Published:Updated:

கழிப்பறை விழிப்புணர்வு, பயன்பாடு. 'பத்மஸ்ரீ'க்குத் தேர்வான கிராமாலயா தாமோதரன். சாதித்தது இதுதான்!

கிராமாலயா தாமோதரன்

பல கிராமங்களில் மக்கள் கழிவறைகளைப் பயன்படுத்துவதைவிடத் திறந்த வெளியில் மலம் கழிப்பதைத்தான் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தான ஒன்று.

கழிப்பறை விழிப்புணர்வு, பயன்பாடு. 'பத்மஸ்ரீ'க்குத் தேர்வான கிராமாலயா தாமோதரன். சாதித்தது இதுதான்!

பல கிராமங்களில் மக்கள் கழிவறைகளைப் பயன்படுத்துவதைவிடத் திறந்த வெளியில் மலம் கழிப்பதைத்தான் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தான ஒன்று.

Published:Updated:
கிராமாலயா தாமோதரன்

'பத்மஸ்ரீ’ விருது பெறவிருக்கும் கிராமாலயா தாமோதரன் கடந்த இரண்டு நாள்களாக இணையத்தில் அதிகமாகத் தேடப்படும் நபர்களில் ஒருவராக மாறியிருக்கிறார். அப்படி என்னதான் சாதனை செய்தார்? ஏன் எதற்காக மத்திய அரசு விருது வழங்கியிருக்கிறது என்கிற தேடல்தான் அதன் நீட்சி.

கிராமாலயா
கிராமாலயா

'கிராமாலயா' என்கிற அமைப்பு மூலமாக ஆறு மாநிலங்களில் முப்பது லட்சம் பேர் பயனடையக்கூடிய 6 லட்சத்துக்கும் அதிகமான தனி நபர் கழிப்பிடங்களைக் கட்டிக்கொடுத்து. இந்தியாவே திரும்பிப் பார்க்கும் மனிதராக மாறியிருக்கிறார் திருச்சியைச் சேர்ந்த தாமோதரன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

யார் இந்த தாமோதரன்?

திருச்சி மாவட்டம் உறையூரைச் சேர்ந்தவர் தாமோதரன். இவர் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் படித்தவர். பின்பு 'அந்தியோதயா' என்கிற தொண்டு நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்.

கிராமாலயா தாமோதரன்
கிராமாலயா தாமோதரன்

அந்நிறுவனத்தின் மூலமாகக் கிடைத்த அனுபவங்களை வைத்துக்கொண்டு, கடந்த 1987-ல் அவரின் நண்பருடன் இணைந்து 'கிராமாலயா' தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி பல்வேறு மாநிலங்களில் சுகாதாரத் திட்டங்கள், சட்ட திட்டங்களை முன்னெடுத்து வந்ததால், பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியிருக்கிறார். விருதாளர் பெயர் அறிவிப்பு வெளியான நேரத்திலிருந்து பிஸியாக இருந்தவரைச் சந்தித்துப் பேசினோம்.

கழிப்பறை விழிப்புணர்வு, பயன்பாடு. 'பத்மஸ்ரீ'க்குத் தேர்வான கிராமாலயா தாமோதரன். சாதித்தது இதுதான்!

அவர் கடந்துவந்த பாதைகள் பற்றி முகமலர்ச்சியோடு பேசத்தொடங்கினார், "எங்களது முதல் நோக்கமே கிராமப்புற ஏழைகளுக்குக் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் கிடைப்பதுதான் வாழ்நாள் குறிக்கோள். அந்த வகையில்தான் பயணித்துக்கொண்டிருக்கிறோம். கழிப்பிட வசதி குறித்த விழிப்புணர்வு பல வருடமாக ஏற்படுத்தி வந்தாலும் இன்னும் பல கிராமங்களில் அந்த வசதி இல்லாமல் மக்கள் நாள்தோறும் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் பல கிராமங்களில் அந்த வசதியைச் சரிவரப் பின்பற்றுகிறார்களா என்றால் அது சந்தேகம்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்னும் சொல்லப்போனால், பல கிராமங்களில் மக்கள் கழிவறைகளைப் பயன்படுத்துவதைவிடத் திறந்த வெளியில் மலம் கழிப்பதைத்தான் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தான ஒன்று.

விழிப்புணர்வு
விழிப்புணர்வு

ஒரு மனிதன் தினமும் 250 முதல் 300 கிராம் வரை மலம் கழிக்கிறான். ஒரு கிராம் மலத்தில் ஒரு கோடி வைரஸ், பத்து லட்சம் பாக்டீரியாக்கள், ஆயிரம் ஒட்டுண்ணி, நூறு ஒட்டுண்ணி முட்டைகள் இருக்கின்றன என 'உலக சுகாதார அமைப்பு' சொல்கிறது.

ஓவியம்
ஓவியம்

ஒரு கிராமில் இவ்வளவு தீங்கு இருக்கிறது என்றால் அப்படி எத்தனை லட்சம் பேர் பொது வெளியில் மலம் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்? அப்படியென்றால் எவ்வளவு மக்கள் நோய்வாய்ப்படுவார்கள்? இதனை மாற்ற வேண்டும் என்கிற நோக்கில் களமிறங்கியிருக்கிறோம்.

