Published:Updated:

சாதனையாளர்களுக்கு மரியாதை செலுத்திய `சல்யூட் டூ லெஜண்ட்ஸ்' நிகழ்ச்சி!

பாடகர். எஸ்.பி.பாலசுப்ரமணியம், நடனக் கலைஞர் பத்மா சுப்ரமணியன், நடிகர். காத்தாடி ராமமூர்த்தி, எழுத்தாளர். சிவசங்கரி, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜூ, தொழிலதிபர் நல்லி குப்புசாமி உட்பட 21 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

Salute to legends
Salute to legends

'ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்' நிறுவனம் இசை, நடனம், பேச்சு, சட்டம், இலக்கியம், பத்திரிகை என பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்காற்றி முன்னுதாரணமாகத் திகழ்பவர்களுக்கு `சல்யூட் டூ லெஜண்ட்ஸ்' விருதுகளை வழங்கி சிறப்பித்தது. மயிலாப்பூர், ஏ.வி.எம் ராஜேஷ்வரி திருமண மண்டபத்தில் இவ்விருது விழா நடைபெற்றது.

Salute to legends
Salute to legends

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், நடனக் கலைஞர் பத்மா சுப்ரமணியன், நடிகர் காத்தாடி ராமமூர்த்தி, எழுத்தாளர் சிவசங்கரி, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜூ, தொழிலதிபர் நல்லி குப்புசாமி உட்பட 21 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. விழாவில் ஏ.வி.எம் சரவணன், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் பெரிய கருப்பையா, ராஜேஷ்வரன், ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தனர். பாடகி சைந்தவி பிரகாஷ் விழாவில் கலந்துகொண்டு பாடல்களை பாடினார். சைந்தவியின் பாடல்களை கேட்டு எஸ்.பி.பி உணர்ச்சிவசப்பட்டு பேசியது விழாவில் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. தொடர்ந்து எஸ்.பி.பியும்பாடி விழாவில் கலந்துகொண்டவர்களை உற்சாகப்படுத்தினார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஏ.வி.எம். சரவணன், ``சாதனை படைத்தவர்களை, உழைப்பால் உயரந்தவர்களை சான்றோர் முன்னிலையில் எங்கள் மூலமாக கௌரவிப்பது எங்களை நாங்களே கௌரவித்துக்கொள்வதாக அர்த்தம். சரித்திரம் படைத்தவர்களை திறம்பட தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

Salute to legends
Salute to legends

அவர்களோடு நாம் இருப்பது பெருமைப்பட வேண்டிய விஷயம். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முரளி மற்றும் அவரது குடும்பத்திற்கு வாழ்த்துகள்" என்றார்.