Published:Updated:

முதல்வர் நிவாரண நிதி: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ரூ.3 கோடி நிதியுதவி!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி நிதியுதவி
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி நிதியுதவி

கடந்த மே.17 அன்று, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (Tamilnad Mercantile bank) சார்பாக ரூ.3 கோடி நிதியளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தற்போது உக்கிரமாக இருப்பதால் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொரோனா எனும் பேரிடரைச் சமாளிக்கத் தமிழக முதல்வர் மு,க.ஸ்டாலின் தன் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்குமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதையடுத்து பொதுமக்கள் தொடங்கி பல்வேறு நிறுவனங்கள்வரை நிதியுதவி அளித்துவருகின்றனர்.

கடந்த மே.17 அன்று, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (Tamilnad Mercantile bank) சார்பாக ரூ.3 கோடி நிதியளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலினைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்த தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் இயக்குநர்கள் திரு.நிரஞ்சன் சங்கர் மற்றும் திரு.டி.என்.நிரஞ்சன் கனி, துணை பொது மேலாளர் திரு.டி.ரமேஷ் ஆகியோர் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.

அடுத்த கட்டுரைக்கு