இத்தகவலை எனது அமைப்பு மூலமாகத் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து தென் மாநிலங்களில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில், சுமார் 6 லட்சம் பேர் பயன்படுத்தக்கூடிய தனிநபர்

கழிவறை
கழிவறை

இல்லக் கழிப்பறைகளையும், 500-க்கும் மேற்பட்ட பள்ளிக் கழிப்பறைகளையும் கட்டிக்கொடுத்துள்ளோம். ஒவ்வொரு கிராமத்திலும் கழிப்பறை கட்டிக்கொடுப்பதோடு அங்குள்ள மக்களை அழைத்து, பொது வெளியில் மலம் கழிப்பதால் என்னென்ன தீங்கு ஏற்படுகிறது என்பது குறித்துப் பல கூட்டங்களை நடத்தியிருக்கிறோம்.

கடந்த 2002-ம் ஆண்டு திருச்சி மாநகராட்சிக்குச் சொந்தமான 'கல்மந்தை' பகுதியில் ஆண், பெண் இரு பாலினத்தவர்க்கும் என மொத்தம் 20 சமுதாய கழிப்பறைகளைக் கட்டிக் கொடுத்தோம். அங்குள்ள மக்களே அந்தக் கழிவறைகளைப் பயன்படுத்தி, அவர்களே சுத்தம் செய்து அதனை அவர்களே நிர்வகிப்பது என்கிற திட்டத்தைக் கொண்டுவந்தது 'கிராமாலயா'தான். இந்தக் கழிப்பறைகள் இல்லையென்றால் எல்லோரும் பொதுவெளியில்தான் மலம் கழித்திருப்பார்கள். பொது மக்களுக்கு நோய்வாய் ஏற்படுவதைக் குறைத்ததுடன் மாநகராட்சிக்கும் பல சிரமத்தைக் குறைத்தோம்.

கழிப்பறையைப் பயன்படுத்துவது எப்படி
கழிப்பறையைப் பயன்படுத்துவது எப்படி

அங்குள்ள மக்கள் பலரும் அந்தக் கழிவறைகளைப் பயன்படுத்தத் தொடங்கியதால் கல்மந்தை பகுதிதான், "இந்தியாவின் முதல் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத பகுதி"யாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மகளிர் குழுக்கள் மூலமாக ஒரு நபருக்கு (ரூ 1 முதல் ரூ.2வரை) என வசூல் செய்து. கழிவறைகள் (சுத்தம் செய்வது முதல் ப்ளீச்சிங் பவுடர் வரை ) செலவு போக மீதமுள்ள தொகை வங்கிகளில் வரவு வைக்கப்படும். அடுத்தடுத்த கட்டத்திற்கு விரிவுபடுத்தப்பட்டது. இந்தத் திட்டம்தான் நாங்கள் யார் என்று முதலில் தெரியவைத்தது.

அதன் பிறகு, கடந்த 2003-ம் ஆண்டில் திருச்சி மாவட்டம் தாண்டவம் பட்டி கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிவறைகளை அவர்களது செலவில் அவர்களே கட்டிக்கொண்டார்கள். "பொது வெளியில் மலம் கழித்தால் அபராதம் விதிக்கப்படும்" என, பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றியதோடு அதற்கான அறிவிப்பு போர்டையும் பொது வெளியில் வைத்தனர்.

விழிப்புணர்வு
விழிப்புணர்வு

இந்தச் சம்பவம் அப்படியே பத்திரிகைகளில் வெளிவந்ததும், ஐ.ஏ.எஸ் அதிகாரி சாந்தாசீலா நாயர் அவர்கள் நேரடியாகக் கிராமத்திற்கே வந்து ஆய்வு செய்தார். எங்களது அமைப்பு செயல்படும் முறைகள் குறித்தும் நீண்ட நேரம் பேசினார். அப்போது "உங்கள் மூலமாக இன்னொரு காந்தியைப் பார்க்கிறேன்" எனச் சொன்னதுமே மிகுந்த சந்தோஷம் அடைந்ததோடு எங்களை வெளியில் தெரியவைத்ததும் இச்சம்பவங்கள்தான். இதுபோல் பல திட்டங்களை அரசின் உதவியோடு கிராமங்களுக்குச் செய்திருக்கிறோம்.

கிராமாலயாவின் தொடர் சுகாதார சேவைகளைப் பாராட்டி , கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி ‘டாய்லெட் டைட்டன் விருதினை’ துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கி கௌரவித்தார். இதுபோல் இன்னும் சில விருதுகள் பெற்றிருந்தாலும்.

விழிப்புணர்வு
விழிப்புணர்வு

இப்போது 'பத்ம ஸ்ரீ விருது' பெறக் காரணமாக இருப்பது எனது வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம். எனது 35 ஆண்டுக்கால சமூகப் பணிக்குக் கிடைத்த அங்கீகாரமாகவும், திருச்சி மண்ணுக்குக் கிடைத்த பெருமையாகவும் கருதுகிறோம்" என்றார் முகமலர்ச்சியோடு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism