Published:Updated:

டீக்கடை ட்ரம்ப்புகள்! - லாக் டெளன் 4.0 பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Nanda kumar )

நாம் மணிக்கணக்காய் அமர்ந்திருந்த டீக்கடை பெஞ்சுகள் எல்லாம் உலகப் பொருளாதாரம் போன்று தலைகுப்புறக் கவிழ்ந்து கிடக்கும்!

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ரோட்டோர டீக்கடைகள் எல்லாம் செவன் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு ஹைஜீனிக் ஆக மாறியது போன்று தோற்றம் மட்டுமே கொடுக்கும். புகைபிடிப்பது தடைசெய்யப்பட்ட பகுதிகள் போல, டீக்கடைகள் எல்லாம் டீ குடிப்பது தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாறி இருக்கும்.

நாம் டீயை வாங்கியவுடன் 100 மீட்டர் வேகமாய் ஓடிச்சென்று ஓரமாய் நின்று குடிக்க வேண்டியிருக்கும்.

பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது என்பதற்கு இணையாகப் பொது இடங்களில் டீ குடிக்கக்கூடாது என்ற அறிவிப்புகள் பளிச்சிடும்!

Representational Image
Representational Image
Pixabay

தனிமனித இடைவெளி கடைப்பிடிக்க வேண்டி 'குடைக்குள் மழை போன்று கடைக்குள் குடை'யைச் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கும்!

நாம் மணிக்கணக்காய் அமர்ந்திருந்த டீக்கடை பெஞ்சுகள் எல்லாம் உலகப் பொருளாதாரம் போன்று தலைகுப்புறக் கவிழ்ந்து கிடக்கும்!

டீ மாஸ்டருக்கு இருமல் வருகிறதா என அவ்வப்போது ஒரு குழு ஆய்வு செய்து அறிவிப்பு வெளியிடும்.

கொரோனா குறித்து ஐரோப்பிய ஆய்வாளர்களுக்கே தெரியாத அரிய பல தகவல்கள் நம் காதுகளில் வந்து விழும்.

நோயுடன் வாழப் பழகும் ரகசியங்களை ட்ரம்ப்பின் கசின்கள் அவ்வப்போது வெளிப்படையாய் கசியவிடுவர்.

கொடுக்கப்படும் டீ கோப்பைகளைத் தொட யாருக்குமே துணிவு வராது. துணியைப் போர்த்தி கோயில் பிரசாதம் போல மக்கள் பவ்யமாக டீயை வாங்குவர். மாஸ்க்கை எடுக்காமல் டீ குடிக்க முடியுமா என்று சில சிட்டி விஞ்ஞானிகள் முயற்சி செய்து கொண்டிருப்பதைப் பார்த்து நமக்க திகில் கூடும். வழக்கமாக நாமே எடுத்துக்கொள்ள வசதியாய் தட்டில் கொட்டப்பட்டிருக்கும் பஜ்ஜியும் வடையும் கடைக்காரரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு பார்டருக்கு அந்தப்பக்க வேலிக்குள் பத்திரமாய் பதுங்கியிருக்கும்.

Representational Image
Representational Image

ஒரு கையில் டீ கோப்பையும் மறுகையில் பீடியுமாய் டீக்கடை மரத்தடியில் பலர் ஞானமடையத் தொடங்கியிருப்பர்.

வருவோர் போவோரெல்லாம் டீ மாஸ்டரை கை கழுவச் சொல்வதால், அவர் கையைக் கழுவுவதா அல்லது கிளாசைக் கழுவுவதா என்ற மாபெரும் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பார்!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு