Published:Updated:

அரசு நடத்தும் மொபைல் டீ ஷாப்! எவ்வளவு விலை? என்ன ஸ்பெஷல்!

டீ வண்டி
News
டீ வண்டி

ஒவ்வொரு வண்டியிலும் குறைந்தபட்சம் ஒரு பழங்குடியினர் பணியமர்த்தப்பட வேண்டும் என்பது இத்திட்டத்தின் முக்கிய நிபந்தனைகளுள் ஒன்றாகும்.

சுமார் 30,000-க்கும் மேற்பட்ட சிறு தேயிலை விவசாயிகள் அங்கம் வகிக்கும், நாட்டின் மிகப்பெரிய தேயிலை கூட்டுறவு இணையம் ‘இன்ட்கோசர்வ்’. இந்த அமைப்பு தமிழக அரசின் உதவியுடன் ‘டீ வண்டி’ எனகிற திட்டத்தை தொடங்கியிருக்கிறது. இதை டிசம்பர் 15-ம் தேதி முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தேநீர்க் கடைகளும் , புட் டிரக் கான்செப்ட்டில் பல ஊர்திகளும் ஏற்கனவே தனியார் பலர் செயல்படுத்திக் கொண்டிருக்க இத்தகைய திட்டத்தை அரசு எடுத்து நடத்தக் காரணம் என்ன? ஐஏஎஸ் சுப்ரியா சாஹோ தலைமையில் தொடங்கப்பட்டிருக்கும் இத்திட்டத்தின் நோக்கம் குறித்தும் , செயல்பாடுகள் குறித்தும் விசாரித்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதுகுறித்து இன்ட்கோசர்வ் தலைமை செயல் அலுவலர் சுப்ரியா சாஹு IAS கூறுகையில் " இன்ட்கோசர்வ் ஒரு அரசு கூட்டுறவு அமைப்பாகும். சிறு தொழில்முனைவோர் மற்றும் தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு இந்த அமைப்பை 1965-ல் தமிழக அரசு தொடங்கியது . இளைஞர்கள் சிற்றுண்டிக்காகவோ அல்லது காபி ,டீ அருந்தவோ ஸ்டார்பக்ஸ் அல்லது கஃபே காபி டே போன்ற இடங்களை நாடுவது இன்றைய நடைமுறை. அந்த தேவையைப் புரிந்து கொண்ட தமிழக அரசு , மலிவான விலையில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்க இந்த டீ வண்டி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது 25 டீ வண்டிகள் பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு வண்டியிலும் குறைந்தபட்சம் ஒரு பழங்குடியினர் பணியமர்த்தப் பட வேண்டும் என்பது இத்திட்டத்தின் முக்கிய நிபந்தனைகளுள் ஒன்றாகும். இந்த திட்டத்தின் நோக்கமே சுமார் 100 டீ வண்டிகளைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்து , அதன் மூலம் பழங்குடியினரின் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவது தான்" என்று கூறினார்.

டீ வண்டி
டீ வண்டி

இன்ட்கோசர்வ் ஆலோசகர் ஸ்ரீராம் பேசுகையில் "ஏழை எளிய மக்களுக்குப் பயன்தரும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்திருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய கூட்டுறவு அமைப்பாகக் கருதப்படும் இன்ட்கோசர்வ் , மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இத்திட்டத்தை முதன்முதலில் செயல்படுத்தியது . முதலில் 5 வண்டிகளைத் தொடங்கி , அதன் வெற்றி விகிதத்தை எடுத்துக்காட்டி தமிழக அரசின் உதவியோடு தற்போது தமிழகம் எங்கும் இத்திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளோம்" என்றார். அடுத்ததாகப் பேசிய காண்ட்ராக்டர் வீரமணி " இத்திட்டத்தின் கீழ் ஐந்து டீ வண்டிகள் என் கட்டுப்பாட்டில் உள்ளன. மலிவு விலையில் தேநீர் மட்டுமின்றி சிற்றுண்டியையும் எளிய மக்கள் வாங்கும் வண்ணம் நியாய விலையில் வழங்குகிறோம் " என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்கு தேநீரின் விலை ரூபாய் 10-க்கு விற்கப்படுகிறது. இதே நேரத்தில் இன்ட்கோசர்வின் டீ தூள் கிலோவிற்கு ரூ 500- ரூ 3000 வரை விற்கப்படுவதால் தமிழக அரசு சார்பாகச் செயல்படும் இத்திட்டம் அநேக மக்களால் வரவேற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.