Published:Updated:

`வணக்கம்' சரியா தவறா? - வாசகர் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image

காலை வணக்கம், மதிய வணக்கம், மாலை வணக்கம் என்று கூறுவது சரியானதா?

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இறைவனை மட்டுமே வணங்குதலும், மனிதர்களை வாழ்த்துதலுமே தமிழர் மரபு. சேர மன்னன் குடும்பத்துடன் கானகம் சென்ற போது 'வாழ்க எம்கோ' என மக்கள் வாழ்த்தினர். அவ்வாறே 'வாழ்க நீ எம்மான்' என அரசர்களைப் புலவர்கள் வாழ்த்துதலே தமிழர் பண்பாடாக இருந்து வந்துள்ளது.

சம்ஸ்கிருத மொழிக்கலப்பால் பிற்காலத்தில் வணக்கம் மனிதர்களுக்கும் வழங்கப்பட ஆரம்பித்தது.

Representational Image
Representational Image

சம்ஸ்கிருதத்தில் அவர்கள் `நமஸ்காரம்' என்று கூறியதை நாம் வணக்கம் எனத் தவறாக மொழிமாற்றம் செய்து, மனிதர்களையும் வணங்க ஆரம்பித்தோம். மனித வணக்கம் என்பது தமிழர் பண்பாடாக இல்லாவிடினும், தற்போது இலக்கணப்படி வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆயினும் காலை வணக்கம், மதிய வணக்கம், மாலை வணக்கம் என்று கூறுவது சரியானதா?

இவை ஆங்கிலத்தினைச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மொழிபெயர்க்காமல், அப்படியே மொழிபெயர்ப்பதினால் ஏற்பட்ட தவறான சொல் வழக்குகள். இது போன்றே பல மொழிபெயர்ப்புகள் பொருந்தாமலே இருக்கும். உதாரணமாக ஆற்று நீரில் என்ற சொற்றொடரில் நீர் என்னும் சொல்லே தேவையற்றது. ஆறு என்றாலே நீர்தான்.

Representational Image
Representational Image

மலையின் மேல் என்பதில் மலை என்றாலே மேல்தான். மலையில் என்பதே சரியானது!

Water Falls என்பதை அப்படியே மொழிபெயர்த்து நீர்வீழ்ச்சி என்கிறோம். நீருக்கு ஏது வீழ்ச்சி? அருவி எனும் சொல்லே ஏற்புடையது.

King Cobra என்பதை வார்த்தை மாறாமல் பெயர்த்து ராஜநாகம் என்கிறோம். கருநாகம் எனும் சொல்லே தமிழுக்கு ஏற்றது.

இதையெல்லாம் விடப் பெரிய ஆச்சர்யம் என்னவெனில் டீசல் என்பதைக் கல்நெய் என மொழிபெயர்ப்பது.

டீசலைக் கண்டறிந்த ரூடால்ப் டீசலின் பெயரே அதற்கு வைக்கப்பட்டது. கண்டுபிடிப்புகளை அந்தந்த மொழிபெயர்களுடன் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? அல்லது அவற்றின் பெயர்களை தமிழில் உருவாக்கலாமா? என்பது பெறும் விவாதத்திற்கு உரியது.

Representational Image
Representational Image

கண்டறிந்தோர் இட்ட பெயரை ஏற்பதே அந்தக் கண்டுபிடிப்பிற்கு நாம் செய்யும் மரியாதை என ஒரு தரப்பினரும் அவற்றிற்குத் தமிழில் பெயரிட்டால் தமிழின் சொற்களஞ்சியம் மேலும் பெருகும் என ஒரு தரப்பினரும் கூறுகின்றனர். எது சரி என்பது உங்கள் சிந்தனைக்கு!

நாம் வணக்கத்திற்கு வருவோம். Good morning என்பது உனக்கு நல்ல காலைப் பொழுது அமையட்டும் என விருப்பம் (Wish) தெரிவித்தல். தமிழில் வணக்கம் என்பது வணங்குதல். இரண்டும் வேறுவேறு பொருள் தரக்கூடியன.

ஆனால், வணங்கும் போது நாம் விரும்புதல் பொருள் தரும் மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தி, காலை வணக்கம், மதிய வணக்கம், மாலை வணக்கம் என்று கூறி வருகிறோம்.

ஆங்கிலத்தில் கூறும்போது விரும்புதல் பொருளில் Good morning, Good afternoon, Good night என்று கூறலாம்.

Representational Image
Representational Image

ஆனால் தமிழில் கூறும்போது, சிறு பொழுதுகளை இணைத்து வணங்குதல் இலக்கண வழக்கப்படி பிழை என்பதால், வணங்குதல் பொருளில் வணக்கம் என்று மட்டுமே கூற வேண்டும்.

காலை வணக்கம், மதிய வணக்கம், மாலை வணக்கம் எனக் கூறுவதனைத் தவிர்த்தல், தமிழ் இலக்கண வழக்கப்படி சரியானதாகும்.

- அகன்சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு