Published:Updated:

‘ஸ்டோரிடெல்’: 1000+ தமிழ்க் கதைகளை உள்ளடக்கிய உலகின் மிகப்பெரிய ஆடியோ தளம்!

ஸ்டோரிடெல்
ஸ்டோரிடெல்

கேட்பவர்களுக்குப் பிடிக்கும் வகையில், தேர்ந்த குரல் நடிகர்கள் ஆடியோ புத்தகங்களுக்கு குரல் கொடுக்க இருக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடியோ கதைகளைத் தமிழ் மொழியில் உள்ளடக்கிய ‘ஸ்டோரிடெல்’, அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட ஈ-புத்தகச் சேவை நிறுவனம். 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘ஸ்டோரிடெல்’, கடந்த இரண்டு ஆண்டுகளில் கல்கி, சாண்டில்யன், தி.ஜானகிராமன், அசோகமித்திரன், பெருமாள் முருகன், மற்றும் பல தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கு ஆடியோ வடிவில் புத்தகம் வெளியிட்டுள்ளது.

‘ஸ்டோரிடெல்’
‘ஸ்டோரிடெல்’

2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘ஸ்டோரிடெல்’ நிறுவனம், அப்போதே அனைவரின் கவனத்தைப் பெற்ற நிறுவனமாகப் பெயர் பெற்றது. இது பொஃபியோ மற்றும் ‘ஸ்டோரிடெல்’ இரண்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஆடியோ புத்தக வெளியீட்டு நிறுவனமான ஸ்டோரி சைட் மற்றும் பிரபல நார்டிக் வெளியீட்டு நிறுவனங்களான நார்ஸ்டெட்ஸ், பீப்பில்ஸ் பிரஸ் மற்றும் கம்மரெஸ் ஆகியவற்றோடு சேர்ந்து பணியாற்றி வருகின்றது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமை மையமாகக் கொண்ட ‘ஸ்டோரி டெல்’ நிறுவனம், சர்வதேச அளவில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இயங்கிவருகிறது.

பழங்கால மற்றும் சமீபத்திய இலக்கியப் படைப்புகளை ‘ஸ்டோரிடெல்’ தளத்தில் காணலாம். க்ரைம், த்ரில்லர், சுயசரிதை, புனைவு, வரலாறு எனப் பல வகை இலக்கியப் புத்தகங்களை ஆடியோ வடிவில் தர ‘ஸ்டோரி டெல்’ திட்டமிட்டுள்ளது.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்

கேட்பவர்களுக்குப் பிடிக்கும் வகையில், தேர்ந்த குரல் நடிகர்கள் ஆடியோ புத்தகங்களுக்கு குரல் கொடுக்க இருக்கின்றனர். கர்ணன் படப் புகழ் லக்ஷ்மி ப்ரியா சந்திரமௌலி, ஆர்ஜே பாலாஜி, வேணுகோபால், கோலிவுட்டின் முன்னணிக் குரல் நடிகர் சவீதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பணியாற்ற உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து பேசிய ‘ஸ்டோரிடெல்’ தமிழின் மொழி மேலாளர் தீபிகா அருண், “ஆடியோ புத்தகங்களை எங்கும் எடுத்துச் செல்லலாம். தாய்மொழியிலேயே புத்தகங்களை வாசிப்பது ஒரு புது அனுபவத்தைக் கொடுக்கும். புகழ்பெற்ற தமிழ்ப் புத்தகங்களை வாசிக்க நேரமில்லாதவர்களுக்கு ஆடியோ புத்தகங்கள் ஒரு வரப்பிரசாதம். க்ரைம், த்ரில்லர், காதல், சுயமுன்னேற்றம் என அனைத்து வகை புத்தகங்களும் கிடைக்கக்கூடிய தளமாக ‘ஸ்டோரி டெல்’ இருக்கும். மாதம் வெறும் 149 ரூபாயில், 10-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் பல்லாயிரக்கணக்கான ஆடியோ புத்தகங்களை நீங்கள் கேட்டு மகிழலாம்” என்றார்.

தீபிகா அருண்
தீபிகா அருண்
கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் ஆகிய தளங்களில் இருந்து ‘ஸ்டோரிடெல்’ செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு