Published:Updated:

`10 செகண்ட்ஸ் ப்ளீஸ்..!' -வாசகரின் Nano கதைகள் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

இரு வரிக் கதைகளும் கதைகளை முழுமையாக்கும் தலைப்பும்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கோபம் :

தொழிலாளிக்கு அலுவலகத்தில் இருந்து வீடு வருகிறது. முதலாளிக்கு வீட்டிலிருந்து அலுவலகம் போகிறது.

பால்யம்:

வலிப்பது போன்று நடிக்கும் குழந்தை, வலிக்காதது போன்று நடிக்கத் தொடங்கும்போது முடிவுக்கு வந்துவிடுகிறது.

Representational Image
Representational Image
Icons8 Team / Unsplash

புகழ்:

தொடர்ந்து பறப்பதற்கு வலிமையான சிறகுகள் இருந்தாலும், அவ்வப்போது நிலத்துக்கும் வந்து போகின்றன கழுகுகள்.

வெற்றி - தோல்வி:

நினைவுகளுடன் இறப்பதற்கும் கனவுகளுடன் இறப்பதற்கும் உள்ள வேறுபாடு.

வாழ்க்கை:

இன்றைக்கு வாழ்பவர்கள் ரசித்துக் கடக்கிறார்கள். நாளைக்கு வாழ்பவர்கள் சகித்துக் கிடக்கிறார்கள்.

கல்வி:

நினைவாற்றல் சோதனையில் வெற்றி பெறுவதே அறிவாற்றல் மிகுந்தவன் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது.

அறிவுரை :

அக்கறை மற்றும் பொறாமை என்ற இரண்டு பக்கங்களைக் கொண்ட நாணயமாகவே எப்போதும் இருக்கிறது.

Representational Image
Representational Image
Pixabay

அழுகை:

பேசத் தெரியாத வயதில் சத்தமாகவும் பேசத் தெரிந்த வயதில் மெளனமாகவும் வருகிறது.

நேரம்:

எப்படிப் பயன்படுத்துவது எனத் தெரியாதபோதெல்லாம் சரியில்லை என்ற பெயரைப் பெற்று விடுகிறது.

தப்புகள்:

தன்னுடையது எனும்போது மட்டும் மனிதன் வழக்கறிஞராக இருக்கிறான்.

பிறருடையது எனும்போது நீதிபதியாக மாறி விடுகிறான்.

-அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு