Published:Updated:

திருடப்பட்ட மரடோனாவின் வாட்ச் விலை ரூ.20 லட்சம்; ஏன் தெரியுமா?

Diego Maradona
News
Diego Maradona

தான் அப்போது இருக்கும் இடத்தில் உள்ள நேரமும் தன் சொந்த நாடான அர்ஜென்டினாவின் அப்போதைய நேரமும் ஒருசேர தெரிந்துகொள்ளவே இப்பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார் அவர்.

கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த வீரர்களுள் ஒருவர் மறைந்த டியாகோ மரடோனா. சென்ற வருடம் மாரடைப்பால் உயிரிழந்த பின்பு அவர் உபயோகித்த பொருட்கள் அனைத்தும் துபாயிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஒப்படைக்கப்பட்டு பாதுகாத்துவரப்பட்டது. இந்நிலையில் சுமார் 20 லட்சம் மதிப்புமிக்க மரடோனாவின் ஹூப்ளட் வாட்ச் காணவில்லை எனும் புகார் சமீபத்தில் எழுந்தது.

இதையடுத்து அவ்வாட்சை திருடியவர் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த காப்பாளரான அஸ்ஸாமை சேர்ந்த வாஸிட் ஹுசைன் என்று தெரியவந்துள்ளது. தன் தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா வந்த இவர் தற்போது கைதாகியுள்ளார்.

தன் இரு கைகளிலும் வாட்ச் அணியும் பழக்கமுடையவர் மரடோனா. தான் அப்போது இருக்கும் இடத்தில் உள்ள நேரமும் தன் சொந்த நாடான அர்ஜென்டினாவின் அப்போதைய நேரமும் ஒருசேர தெரிந்துகொள்ளவே இப்பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார் அவர்.

 Maradona Big Bang chronograph
Maradona Big Bang chronograph

Maradona Big Bang chronograph என்ற இந்த லிமிடெட் எடிஷன் வாட்ச் பல்வேறு தனித்தன்மையான அம்சங்களை கொண்டது. 44.5 மி.மீ சுற்றளவு கொண்ட ப்ளாக் செராமிக்கால் ஆன இவ்வாட்சின் டயல் நீலக்கல்லால் (Sapphire crystal) செய்யப்பட்டது. மேலும் மரடோனாவின் ஜெர்சி எண் மற்றும் கையெழுத்தை கொண்ட இந்த வாட்சின் பின்புறத்தில் அவரின் புகைப்படம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுமட்டுமல்லாமல் 55 இரத்தினகற்கள் பதிக்கப்பட்ட இந்த வாட்ச் சுமார் 42 மணி நேரம் வரை பவர் பேக்கப் திறன் கொண்டது. மீட்கப்பட்ட இவ்வாட்ச் தற்போது மீண்டும் துபாயில் முன்பு இருந்த இடத்திற்கே எடுத்துச் செல்லப்படுகிறது.