Published:Updated:

அன்பும் அன்பு சார்ந்த இடமும்..! - முனுசாமி டீக்கடை #MyVikatan

Representational Image
Representational Image ( unsplash )

நம்மில் எத்தனை பேர் துன்பத்தில் இருக்கும்போதுகூட பிறருக்காக இரக்கப் படுவோம்?

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

து என்ன முனுசாமி டீக்கடை. ஏனென்றால் அந்தக் கடைக்கு பெயர் கிடையாது. அந்தக் கடையை அந்தக் கடையில் இருக்கும் ஒருவருடைய பெயரை வைத்தே கூப்பிடுவார்கள்.

ம்மில் எத்தனை பேர் துன்பத்தில் இருக்கும்போதுகூட பிறருக்காக இரக்கப் படுவோம்?

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்..." என்று வள்ளலார் சொல்வதைக் கேட்டுவிட்டு வாடிய தாவரங்களுக்காகவெல்லாம் இவர் வருந்தியிருக்கிறாரே அதற்கு எத்தகைய மனம் இருக்க வேண்டும் என்று ஒரு நொடி யோசித்து விட்டு பேருந்தில் பிச்சை எடுக்கும் குருடரைப் பார்த்து நாமும் குருடராய், செவிடராய் ஊமையாய் இருந்திருக்கிறோம்.

Representational Image
Representational Image
Unsplash

நான் அவ்வாறு இருந்திருக்கிறேன். காரணம் என்னிடம் அவர்களுக்கு தானம் செய்யும் அளவுக்கு காசு இருக்காது. பிற்காலத்தில் உதவி தேவைப்படுபவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்திருக்கிறேன்.

ஆனால், தங்களுடைய உயிருக்கே உத்தரவாதமில்லாத சூழ்நிலையில் இன்னொருவரைக் காப்பாற்றி அவரை தங்களுடைய குடும்ப உறுப்பினராக மாற்றிக்கொள்ள எப்படிப்பட்ட மனம் வேண்டும்.

திருச்சி தேசிய கல்லூரியில் (National College, Trichy) நான் படித்த நாள்களில் மதிய உணவு உண்பது என்பது முந்தியவர்களுக்கே கிடைக்கும். தகுதி இருந்தால் மட்டுமே இவ்வுலகில் வாழ முடியும் (Survival of the fittest) என்ற விதியைப்போல. அதுவும் சிலநாள்கள் நமது உணவு காணாமல் போயிருக்கும். விடுதி மாணவர்கள் யாராவது வேட்டையாடியிருப்பார்கள். இது கல்லூரியில் மிகச் சாதாரணமாக நடக்கக்கூடிய விஷயம்.

Representational Image
Representational Image
Unsplash

மதியம் உணவு இடைவேளையில் அனைவரும் ஒன்றாக ஒரே நேரத்தில் டிபன் பாக்ஸை திறப்போம், திறந்த பிறகு யாருடைய பாக்ஸிலிருந்து யார் சாப்பிடுகிறார்கள் என்பதே தெரியாது. 5 நிமிடங்களில் மொத்த பாக்ஸுகளும் காலியாகிவிடும். எவ்வளவு பெரிய டிபன் பாக்ஸ் எடுத்துச் சென்றாலும் இதே நிலைமைதான். ஆனால், பின்னர் MCA (Master of Computer Applications) படிக்கும் காலத்தில் எவ்வளவு சிறிய டிபன் பாக்ஸ் எடுத்துச் சென்றாலும் என்னால் முழுவதுமாகச் சாப்பிட முடிந்ததில்லை.

மாலை கல்லூரி முடிந்ததும் ஒன்றாகக் கிளம்பி நடந்தே மத்திய பேருந்து நிலையத்திதுக்குச் செல்வோம். வழியில் அரிஸ்டோ பேக்கரியில் டீ குடித்துவிட்டு பின் அவரவர் ஊர்களுக்குச் செல்வோம்.

இடையில் எப்போதாவது லஞ்சுக்கு முன்பாக டீ குடிக்க வேண்டும் என்றால் என்ன செய்வது ?

Representational Image
Representational Image
Pixabay

எங்கள் கல்லூரியின் வெளியில் கல்லூரி கேட்டுக்கு எதிர்புறம் ஒரே ஒரு டீக்கடை உண்டு. அந்தக் கடைக்கு எப்போதாவது நாங்கள் டீ குடிகச் செல்வோம். அது ஒரு பர்மா தமிழரின் கடை. அங்கு டீ பிஸ்கெட் மசால் வடை (11 மணிக்கு சூடாக சுவையாகக் கிடைக்கும்) போன்றவை கிடைக்கும். அதில் பர்மா கலவரத்தின் பொது ஒரு கால் மற்றும் ஒரு கை இழந்த (மாறுகால் மாறு கை) ஒருவர் அனைவருக்கும் மிக பிசியாக டீ சப்ளை (supply) செய்துகொண்டு வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார் (அந்த மனிதருடைய பெயர் முனுசாமி என்பது எனக்கு மறந்துவிட்டது. குலசேகரன் என்ற என் கல்லூரித் தோழன் எனக்கு நினைவு படுத்தினான்). அது தவிர ஒரு பெரியவர் டீ மாஸ்டர் ஆக இருந்தார்.

வெகு நாள்கள் நாங்கள் அந்தக் கடை முனுசாமியுடையது என்றும் அது அவருடைய குடும்பம் என்றே நினைத்திருந்தோம். ஆனால், பிறகுதான் தெரிந்தது அந்தக் கடை, டீ மாஸ்டராக இருந்த அந்த பெரியவருடையது என்பதும் கலவரத்தின்போது கை கால் இழந்த இவரை அவர்கள் தங்களுடன் அழைத்துக்கொண்டு வந்தார்கள் என்பதும் அவர் அந்தக் குடும்பத்தில் ஒருவராகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதும் தெரியும்.

Representational Image
Representational Image
Unsplash

தாங்கள் புலம் பெயர்ந்து தாயகம் திரும்பி வர வேண்டிய நிர்பந்தத்திலும் முனுசாமியின் நிலையறிந்து தங்கள் குடும்பத்தில் ஒருவராக அவரை இணைத்துக்கொண்ட அந்த டீக்கடையின் உரிமையாளரான அந்தப் பெரியவரின் மனித நேயத்தை எண்ணி பார்க்கையில் எனக்கு பிரமிப்பே ஏற்படுகிறது.

இப்போதும் தேசிய கல்லூரி இருக்கிறது. ஆனால், அந்த டீக்கடை இருக்கிறதா எனத் தெரியவேயில்லை.

ஒரு நாள் சென்று பார்க்க வேண்டும்..!

- ஆனந்தகுமார் முத்துசாமி.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு