Published:Updated:

TNCA: முகமது அலி, ஆர்.ப்ரவீன் ஆகியோரின் அசத்தல் சதம்: TAKE- Serenity கோப்பையை வென்றது St.Bede’s!

TAKE- Serenity cup

முதல் இன்னிங்ஸின் லீட் அடிப்படையில் St.Bede’s அணி கோப்பையை வென்றது.

TNCA: முகமது அலி, ஆர்.ப்ரவீன் ஆகியோரின் அசத்தல் சதம்: TAKE- Serenity கோப்பையை வென்றது St.Bede’s!

முதல் இன்னிங்ஸின் லீட் அடிப்படையில் St.Bede’s அணி கோப்பையை வென்றது.

Published:Updated:
TAKE- Serenity cup

இவ்வாண்டிற்கான TAKE - Serenity U-19 கோப்பையை வென்றுள்ளது சென்னையைச் சேர்ந்த St. Bede’s அணி. நெல்லை நாடார் மற்றும் St. Bede’s அணிகள் மோதிய இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த நெல்லை நாடார் அணி 275 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய St.Bede’s அணியின் முகமது அலி (176) மற்றும் ஆர்.ப்ரவீன் (118) சதம் அடிக்க 159 ஓவர்களில் 482 ரன்கள் குவித்தது அந்த அணி.

இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நெல்லை நாடார் அணியால் கடைசி நாள் ஆட்ட நேர முடிவில் 125 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸின் லீட் அடிப்படையில் St.Bede’s அணி கோப்பையை வென்றது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர் நாயகனாக முகமது அலி தேர்வு செய்யப்பட்டார். மேலும் தொடரின் சிறந்த பேட்டராக எம்.மாதவன் (நெல்லை நாடார் அணி), சிறந்த பௌலராக ஆர். சேஷாந்த் (St.Bede’s), சிறந்த ஃபீல்டராக ராமச்சந்திராவின் ஜெயந்த் பலமுருகனும், விக்கெட் கீப்பராக லாலாஜி மெமோரியல் ஒமேகாவின் ஷ்ரேனிக் ஆகியோருக்கு விருதுகள் அளிக்கப்பட்டன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism