என்னதான் நாம் ஐபிஎல், பிக்பாஸ், சீரியல் என பார்த்துக்கொண்டிருந்தாலும் குழந்தைகளின் உலகம் என்பது எப்போதுமே தனியான ஒன்றுதான். பேபி ஷார்க்கையும், கோகோமேலோவையும் கண் கொட்டாமல் மணிக்கணக்காக பார்த்து வருவார்கள். அதிலும் இந்த இணைய சூழலில் அவர்களின் கையில் தினம் ஒரு புதிய சேனல் சிக்கிவிடுகிறது. சேனலை நாம் மாற்றிவிட்டாலோ, அல்லது வைக்காமல் விட்டாலோ கே.ஜி.எஃப் ராக்கி பாய் போல் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிடுகிறார்கள்.
சும்மாவே கதகளி ஆடும் குழந்தைகளுக்கு, ஆண்டு விடுமுறை என்றால் சொல்லவா வேண்டும். இன்னும் உக்கிரத்துடன் டிவி பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். இந்த ஏப்ரலில் தன்னுடைய 5-வது வயதை கடக்கும் Sony Yay சேனல் இந்தியாவில் குழந்தைகளுக்காக ஒளிபரப்பாகும் சேனல்களில் முன்னணியில் இருக்கிறது. இந்த கோடையை இன்னும் குதூகலமாக மாற்ற Sony Yay சேனல் புதிய அறிவிப்போடு வந்திருக்கிறது. இது போக இந்த சேனலை பார்க்கும் குழந்தைகளை நேரில் சந்திக்கவும் ஆயத்தமாகி வருகிறது சோனி.

Oggy and the Cockroaches அப்புறம் Obachhama – Kun இரண்டு நிகழ்ச்சிகளும் குழந்தைகளின் பேவரைட் என்றே சொல்லலாம். இவற்றின் புதிய எபிசோட்கள் இந்த சம்மரில் வரவிருக்கின்றன. அது போக சந்தோஷத்தை இரட்டிப்பாக்க நிகழ்ச்சியில் இருந்து படமாக தயாரிக்கப்பட்ட Taarak Mehta Ka Chhota Chashmah-வும் இன்னொரு புத்தம் புதிய நிகழ்ச்சியான Ha.Go.La-வும் அறிமுகமாக உள்ளன. ஹாகோலா என்பது Hathgola, Goli மற்றும் Latha என்கிற மூன்று நண்பர்களின் கதை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
டிவியைத் தாண்டிய அனுபவம் குழந்தைகளுக்குக் கிடைக்க KidZania என்கிற நிறுவனத்தோடு கைகோர்த்திருக்கிற சோனி மும்பை மற்றும் டெல்லியில் இருக்கும் குழந்தைகளுடன் நேரில் கலந்துரையாட அவர்களின் ஃபேவரைட் ஷோக்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஒரு மாதிரி அமைப்பை உருவாக்கும் திட்டத்தில் இருக்கிறார்கள். 70க்கு மேற்பட்ட நகரங்களில் மால்கள், மெட்ரோக்கள், டிஜிட்டல் பிளாட்பார்ம்கள், 10க்கு மேற்பட்ட கேம்கள் என குழந்தைகளை தேடி அவர்களை குஷிப்படுத்த எல்லா தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ள இருக்கின்றனர் Sony Yay நிறுவனத்தினர்.

"இந்த சம்மரில் தொலைகாட்சியைத் தாண்டிய அனுபவம் தர குழந்தைகளுக்கான ஒற்றை புகலிடமாக Sony Yay சேனல் இருக்கும்" என்கிறார் இதன் வணிக பிரிவு தலைவர் லீலா டுட்டா.