Published:Updated:

எஸ்ஆர்எம் குருப் சேர்மன் ரவி பச்சமுத்துவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

சேர்மன் ரவி பச்சமுத்து - வாழ்நாள் சாதனையாளர் விருது
சேர்மன் ரவி பச்சமுத்து - வாழ்நாள் சாதனையாளர் விருது

சேவை செய்தவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை சிம்ஸ் மருத்துவமனையில் மறைமலை நகர் ரோட்டரி சங்க தலைவர் பி.ஏ.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.

கொரோனா தொற்று நோய்க்குச் சிறப்பான மருத்துவ சேவை அளித்து வருவதற்காக எஸ்ஆர்எம் நிறுவனங்களின் குரூப் சேர்மன் மற்றும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இணைவேந்தர் ரவி பச்சமுத்துவிற்கு மறைமலை நகர் ரோட்டரி சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி கெளரவித்துள்ளது.

சர்வதேச ரோட்டரி சங்கத்தின் ரோட்டரி மாவட்டம் 3231ன் மறைமலை நகர் ரோட்டரி சங்கம் கிளை சார்பில் கல்வி, மருத்துவம், அர்பணிப்புடன் கூடிய தொற்று நோய் தடுப்பு சிகிச்சை சேவைகள் அளித்து வருபவர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறது.

அதன்படி சேவை செய்தவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை சிம்ஸ் மருத்துவமனையில் மறைமலை நகர் ரோட்டரி சங்க தலைவர் பி.ஏ.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சர்வதேச ரோட்டரி சங்கத்தின் ரோட்டரி மாவட்டம் 3231ன் முன்னாள் ஆளுநர் பாபு பேரம் பங்கேற்று கொரோனா தொற்று நோய்க்குச் சிறப்பான மருத்துவ சேவை அளித்து வருவதற்காக எஸ்ஆர்எம் நிறுவனங்களின் குருப் சேர்மன் மற்றும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் (SRMIST SRM Institute of Science and Technology) இணைவேந்தர் ரவி பச்சமுத்துவிற்கு நல்லென்ன அடிப்படையில் மறைமலை நகர் ரோட்டரி சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி கெளரவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு