Published:Updated:

``பூனைகள் என் கடையை இன்னும் அழகாக்குது!" - சென்னை புத்தகக் கடையின் சுவாரஸ்யம்

புத்தகக்கடை
News
புத்தகக்கடை

இந்தக் கடையில் புத்தகங்களைத் தாண்டி வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஒரு விஷயம் அங்குள்ள பூனைகள். சுமார் ஏழெட்டு பூனைகள் அங்கும் இங்கும் துள்ளித் திரிந்தபடியும், பஞ்சு போன்ற தேகத்துடன் சுருண்டு தூங்கிக்கொண்டும் அந்த இடத்தை அழகாக்குகின்றன.

கல்லூரியில் கால்பதிக்கும் மாணவர்கள் சென்னைக்கு வந்ததும் அவர்களின் முக்கியத் தேடல்களில் ஒன்றாக புத்தகங்களாக இருக்கும். மலிவான விலையில் புத்தகங்களைத் தேடித் தேடி வாங்குவார்கள். மூர் மார்க்கெட், திருவல்லிக்கேணி பகுதிகள்தான் பலருக்கும் பரிச்சயம். சென்னையின் எல்லையிலிருக்கும் தாம்பரத்தில் 1990-ம் ஆண்டு முதல் கல்லூரி மாணவர்களின் ஃபேவரைட்டாக நீடிக்கிறது பிர்தவ்ஸ் புத்தகக் கடை.

புத்தகக்கடை
புத்தகக்கடை

இந்தப் புத்தகக் கடைக்கு பூனைகள் புத்தகக்கடை என்ற சுவாரஸ்யப் பெயரும் உண்டு!

திருநெல்வேலி மாவட்டம் உடன்குடி அருகில் சீர்உடையார்புரத்தைச் சேர்ந்தவர் முகம்மது இக்பால். இக்பாலின் குடும்பம் பிழைப்பைத் தேடி சென்னை வந்தது. ஒருகட்டத்தில் தந்தையின் பாத்திரக்கடையைப் பராமரிக்கும் வேலையில் ஈடுபட்டார். ஆனால், புத்தகங்கள் மீதுதான் அவர் காதல் இருந்தது. புத்தகங்களைச் சேமிப்பதிலும் அதிக ஆர்வம். நண்பர் ஒருவரின் பழைய புத்தகக் கடையைக் கையில் எடுக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க அதை நூலகமாக மாற்றுகிறார். தன்னைப் போல புத்தகக் காதலர்களிடம் அந்த நூலகத்தை அறிமுகம் செய்கிறார். தன்னால் இயன்ற அளவு அப்பகுதியிலுள்ள இளைஞர்களிடமும் மாணவர்களிடமும் புத்தகம் வாசிக்கும்படி அறிவுறுத்தி, அந்தப் பகுதி மக்களிடையேயும் வாசிப்பை அதிகப்படுத்தினார்.

புத்தகக்கடை
புத்தகக்கடை

அதற்குப் பிறகுதான் மாணவர்களுக்கான புத்தகத் தேவையை அறிந்துகொள்கிறார். நூலகத்தை மாணவர்களுக்கான புத்தகக் கடையாக மாற்றலாம் என்ற எண்ணம் ஏற்பட்டு 1990-ம் ஆண்டு பிர்தவ்ஸ் புத்தகக் கடையாக மாறியது.

``பழைய பேப்பர் வியாபாரம் பண்றவங்ககிட்ட புத்தகங்களை வாங்கி மாணவர்களுக்கான கடையை நடத்தலாம்னு தீர்மானிச்சேன். அதுக்கப்புறம் மாணவர்களுக்கு என்னென்ன புத்தகங்கள் தேவைன்னு தெரிஞ்சுகிட்டு அந்தப் புத்தகங்களைத் தேடித் தேடி வாங்கி விற்பனை செய்ய ஆரம்பிச்சேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போ மாணவர்கள் மட்டுமல்ல பேராசிரியர்களும் இங்க வந்து புத்தகங்களை வாங்கிட்டுப் போறாங்க" என்னும் இக்பால் பெரும்பாலான புத்தகங்களை 50% விலையிலும், மாணவர்களுக்கான புத்தகங்களை 40% சலுகை விலையிலும் விற்பனை செய்கிறார். பழைய புத்தகங்கள் என்றாலும் நல்ல நிலையில் இருப்பவற்றை மட்டுமே வாங்கி மாணவர்களுக்கு விற்பனை செய்கிறார். இதுதவிர, தமிழ் மற்றும் ஆங்கில நாவல்கள், உளவியல் சார்ந்த புத்தகங்களையும் அதிக அளவில் மக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்வதாகக் கூறுகிறார்.

புத்தகக்கடை
புத்தகக்கடை

இந்தக் கடையில் புத்தகங்களைத் தாண்டி வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஒரு விஷயம் அங்குள்ள பூனைகள். சுமார் ஏழெட்டு பூனைகள் அங்கும் இங்கும் துள்ளித் திரிந்தபடியும், பஞ்சு போன்ற தேகத்துடன் சுருண்டு தூங்கிக்கொண்டும் அந்த இடத்தை அழகாக்குகின்றன. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் புத்தகங்களோடு பூனைகளையும் நலம் விசாரித்துச் செல்கின்றனர். ``முதல்ல ஒண்ணு ரெண்டு பூனைகள்தான் வர ஆரம்பிச்சன. அதுங்களுக்கு சாப்பாடு கொடுக்க ஆரம்பிச்சோம். அப்புறம் அதுங்க ஒரு கூட்டத்தையே கூட்டிட்டு வந்துச்சு. நாங்களும் சரி எலித் தொல்லை இருக்காதுன்னு கடையிலேயே வெச்சுக்கிட்டோம்.

நாங்க சாப்பாடு கொடுக்கிறோம். அதுங்க எங்க கடை புத்தகங்களை எலிகள்கிட்டேயிருந்து பாதுகாக்குது. கடைக்கு வரும் கஸ்டமர்ஸ் பூனைக்குட்டிகள் கேட்டா அவங்களுக்கும் வளர்க்குறதுக்காகக் கொடுத்தனுப்புறோம்" எனப் புன்னகைத்த இக்பால் இந்தப் பூனைக்குட்டிகள்தான் கடைக்கு அழகு என்று வாடிக்கையாளர்கள் சொல்லிச் செல்வதையும் குறிப்பிட்டார்.

புத்தகக்கடை
புத்தகக்கடை

கடைக்கு இன்னும் அழகு சேர்க்கிறது பல ஆண்டுகளாக அங்கேயே பணியாற்றும் ஊழியர்களான ஐவர் படை. அவர்களில் ஒருவரான மாலாவிடம் பேசியபோது, ``இந்தக் கடைக்கு வந்து இருபது வருஷம் ஆச்சு. இங்க உள்ள புத்தகங்களைப் படிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான் உளவியல் மேல ஆர்வம் வந்துச்சு. அதுக்கப்புறம் படிச்சு உளவியல் துறையில முதுநிலை பட்டம் வாங்கினேன். இன்னும் புத்தகங்கள் மீது இருக்கிற ஆர்வம்தான் இந்தக் கடையோட என்னைக் கட்டிப்போட்டு வெச்சிருக்கு" என நெகிழ்ந்தார்.