Published:Updated:

`10 செகண்ட் லாக்டெளன் கதைகள்!' - வாசகர் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

வாசகர் மாணிக்கம் விஜயபானு, முத்தான 4 இருவரிக் கதைகளைப் பகிர்ந்திருக்கிறார்..

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

1) யாரும் இல்லாத தனி வீடுகளில் பூட்டை உடைத்துத் திருடும் கதிர், யுடியூபில் புதிதாகப் படிக்கத் தொடங்கினான், `ஆன்லைனில் அல்வா போல் திருடுவது எப்படி?' என்று.

Representational Image
Representational Image

2) நோவு, நொடி, கண் த்ரிஷ்டி இல்லாம இருக்க தாயத்து மந்திரித்துக் கட்டிவிடும் கருப்புசாமி, ரெண்டு நாளா தொடர்ந்து வரும் வறட்டு இருமல், காய்ச்சலுக்குப் பயந்து அரசு ஆஸ்பத்திரிக்குப் புறப்பட்டுப் போனார் - முகக்கவசத்தோடு.

3) அலுவலக உடுப்பு லாண்டரி செலவு, பெட்ரோல் செலவு ஒரு மாதம் மிச்சம் என்று மகிழ்ந்த கதிர், வீட்டிலிருந்து வேலை செய்து கூடிப் போன சிகரெட் எண்ணிக்கையைக் குறைப்பது எப்படி என்று புகைத்தபடியே யோசித்தான்.

Representational Image
Representational Image

4) வீட்டுக் கதவு தட்டுவது கேட்டு திறந்த அரசு மருத்துவரிடம், பக்கத்து வீட்டு டெய்லர் மகன் அப்பா தந்துவிட்டதாகக் கொடுத்தான் முகக்கவசத்தை... அவன் முகத்தில் கவசமின்றி.

- மாணிக்கம் விஜயபானு (டெக்சாஸ்)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு