Published:Updated:

வந்தாச்சு புதிய சவால்; `சொல் வேட்டை'க்கு ரெடியா?

சொல் வேட்டை

தினசரி உங்களுக்காக 8 தமிழ் வார்த்தைகள் `சொல் வேட்டை'யில் இடம்பெறும். அவற்றை கட்டங்களில் தேடிக்கண்டுபிடிப்பதுதான் உங்களுக்கான சவால்.

ஹலோ வாசகர்களே...

விகடனில் செய்திகள், வீடியோக்கள் தாண்டி, சுவாரஸ்யமான கேம்களும் இருப்பது உங்களுக்கு ஏற்கெனவே தெரிஞ்சதுதான். `சொல்லியடி' மற்றும் 'வார்த்தையோடு விளையாடு' ஆகிய இரண்டிற்கும் நீங்க கொடுக்கும் ஆதரவே அதற்கு சாட்சி.

அந்த வரிசையில் தற்போது விகடன் கேம் ரசிகர்களுக்காக மூன்றாவது புது கேமும் வந்தாச்சு.

பெயர், `சொல் வேட்டை'

முந்தைய கேம்களில் எப்படி ஷார்ப்பா உங்களுக்குள்ள இருக்கிற திறமையை வெளிப்படுத்தினீங்களோ... அப்படியேதான் இதிலேயும் செய்யப்போறீங்க..! என்ன... `சொல் வேட்டை'க்குத் தயாராகிட்டீங்களா..?

சொல் வேட்டை
சொல் வேட்டை
விதிமுறைகளையும் இங்கே சொல்லிடுறோம்...

தினசரி உங்களுக்காக 8 தமிழ் வார்த்தைகள் `சொல் வேட்டை'யில் இடம்பெறும். அவற்றை கட்டங்களில் தேடிக்கண்டுபிடிப்பதுதான் உங்களுக்கான சவால்.

சரியான வார்த்தைகளை முழுமையாக Select (தேர்வு) செய்தால், அவை Highlight செய்யப்பட்டு, பின்னர் உங்களுக்கான மதிப்பெண்கள் வழங்கப்படும். இப்படி ஒவ்வொன்றாக கண்டுபிடித்து 8 மதிப்பெண்களையும் பெற்றுவிட்டால், அன்றைக்கு நீங்கள் வின்னர்!

இந்த கேமின் இன்னொரு சுவாரஸ்யம், நீங்கள் ஒவ்வொருமுறை இந்தப் பக்கத்தை Refresh செய்யும்போதும், வார்த்தைகள் இடம் மாறிக்கொண்டேயிருக்கும். எனவே இந்த கேமில் ஸ்பாய்லர்களே இல்லை!

வாழ்த்துகள்... வழக்கம்போல் அடிச்சு ஆடுங்க... வேட்டையில வெல்லுங்க!