Published:Updated:

10 செகண்ட் ப்ளீஸ்..! - இருவரி சிலேடை உண்மைகள் #MyVikatan

Representational Image
Representational Image ( Alexas_Fotos from Pixabay )

இரு தலைப்புகளுக்கும் பொருந்தும்படி அமைந்த சில சிலேடை உண்மைகள்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

ஒரு சொல்லோ, சொற்றொடரோ பல பொருள்படும்படி அமைவதைத் தமிழில் `சிலேடை' என்று கூறுவர்.

இங்கு இரு தலைப்புகளுக்கும் பொருந்தும்படி அமைந்த சில சிலேடை உண்மைகள்...

குப்பை - பிரச்னை:

மனிதர்கள் கண்ட இடங்களில் எல்லாம் கொட்டி விடுவதால் பலரின் நிம்மதி கெட்டுப்போகிறது.

Representational Image
Representational Image
Delyth Williams from Pixabay

விமானம் - வாழ்க்கை:

மேலெழும்புவது விருப்பமாக இருப்பினும் தரையிறங்குவது கட்டாயமாகும்.

கல் - சொல்:

இலக்கின்றி வீசப்படும் போதெல்லாம் யாரோ சிலரைக் காயப்படுத்தி விடுகிறது.

தனிமை - பயணம்:

தாங்க முடியாத சோகம் ஏற்படும்போதெல்லாம் அதை நீர்த்துப்போகச் செய்யும் மாமருந்து.

பிளாஸ்டிக் - காதல்:

ஒருமுறை உருவாகிவிட்டால் பிறகு அழிக்கவே முடிவதில்லை.

மனநிலை - வானிலை:

எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை; தொடர்ந்து மாறிக்கொண்டேதான் இருக்கிறது.

Representational Image
Representational Image
Hans Kretzmann from Pixabay

கோபம் - அழுகை:

மனம் பலகீனமாக இருக்கும் போதெல்லாம் சட்டென வெளியே வந்துவிடுகிறது.

உண்மை - கற்பனை:

எவர் உதவியும் தேவையின்றி இயல்பாக மனதினுள் தோன்றும் அழகான ஒன்று.

விக்கல் - சிக்கல்:

தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்போது மனிதர்கள் விரைவில் சோர்ந்துபோய் விடுகின்றனர்.

பெருமை - சைக்கிள்:

காலில் போட்டு மிதிக்கும் போதெல்லாம் மனிதன் முன்னோக்கியே போகிறான்.

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு