Published:Updated:

நம்ம வாத்தி கற்றுக் கொடுத்த பாடங்கள்.! #HBDVijay #MyVikatan

'மாஸ்டர்' விஜய்
'மாஸ்டர்' விஜய்

இதை எழுதும் நான் சத்தியமாக விஜய் ரசிகர் இல்லை, இருந்தாலும் அருவி படத்தில் கேட்ட கேள்விக்கு நான் சொல்லும் பதில் ...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அருவி படத்தில் "விஜய் நடிச்ச நல்ல படம்" என்றதும் பதில் தெரியாமல் முழிப்பார் ஒரு பெண். அந்த சீன் பெரிய அளவில் சர்ச்சைக்கு உள்ளானது. இதை எழுதும் நான் சத்தியமாக விஜய் ரசிகர் இல்லை, இருந்தாலும் அருவி படத்தில் கேட்ட கேள்விக்கு நான் சொல்லும் பதில்...

விஜய்யும் வடிவேலுவும் சேர்ந்து ரகளை செய்திருந்த "வசீகரா", தங்கச்சி ஸ்கர்ட்டை லுங்கி என நினைத்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்த விஜய்யின் "கில்லி", ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட "துப்பாக்கி", விவசாயிகளின் பிரச்சினையை முதன்முதலாக உரக்க பேசிய "கத்தி", உங்களுக்குப் பிடிச்ச துறைய தேர்ந்தெடுத்து அதுல கடின உழைப்ப போடுங்க என்று சொன்ன "நண்பன்",

மாணவர்களை யாரும் தவறான பாதையில் வழிநடத்தாமல் தடுப்பது ஆசிரியரின் வேலை என்று சொன்ன "மாஸ்டர்" போன்றவை விஜய் நடித்த சிறந்த படங்களாக எனக்குத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட விஜய், நண்பன் படத்தில் "மாணவராக" நடித்து மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் அறிவுரைகள் சொல்லி இருந்தார். "ஆசிரியராக" நடித்து மாஸ்டர் படத்தின் மூலமும் சில நல்ல விஷயங்களை காட்சிகளின் வழியாக நமக்கு உணர்த்துகிறார். அவை என்னவென்று பார்ப்போம்.

'மாஸ்டர்' விஜய்
'மாஸ்டர்' விஜய்

1. வாத்தியாராக பணியாற்றுபவர்களுக்கு குடிப்பழக்கம் இருக்ககூடாது, அப்படியே இருந்தாலும் அதை எப்படியாவது விட்டொழிக்க வேண்டும்.

2. வாத்தியார்கள் மாணவ மாணவிகளின் செல்போன் அழைப்பை எந்த சூழலிலும் இளக்காரப்படுத்தி தவிர்க்க கூடாது. குறிப்பாக நடுஇரவு நேரங்களில் ஒரு மாணவனிடம் இருந்து போன் வருகிறது என்றால் அந்த அழைப்பை கண்டிப்பாக ஏற்க வேண்டும். அதன் மூலம் மாணவ மாணவிகளின் தற்கொலையைத் தடுக்க முடியும்.

3. வாத்தியார்கள் தங்களின் மாணவ மாணவிகளிடம் சாதி, மத பாகுபாடு பார்க்கக் கூடாது. ஒரு சாதியை உயர்த்தியோ தாழ்த்தியோ பேசக் கூடாது. மாணவ மாணவிகளுக்கு இட ஒதுக்கீடு குறித்து தெளிவாக புரிய வைக்க வேண்டும்.

4. பள்ளிக்கும் கல்லூரிக்கும் அருகே உள்ள கடைகளில் அரசாங்க சட்டவிதிகளையும் மீறி புகையிலைப் பொருட்கள் இதர போதை பொருட்கள் விற்றால் அதை வாத்தியார்கள் தட்டிக் கேட்டு மாணவர்களின் நலனை பாதுகாக்க வேண்டும்.

5. தன்னுடைய மாணவன் எந்த சூழலிலும் சீர்திருத்த பள்ளிக்குச் செல்லுமளவுக்கு வன்முறையில் ஈடுபடக் கூடாது என்ற அக்கறையுடன் ஒவ்வொரு வாத்தியாரும் உழைக்க வேண்டும். அப்படி ஒவ்வொரு வாத்தியாரும் தங்கள் மாணவ மாணவிகளின் குடும்ப விவரங்களை அறிந்துக்கொண்டு செயல்பட்டால் நாட்டில் சீர்திருத்த பள்ளி என்பதே இல்லாமல் இருக்கும்.

6. வாத்தியார்கள் மாணவ மாணவிகளிடம் ஜாலியாக பழகுகிறேன் என்ற பெயரில் அவர்களை அடிமைப்படுத்தி அவர்களை எடுபிடி வேலைக்குப் பயன்படுத்தக் கூடாது.

விஜய்
விஜய்

7. மாஸ் என்கிற பெயரில் மாணவர்கள் அறியாமையில் செய்யும் அட்டூழியங்களை (கரண்டுன மண்டை, காதில் ஊக்கு) அடிக்காமல் வார்த்தைகளால் எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டும்.

8. ஒவ்வொரு வாத்தியாரும் ஒரு அண்ணனாக, அப்பாவாக நடந்துகொள்ள வேண்டும். மாணவிகள் உள்பட அனைவரும் தன்னிடம் மனம் விட்டுப் பேசும் அளவுக்கு வாத்திகள் ஈகோ இல்லாமல் இருக்க வேண்டும்.

9. பாலியல் கல்வி என்றால் என்ன? குட் டச் பேட் டச்னா என்ன? என்பதை பற்றி ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு புரிய வைக்க வேண்டும். பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் போல் இல்லாமல் இருக்க வேண்டும்.

10. பாடநூலில் இல்லாத சில விஷியங்களை புதிய தகவல்களை ஆசிரியர்கள் தினம்தினம் கற்றுக்கொண்டு மாணவ மாணவிகளை அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும்.

11. எந்தெந்த சமூக பிரச்சினைகளை எப்படி அணுக வேண்டும் எதற்கு குரல் கொடுக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்து சமுதாய மாற்றத்தை கொண்டு வருபவராக நடந்துகொள்ள வேண்டும்.

12. மொத்தத்தில் வாத்தியார் என்பவர் "தளபதி" ஆகவும் மாணவ மாணவிகள் படைவீரர்களாகவும் இருக்க வேண்டும்.

ஹேப்பி பர்த்டே தளபதி!


-யுவராஜ் மாரிமுத்து

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு