Published:Updated:

விஐபி-க்கள் பாவம் பாஸ்..! - அனுபவ பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

இந்த மூன்று கேள்விகளில் எதோ ஒரு கேள்விக்கு சரியான பதிலை சொல்ல முடியாமல் திக்கித் திணறியவர்களாக தான் நாம் இருக்கிறோம். எல்லாமே மனதை சங்கடப்படுத்தும் கேள்விகள் தான்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

"வேலையில்லா பட்டதாரி" என்றதும் நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் தான். அந்தப் படத்தைப் போலவே சர்வர் சுந்தரம், வறுமையின் நிறம் சிவப்பு, சத்யா, தானா சேர்ந்த கூட்டம், இன்று நேற்று நாளை, ஜீவா போன்ற படங்களிலும் வேலையில்லா பட்டதாரிகளின் வலியை சொன்ன படங்கள் சில இருக்கின்றன.

இந்தப் படங்களில் எல்லாம் வேலையில்லா பட்டதாரிகள் படும் வேதனைகளை மிக உண்மையாக பதிவு செய்திருப்பார்கள். மனித வாழ்க்கையில் மூன்று கேள்விகள் முக்கியமானவை.

1. படிப்பு முடிஞ்சுருச்சா... வேலை கிடைச்சிருச்சா...

2. கல்யாணம் ஆயிடுச்சா...

3. கொழந்த பொறந்துடுச்சா...

இந்த மூன்று கேள்விகளில் எதோ ஒரு கேள்விக்கு சரியான பதிலை சொல்ல முடியாமல் திக்கித் திணறியவர்களாக தான் நாம் இருக்கிறோம். எல்லாமே மனதை சங்கடப்படுத்தும் கேள்விகள் தான். இருந்தாலும் அந்த கேள்விகள் கண்டிப்பாக கேட்கப்பட வேண்டியவை. இப்போது வேலையில்லா பட்டதாரிகளின் வேதனைகளை சொல்கிறேன்.

Representational Image
Representational Image

1. வேலையில்லா பட்டதாரியாக இருக்கும் காலத்தில் நம்மைவிட அதிகம் பாதிக்கப்படுபவர்கள் நம் பெற்றோர்கள் தான். "என்னமோ உன் பையன் டாக்டர் ஆவான், இன்ஜினியர் ஆவான்னு பெரும பீத்துன... இப்ப வாட்ச்மேன் கூட ஆக முடியாம வீட்ல உக்காந்துருக்கானா... சரியா போச்சு போ..." என்று வேண்டுமென்றே அம்மா அப்பாவின் மனதை புண்படுத்தும்படி பேசுவார்கள்.

கேம்பஸ் இன்டர்வியூல கோட்டை உட்டுட்டானா உன் பையன் என்பார்கள். அடுத்தவர்களை அவமானப்படுத்துவது என்றால் ஏனோ இந்த மனித சமூகத்துக்கு அவ்வளவு இனிப்பாக இருக்கிறது.

2. நம்ம பையனோ 10th, 12th, degree மூன்றிலும் 80% வாங்கி இருப்பான். ஆனால் வேலை இல்லை என்ற ஒரே காரணத்திற்காக எதோ எதற்குமே உருப்படாதவனை பார்ப்பது போல் பார்ப்பார்கள்.

3. திங்கறதுல கரெக்ட்டா இரு என்பார்கள். நீ திங்கறதுக்கு தான் லாய்க்கு என்று மூஞ்சி முன்பே சொல்லி அசிங்கப்படுத்துவார்கள். அவற்றை எல்லாம் கேட்டு கோபமடைந்தால் "யாருக்கிட்ட பேசறனு பார்த்து பேசு..." என்று அதிகாரம் செய்வார்கள்.

4. கை செலவுக்கு காசு இல்லாமல் அப்பாவிடம் காசு கேட்க கூச்சப்பட்டு நண்பர்களிடம் கடன் வாங்க துவங்கி அந்த தொகை பெரிய அளவில் தேங்கி நிற்கும். நண்பர்களிடமும் தொடர்ந்து கடன் வாங்கிக் கொண்டே இருக்க முடியாது. ஒரு கட்டத்தில் அவர்களும் ரிப்ளை பண்ணமாட்டார்கள்.

5. அம்மாவிடமும் பணம் கேட்க முடியாது. ஆரம்ப காலகட்டத்தில் கடுகு டப்பாவிலும் மிளகு டப்பாவிலும் ஒளித்து/சேகரித்து வைத்திருக்கும் தொகையை தருபவர்கள் மிக சில காலங்களில் வெறுத்துப் போயி, காசு என்ன அச்சடிச்சு கொட்டுதா... நீ கேட்டதும் கொடுக்கறதுக்கு என்று எரிச்சலாக பேச ஆரம்பித்து விடுவார்கள். பெற்ற அம்மாவே நம்மை எதற்கும் லாய்க்கு இல்லாதவன் என்பதுபோல் பார்க்கும்போது தான் நமக்கு வாழ்க்கை மீது அவநம்பிக்கை வருகிறது, இவ்வளவு கேவலமான வாழ்க்கையை வாழனுமா என்றெல்லாம் கூட சில சமயங்களில் தோன்ற வைக்கிறது.

6. "வேலைக்கு கையிலாகல..." என்று சொல்வார்கள். வட்டி கடைக்கு கணக்கு எழுத போறியா என்பதில் தொடங்கி அங்க ஆள் எடுக்கறாங்க போறியா... இங்க ஆள் எடுக்கறாங்க போறியா... என்று எதோ நல்லது சொல்ல வருவது போல் நம்முடைய தகுதியை குறைத்து மதிப்பிட்டு இழிவுபடுத்தி இந்த பையனுக்கு எதுவுமே தெரியல என்பதுபோல் பார்ப்பார்கள். அந்த வீட்டு பையனுக்கு வேல கிடைச்சிருச்சு, இந்த வீட்டு பையனுக்கு வேல கிடைச்சிருச்சு... அதெல்லாம் பொழைக்கிற பசங்க... என்று அசிங்கப்படுத்துவார்கள்.

Representational Image
Representational Image

7. அதேபோல சொந்தக்காரர்களின் விஷேஷங்களுக்கு சந்தோசமான மனநிலையுடன் செல்ல முடியாது... கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்து விடுவார்கள். அதிலும் இஷ்டத்துக்குப் பொய் பேசுபவர்கள், குடிகாரர்கள் எல்லோரும் ஏதோ பெரிதாக சாதித்ததுபோல் "வேலைக்கு ட்ரை பண்றியா...", "நீ இன்னும் வீட்டு வாசலையே தாண்டலியே..." என்பார்கள் இளக்கார தொனியில்.


8. பெயர் சொல்லியோ... தம்பி என்றோ அழைக்காமல் "ஏய்" என்று அடிமையை அழைப்பது போல் அழைப்பார்கள். அவர்களை பொறுத்தவரை பொய்யோ புரட்டோ புறணியோ கதையோ சொல்லி நல்லா சம்பாதிக்கும் பணவெறி பிடித்தவர்கள் தான் புத்திசாலிகள். அதை விட கொடுமையானது நம்மைவிட வயதில் குறைவானவர்கள் நமக்கு அறிவுரை வழங்குவது...


9. "இப்படித்தான் ஒரு பையன் வீட்டிலேயே இருந்து என்ன படித்தோம் என்பதையே மறந்துட்டு கடைசியில பணம் கட்டி தான் வேலை வாங்குனாங்க..." என்று சொல்வதற்கென்றே ஒரு சொந்தக்காரர் நம் எல்லோருக்கும் இருப்பார்கள். நான்லாம் 2000 ரூபா சம்பளத்துக்குப் போனேன்... என்று சுயபுராணம் பாடுவதற்கும் ஒரு சொந்தக்காரர் நம் எல்லோருக்கும் இருப்பார்கள்.


10. இன்னும் நீ அப்பங்காசுல தான் திங்குறியா... நீயெல்லாம் எங்க போயி உருப்பட போற... என்று எந்த உறவும் இல்லாத மூன்றாம் மனிதர்கள் எல்லாம் திட்டி தீர்ப்பார்கள்.

இத்தனை வேதனைகளையும் கடந்து வருவதற்குள் நம்ம வேலையில்லா பட்டதாரிகள் படாத பாடுபடுகிறார்கள்.

-ராசு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு