அனுப்பி வைத்தார்.

வாசல் தெளித்துக் கோலம் போட்டுவிட்டு, டிபன் ரெடி செய்ய சமையலறைக்குச் சென்றார். இட்லி சட்னியையும், குழந்தைக்கு சத்து மாவையும் ரெடி செய்தார்.

Representational Image
Representational Image
Pixabay

பானு குளித்து தயாராகி, நிலாவைக் காணச் சென்றாள். வெங்கட், நிலாவோடு விளையாடிக் கொண்டிருந்தார்.

``குட் மார்னிங் அப்பா. என்ன பேத்தி தூங்கவிடலையா உங்கள? “ என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.

``அதெல்லாம் இல்லம்மா. சமத்து குழந்தை என் பேத்தி. நீ பரீட்சைக்கு தயாராம்மா?” என்று கேட்டார்.

``ம்... நல்லா படிச்சிருக்கேன் பா” என்றாள்.

``சரிம்மா... நீ நிலாவக் குளிப்பாட்டு. நான் போய் ரெடியாகி வரேன் “ என்றார்.

பானு நிலாவைக் குளிப்பாட்டி பவுடர் போட்டு உடைமாற்றி எடுத்து வந்தாள்.

``நிலாக்குட்டி... ரெடியா” என்று கூறி நிலாவை பானுவிடம் இருந்து வாங்கிய சீதா, ``நீ போயி சாப்பிடுமா” என்றார்

டைனிங் டேபிளில் வெங்கட் காத்திருந்தார் .

பானுவும் வெங்கட்டும் காலை உணவை உண்ண ஆரம்பித்தனர்.

சீதா நிலாவை டைனிப் டேபிளின் மேல் அமர்த்தி சத்துமாவை ஊட்டிக் கொண்டிருந்தார்.

``தம்பி போன் பண்ணுச்சாம்மா?” என்று வெங்கட் கேட்டார்.

தன் கணவரைப் பற்றித்தான் கேட்கிறார் என்பதை உணர்ந்த பானு,

``நேத்து சாயந்தரம் பண்ணாங்கப்பா. இப்போ துபாய்ல அதிகம் வெயில்னு சொன்னாங்க, மத்தபடி நல்லா இருக்கறதா சொன்னாங்க” என்றாள்.

சீதாவின் முகம் சற்று வாடுவதைக் கண்டாள். திருமணமாகி பானுவும் அவளது கணவரும் தனித்தனியாக இருப்பது கொஞ்சம்கூட பிடிக்கவில்லை சீதாவிற்கு.

``அம்மா இன்னும் மூணு மாசம்தான்மா. இன்னைக்கு லாஸ்ட் எக்ஸாம். அடுத்த மாசம் ரிசல்ட் வந்ததும், இன்னொரு மாசத்துல எனக்கும் வேலை கிடைச்சுடும். அப்புறம் எல்லாரும் ஒண்ணா இருக்கலாம்“ என்றாள்.

``சரிம்மா” என்று புன்னகைத்தார்.

சீதா சிரிப்பதைப் பார்த்து கை இரண்டையும் தட்டி நிலா சிரித்தாள்.

``சிரிக்கும்போது உங்கள மாதிரியே இருக்காம்மா" என்றாள் பானு.

``ஹ ஹ ஹ“ என்று மீண்டும் சிரித்தார் சீதா.

``சரி சரி... வாம்மா டைம் ஆயிடுச்சு “ என்று கூறி தன் காரை ஸ்டார்ட் செய்யச் சென்றார் வெங்கட்.

சீதாவுக்கும் நிலாவுக்கும் டாடா சொல்லிவிட்டு கிளம்பினாள் பானு.

கல்லூரியில் இறக்கிவிட்டு, `ஆல் த பெஸ்ட்' என்றார் வெங்கட்.

``தாங்க்ஸ் பா...“ என்று பரீட்சை அறையை நோக்கிச் சென்றாள் பானு.

பானுவை அனுப்பிவிட்டு வீட்டிற்குள்ளே செல்லத் திரும்பியபோது பக்கத்து வீட்டு மீனாட்சியின் குரலைக் கேட்டு நின்றார் சீதா.

``எப்படி இருக்கீங்க சீதா?” என்று நலம் விசாரித்தார் மீனாட்சி.

``நல்லா இருக்கேன். இப்பதான் பானு கெளம்புனா. இன்னைக்குக் கடைசி பரீட்சை அவளுக்கு” என்றார் சீதா.

``ரொம்ப சப்போர்டிவ்வா இருக்கீங்க சீதா, பானுவுக்கு” என்றார் மீனாட்சி.

``விமன் ஷூட் சப்போர்ட் விமன்” என்று கூறி சிரித்தார் சீதா.

``ம் ம். அதுவும் சரிதான். நடக்கட்டும் நடக்கட்டும் “என்று கூறி இருவரும் சிறிது நேரம் உரையாடி விட்டு அவரவர் வீட்டிற்குச் சென்றனர்.

Representational Image
Representational Image

இரண்டு மாதங்கள் கழிந்தன.....

கல்லூரி பட்டமளிப்பு விழா….

பளபளக்கும் பட்டுச் சேலை உடுத்தி சீதாவும், வேட்டி சட்டையோடு வெங்கட்டும், கோட்டு சூட் அணிந்து பானுவின் கணவரும் அமர்ந்திருந்தனர்.

ஒருவர் ஒருவராக அழைத்து பட்டங்கள் சூட்டிக் கொண்டிருந்தனர்

பானுவை அழைக்கும்பொழுது சீதா எழுந்து நின்று கை தட்டினார்.

அருகில் இருந்த ஒரு பெண்மணி,

``உங்க பொண்ணா?!!” என்று கேட்டார்.

``என் வீட்டுப் பொண்ணுதான்மா. என் மருமகள்” என்று கூறி சந்தோஷப்பட்டார்.

``ஆ!“ என்று அதிர்ச்சியுடன் அதிசயமாகப் பார்த்தார் அந்தப் பெண்மணி ..

``மாநிலத்தின் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்ற ஷாஹிரா பானுவிற்கு தங்கப் பதக்கத்தை அணிவிக்கிறேன்” என்று கூறி மாவட்ட ஆட்சியர் பானுவிற்கு பதக்கத்தையும் பட்டத்தையும் அளித்தார்.

பானுவின் முழு பெயரைக் கேட்டவுடன் சீதாவின் அருகில் இருந்த பெண்மணி மீண்டும் வாய் பிளந்து பார்த்தார்.

அந்த வியப்பிற்கு பானுவின் கணவர் தம்பிதுரை பதில் கூறினார்,

``ம்ம்… லவ் மேரேஜ்” என்று.

மகிழ்ச்சியோடு பட்டத்தை வாங்கிக் கொண்டு, தன் மாமியாரின் முன் வந்து நின்று பதக்கத்தை சீதாவிடமும், பட்டத்தை வெங்கட்டிடமும் கொடுத்தாள் பானு.

நிலாவைத் தூக்கிக் கொண்டு ``கங்கிராஜுலேஷன்ஸ்...” என்று பானுவை அணைத்துக்கொண்டார் தம்பிதுரை.

சீதா பதக்கத்தைக் கழட்டி நிலாவிற்கு அணிவித்து,

``நிலாக் குட்டி, நீயும் உன் அம்மா மாதரி பட்டங்கள் ஆளணும்” என்று வாழ்த்தினார்.

- மலர்விழி மணியம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு