Published:Updated:

மாநகராட்சி கணக்கெடுப்பு ஊழியர்கள் அணிந்துள்ள கவச உடை இப்படியா? - மருத்துவர் பகிரும் வேதனை #MyVikatan

கணக்கெடுப்புப் பணி
கணக்கெடுப்புப் பணி

சென்னை மாநகராட்சி கணக்கெடுப்பு ஊழியர்கள் அணிந்துள்ள கவச உடை புகைப்படம் வெளியாகி இருந்தது....

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இன்று (8.4.2020) ஆங்கில நாளிதழ் ஒன்றில் கொரோனா நோய்த்தடுப்பு குறித்து பணியமர்த்தப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி கணக்கெடுப்பு ஊழியர்கள் அணிந்துள்ள கவச உடை புகைப்படம் வெளியாகி இருந்தது.

அதைக் கண்டவுடன் எனக்கு அதிர்ச்சி. ஏனெனில், அந்தப் புகைப்படத்தில் கண்களின் பாதுகாப்புக்கு உரிய கண்ணாடிகளை அவர்கள் அணியவில்லை.

மேலும் நிபுணர்கள் இருவர் (Dr.ராமசுப்ரமணியன், Dr.குகானந்தம்) 3 அடி தொலைவு தூரத்தைக் கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்திருப்பதின் மூலம் நிச்சயம் நோய் தொற்றாமல் பாதுகாக்கலாம் எனக் கருத்து கூறியிருப்பது என்னை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

Representational Image
Representational Image

உலக சுகாதார அமைப்பு, அமெரிக்க MIT நிறுவன ஆய்வுப்படி பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இருமும்போதோ, தும்மும்போதோ கிருமி 6 - 27 அடி வரை செல்லும் என்பதே அறிவியல் உண்மை.

மேலும் Lancet மருத்துவ இதழ் ஆய்வுப்படி கொரோனா வைரஸ், கண்களை உரிய வகையில் பாதுகாக்கவில்லை எனில் அதில் தும்மும்போதோ/இருமும்போதோ பட்டு பரவும் வாய்ப்பை தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆக சென்னை மாநகராட்சி கணக்கெடுப்பு பணியாளர்கள் உரிய முறையில் கண்களைப் பாதுகாக்கவில்லையெனில் கண் மூலம் கிருமித்தொற்று ஏற்பட்டு பாதிப்படைய அதிக வாய்ப்புள்ளது.

ஆக அவர்களுக்கு கண்களைப் பாதுகாக்கும் கண்ணாடிகளை வழங்கக் கோரி நான் சென்னை கார்ப்பரேஷன் கமிஷனருக்கு மின்னஞ்சல் அனுப்பியும். தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தும் எந்தப் பதிலும் இல்லை.

கணக்கெடுப்பு பணி தற்சமயம் நடந்துகொண்டிருக்கும் வேளையில், உடனடியாக இதைச் செயல்படுத்தவில்லை எனில் அவர்கள் பாதிப்படைவதிலிருந்து எப்படிக் காப்பது?

Representational Image
Representational Image

இதே போன்று கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்கும் காவலர்களும் கண்களைப் பாதுகாக்கும் கண்ணாடிகளை அணியாமல் இருந்ததால், அவர்களை நோயிலிருந்து காக்கவும், அவர்களிடமிருந்து பிறருக்கு நோய்த் தொற்றாமல் இருக்கவும் உரிய பாதுகாப்பு கண்ணாடிகளை வழங்க DGP அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியும், தொலைபேசி வழியாகத் தெரிவித்தும் 10 நாள்களுக்கு மேலாக எனக்கு எந்தப் பதிலும் இல்லை.

மேற்கூறப்பட்ட நோய்த்தடுப்பு நிபுணர்களே கண்களை உரிய முறையில் பாதுகாக்க சொல்லாமல் விட்டது அறிவியல் கருத்துக்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க தவறி விட்டனரோ என்ற சந்தேகம் எழுகிறது.

உரிய நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க அரசும் /அதிகாரிகளும் முன் வர வேண்டும்.

நோய்த்தடுப்பில் அறிவியல் நம்மை வழிநடத்தட்டும்.

- மருத்துவர் வீ.புகழேந்தி.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு