Published:Updated:

முதல்வர் நிவாரண நிதி: எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்கள் ரூ.1.10 கோடி நிதியுதவி!

எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்கள் நிதியுதவி
எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்கள் நிதியுதவி

தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்கள் சார்பில் ரூ.1.10 கோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.

கொரோனா பரவல் தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்கள் சார்பில் ரூ.1.10 கோடி நிதி வழங்கப்பட்டது. அதனை எஸ்ஆர்எம் இணைவேந்தர் டாக்டர் பி.சத்தியநாராயணன், ராமாபுரம் வளாகத் தலைவர் டாக்டர் ஆர்.சிவகுமார், இணைத் தலைவர் எஸ்.நிரஞ்சன் ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்.

உலகை அச்சுறுத்தி வரும் ஆட்கொள்ளி நோயான கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் பணிகளுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில், எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் (SRMIST- SRM Institute of Science and Technology) காட்டாங்குளத்தூர், வடபழனி, ராமாபுரம் மற்றும் திருச்சி வளாகங்களின் ஊழியர்கள் சார்பில், தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியே 10 லட்சம் வழங்கப்பட்டது.

மேலும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவமனை மற்றும் வடபழனி சிம்ஸ் மருத்துவமனை, திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவமனை ஆகியவற்றில் 1,300 படுக்கைகளுடன் சிகிச்சை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு