Published:Updated:

``நம்ம மொழி... நம்ம அடையாளம்..!'' திருக்குறளை உலகெங்கும் பரப்பும் அமெரிக்க தமிழர்கள்

சீதா ராமசாமி

இளம் வயதிலேயே திருக்குறளின் மீது கொண்ட ஆர்வத்தால், குறள் இளவரசி பட்டத்தையும் வென்றுள்ளார் அமெரிக்க தமிழ்ப் பெண்ணான சீதா ராமசாமி.

``நம்ம மொழி... நம்ம அடையாளம்..!'' திருக்குறளை உலகெங்கும் பரப்பும் அமெரிக்க தமிழர்கள்

இளம் வயதிலேயே திருக்குறளின் மீது கொண்ட ஆர்வத்தால், குறள் இளவரசி பட்டத்தையும் வென்றுள்ளார் அமெரிக்க தமிழ்ப் பெண்ணான சீதா ராமசாமி.

Published:Updated:
சீதா ராமசாமி

தமிழ்நாட்டில் உள்ள மாணவச் செல்வங்கள் திருக்குறளில் உள்ள 1330 குறளையும் மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதில் பெரிய ஆச்சர்யமில்லை. ஆனால், அமெரிக்காவில் பிறந்து, அங்கேயே வளர்ந்த தமிழ் மாணவி ஒருவர் திருக்குறளின் மீது கொண்ட ஆர்வத்தால், அதை உலகெங்கும் கொண்டு செல்வதில் தீவிரமாகச் செயல்படுவது ஆச்சர்யம்தானே?

சீதா ராமசாமி
சீதா ராமசாமி

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள டல்லாஸ் நகரில் பிறந்து வளர்ந்தவர் சீதா ராமசாமி. சிவகங்கை மாவட்டம் ஆரவாயல் கிராமம்தான் இவரது பூர்வீகம். தந்தை லட்சுமணன் பாலாஜியும், தாய் சாந்தி நாச்சியம்மையும் டெக்ஸாஸில் ஐ.டி. நிறுவன ஊழியர்களாகப் பணிபுரிகின்றனர். தற்போது அமெரிக்காவில் மருத்துவப் பட்டப்படிப்பு படித்து சீதா ராமசாமி, தனது ஏழாவது வயதில் இருந்தே திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பரிசுகளைக் குவித்துள்ளார். வெறும் போட்டிக்கான கருவியாக மட்டும் திருக்குறளைப் பார்க்காமல், அமெரிக்காவின் மற்ற தமிழ்ச் சங்கங்களுக்கும் பள்ளிகளுக்கும், திருக்குறள் கருத்துக்களை எடுத்துச் செல்வதில் முக்கியத் தூதராகச் செயல்படுவது தனிச்சிறப்பு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழர்களை இணைப்பது தமிழ் மொழிதானே. மொழிதான் நமது அடையாளம். அதை விட்டுவிடக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருக்கிறோம்.
அமெரிக்க தமிழ் மாணவி சீதா ராமசாமி

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிரிட்டன், ஐரோப்பா நாடுகளிலுள்ள தமிழ்ப் பள்ளிகளும் சீதா ராமசாமியின் திருக்குறள் ஆர்வத்தைப் பார்த்து, சிறப்பு பேச்சாளராக வரவேற்றுள்ளன. ஆகஸ்ட் 22-ம் தேதி, சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், சீதா ராமசாமிக்குத் திருக்குறள் நெறித்திலகம் விருது வழங்கி கௌரவித்துள்ளது மயிலை திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம். இவ்விருதை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், வி.ஜி.பி நிறுவனர் வி.ஜி.சந்தோசம் உள்ளிட்டோர் வழங்கி வாழ்த்திப் பேசினர். விழா பரபரப்பில் இருந்த சீதா ராமசாமியிடம் அவரின் திருக்குறள் ஆர்வம் குறித்துப் பேசினோம்.

விருது வழங்கும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், வி.ஜி.பி நிறுவனர் வி.ஜி.சந்தோசம்
விருது வழங்கும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், வி.ஜி.பி நிறுவனர் வி.ஜி.சந்தோசம்

திருக்குறள் மேல் அப்படியென்ன காதல்?

டெக்ஸாஸிலுள்ள லியோ தமிழ்ப் பள்ளியில்தான் படித்தேன். என்னுடைய 7 வது வயதில் இருந்தே தமிழ் மொழி மீது ஈர்ப்பு ஏற்பட்டது. திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்க ஆரம்பித்தேன். திருக்குறளிலுள்ள 1330 குறள்களையும் ஒப்பிக்க கீதா சுப்பிரமணியன், சித்ரா மகேஷ் என்கிற என்னுடைய இரண்டு ஆசிரியைகளும் ஊக்கப்படுத்தினர். திருக்குறளில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களும் நல்லொழுக்க நெறிகளும் என்னை தமிழ் மொழியை மேலும் படிக்கத் துண்டியது. 12-ம் கிரேட் படிக்கும்போது, 1330 குறளையும் 3.45 மணியில் ஒப்புவித்தேன்.

டல்லாஸ் மெட்ரோ ப்ளக்ஸ் தமிழ்ச்சங்கத்திலும், நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கத்திலும் திருக்குறளின் மேன்மையைப் பற்றி பேசியதால் வரவேற்பு கிடைத்தது. பாஃபா திருக்குறள் விருது வழங்கும் விழாவில், அமெரிக்காவின் குப்பெர்டினோ நகர முதல் தமிழ் மேயரான சவிதா வைத்தியநாதன் கையால் ‘குறள் அரசி’ பட்டம் கிடைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி. இப்படித்தான் திருக்குறள் மீது காதல் பிறந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமெரிக்க தமிழ்ப் பிள்ளைகள் தமிழின் மீது ஆர்வமான உள்ளார்களா?

மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். தமிழர்களை இணைப்பது தமிழ் மொழிதானே. மொழிதான் நமது அடையாளம். அதை விட்டுவிடக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருக்கிறோம். இன்றும் தமிழ் மொழி விழாக்கள் எங்கு நடந்தாலும், அங்கு நண்பர்களுடன் சென்றுவிடுவேன். திருக்குறள், அகநானூறு, புறநானூறு, தொல்காப்பியம், ஐம்பெரும் நூல்கள், சித்தர்களின் நூல்கள் என தேடித் தேடித் தமிழ் நூல்களைப் படிக்கும் ஆர்வம் அமெரிக்க தமிழ் பிள்ளைகளிடம் அதிகரித்துள்ளது. அதற்கு நானே ஒரு எடுத்துக்காட்டு.

 சீதா ராமசாமி
சீதா ராமசாமி

உங்கள் எதிர்காலத் திட்டம்?

டெக்ஸாஸ் ஆஸ்டன் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறேன். பிரிட்டன், ஐரோப்பாவிலுள்ள தமிழ்ச் சங்கங்களிலும் என்னை சிறப்புப் பேச்சாளராக வரவேற்றுள்ளனர். உலகெங்கும் தமிழ் மொழியை மணக்கச் செய்ய வேண்டும் என்பதுதான் என் திட்டம். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவேன்.

மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் இணை செயலாளரும் பெப்ஹோக் பள்ளியின் தலைவருமான திருஞானசம்பந்தம் கூறுகையில், “நமது கலாசார சூழலில் இருந்து, அமெரிக்கா சூழல் முற்றிலும் மாறுபட்டது. இச்சூழலிலும், தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் விட்டுவிடக் கூடாது என்று 7 வயதிலிருந்தே ஒரு மாணவி முயன்றிருப்பது ஆச்சர்யமளிக்கிறது.

திருஞானசம்பந்தம்
திருஞானசம்பந்தம்

இவ்வயதிலுள்ளவர்கள் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ஸ்னாப்சாட் என மொபைலுக்குள் மூழ்கியிருக்கும் வேளையில், தமிழை உலகெங்கும் கொண்டுச் செல்ல சீதா முயன்றுள்ளார். இதைக் கௌரவப்படுத்தத்தான் விருது வழங்கி சிறப்பித்தோம்” என்றார்.

அயல்நாடுகளில் வசித்தாலும், சீதா ராமசாமி போன்று, பல தமிழ்ப் பிள்ளைகள் மொழியின் அவசியத்தை உணர்த்து போற்றி பாதுகாப்பது வரவேற்கத்தக்கது. ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும், நம்ம மொழிதானே நமக்கு அடையாளம்.

திருக்குறள், அகநானூறு, புறநானூறு, தொல்காப்பியம், ஐம்பெரும் நூல்கள், சித்தர்களின் நூல்கள் எனத் தேடித் தேடி தமிழ் நூல்களைப் படிக்கும் ஆர்வம் அமெரிக்கத் தமிழ்ப் பிள்ளைகளிடம் அதிகரித்துள்ளது.
அமெரிக்கத் தமிழ் மாணவி சீதா ராமசாமி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism