Published:Updated:

`செம்பும் ஈயமும் கண்ணாடியாகும் அதிசயம் வியப்பூட்டும்' - Aranmula Kannadi! |VIDEO

ஆறன்முளா கண்ணாடி

எந்த எந்திரங்களும் இல்லாம, பீங்கானைப் பயன்படுத்தாம ஈயத்தையும் செம்பையும் கொண்டு இங்கே தயாரிக்கப்படுற கண்ணாடியை உலகம் கொண்டாடுது. இந்தக் கண்ணாடிக்கு மத்திய அரசு புவிசார் குறியீடும் கொடுத்திருக்கிறது இன்னும் சிறப்பு.

`செம்பும் ஈயமும் கண்ணாடியாகும் அதிசயம் வியப்பூட்டும்' - Aranmula Kannadi! |VIDEO

எந்த எந்திரங்களும் இல்லாம, பீங்கானைப் பயன்படுத்தாம ஈயத்தையும் செம்பையும் கொண்டு இங்கே தயாரிக்கப்படுற கண்ணாடியை உலகம் கொண்டாடுது. இந்தக் கண்ணாடிக்கு மத்திய அரசு புவிசார் குறியீடும் கொடுத்திருக்கிறது இன்னும் சிறப்பு.

Published:Updated:
ஆறன்முளா கண்ணாடி

கண்ணாடி நம் வாழ்க்கையில தவிர்க்கமுடியாத பொருள். உள்ளதை உள்ளபடி காட்டக்கூடிய கண்ணாடியைக் குழந்தையின் மென்மையான இதயத்தோடு ஒப்பிட்டு சொல்வாங்க.

கண்ணாடி
கண்ணாடி

முதன்முதல்ல கண்ணாடி கண்டறியப்பட்டது ஒரு சுவாரஸ்யமான தற்செயல் நிகழ்வு. அந்த சம்பவம் கி.மு 5000-த்துல சிரியாவுல நடந்ததா சொல்லப்படுது. சிரிய கடற்கரை ஓரத்துல கட்டடம் கட்டுறதுக்கான பொருள்களை விற்கிற வியாபாரிகள் தங்கியிருந்துருக்காங்க. சமைக்கிறதுக்காக சில கற்களை எடுத்துவந்து அடுக்கி அடுப்பு மூட்டின வியாபாரிகள், பேச்சு சுவாரஸ்யத்துல தீ மூட்டுன விஷயத்தையே மறந்துட்டாங்க. ஒரு கட்டத்துல உஷ்ணம் தாங்காம அந்தக் கற்கள் உருகி பளபளப்பான திரவமா நிலத்துல உறைஞ்சிருச்சு. அதை பார்த்தப்போ பார்த்தவர்களோட முகங்கள் அதுல பிரதிபலிச்சுச்சு. இந்த நிகழ்வை ரோமானிய வரலாற்றாசிரியர் பாலினி பதிவு செஞ்சிருக்கார். இதுதான் கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டதற்கான தொடக்கம்ன்னு சொல்றாங்க. காலப்போக்குல கண்ணாடிகள் நம் வாழ்க்கையோட பாதியை ஆக்கிரமிச்சிருச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்போ நாம பார்க்கப்போறது, நம் தமிழகத்துல இருந்து கேரளாவுக்குப் போன கலைஞர்கள் அங்கே உருவாக்கின ஒரு கண்ணாடி, கலைப்பொருளா மாறி உலக அளவுல மிகப்பெரும் புகழையும் பெயரையும் எடுத்திருக்கிற ஒரு கதை.

ஆறன்முளா கண்ணாடி
ஆறன்முளா கண்ணாடி

கேரள மாநிலம் பத்தனம்திட்டா பக்கத்துல இருக்கு ஆறன்முளாங்கிற சின்ன நகரம். எந்த எந்திரங்களும் இல்லாம, பீங்கானைப் பயன்படுத்தாம ஈயத்தையும் செம்பையும் கொண்டு இங்கே தயாரிக்கப்படுற கண்ணாடியை உலகம் கொண்டாடுது. இந்தக் கண்ணாடிக்கு மத்திய அரசு புவிசார் குறியீடும் கொடுத்திருக்கிறது இன்னும் சிறப்பு. ரொம்பவும் காஸ்ட்லியான இந்த ஆரன்முளா கண்ணாடி முகம் பார்க்க மட்டுமில்லாம கலைப்பொருளாவும் வாங்கிச் சேகரிக்கப்படுது. பிரிட்டன் அருங்காட்சியகம் 45 செ.மீ உயரமுள்ள ஒரு ஆறன்முளா கண்ணாடியை தங்களோட அரிய பொக்கிஷங்களோட வரிசையில வச்சுப் பாதுகாக்குது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

500 ஆண்டுகளுக்கு முன்னால திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் மார்த்தாண்டவர்மா தன் தேசத்தில் இருந்த கோயில்களை திருப்பணி செய்ய முடிவு செஞ்சார். அதுக்காக தமிழகத்தோட சங்கரன்கோயில் பகுதியில இருந்து கைவினைக் கலைஞர்களை வரவழைச்சார். உலோக கைவேலைப்பாடுகள்ல பேர்போன அந்தக் கலைஞர்கள் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட 8 கோயில்கள்ல திருப்பணி செய்கிற பொறுப்புகளை ஏத்துக்கிட்டாங்க. ஆறன்முளை பார்த்தசாரதி கோயில் திருப்பணி பொறுப்பை ஏத்துக்கிட்டவங்க குறிப்பிட்ட நாள்களுக்குள்ள பணியை முடிக்கல. அதனால கோபமடைந்த மன்னர் கோயிலுக்குத் தர்றதா சொன்ன நிதியை நிறுத்திட்டார். மன்னரோட கோபத்தைத் தணிக்க நினைச்ச கலைஞர்கள், செம்பையும் ஈயத்தையும் குறிப்பிட்ட அளவுகள்ல கலந்து கண்ணாடி மாதிரி பளபளக்கிற ஒரு சூத்திரத்தைக் கண்டுபிடிச்சு பளபளக்கிற ஒரு கிரீடத்தை செஞ்சுக்கிட்டு மன்னரைப் போய் பார்த்தாங்க. கண்ணாடி மாதிரி பளபளத்த அந்த கிரீடத்தோட வேலைப்பாடுகள்ல மயங்கிப்போன மன்னர் அந்த மக்களைப் பாராட்டிப் பரிசு கொடுத்ததோட கோயில் பணிகளுக்கு நிதியள்ளிக் கொடுத்தார். அதோட கோயில் பணி முடிஞ்சதும் அந்தக் கலைஞர்களை ஆறன்முளாவிலேயே தங்கவச்சு, உலோகக் கண்ணாடித் தொழிலை செய்ய உதவிகள் செஞ்சார்.

ஆறன்முளா கண்ணாடி
ஆறன்முளா கண்ணாடி

இன்னைக்கு வரைக்கும் இந்த பாரம்பர்யத் தொழிலோட உலோக அளவீடுகள் அந்தக் குடும்ப வழிமுறைகள்ல வந்தவங்ககிட்ட மட்டுமே ரகசியமா இருக்கு. அவர்களைத் தாண்டி இந்தத் தொழிலை செய்றவங்க உத்தேசமான அளவைத்தான் பயன்படுத்துறாங்க. இப்படித் தொடங்கின இந்த கண்ணாடித் தொழில் இப்போ கேரளாவோட உலோகக்கலைக்கு அடையாளமா உலகெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கு.

ஆறன்முளா கண்ணாடி எப்படி தயாரிக்கப்படுது? அந்தக் கலைஞர்களோட வாழ்க்கை எப்படியிருக்குன்னு தெரிஞ்சுக்க ஆறன்முளாவுக்குப் பயணப்பட்டோம். 40 ஆண்டுகளா ஆறன்முளா கண்ணாடி தயாரிப்பில் ஈடுபட்டு வர்ற கோபககுமார்ங்கிற கலைஞர் நம்மை வரவேற்று, தன்னோட பட்டறைக்கு அழைச்சுட்டுப் போய் கண்ணாடி தயாரிப்பு தொழில் நுட்பங்களை பகிர்ந்துகிட்டார்.

ஆறன்முளா பஞ்சாயத்துல உள்ள வயல்வெளிகள்ல கிடைக்கிற களிமண்தான் இந்தக் கண்ணாடிக்கு மூலப்பொருள். ஆரம்பத்துல குங்குமச்சிமிழ்களுக்குள் சிறியளவுல கண்ணாடி வச்சு செஞ்சுக்கிட்டிருந்தாங்க இந்த மக்கள். அடுத்து கைபிடியோட கூடிய வால் கண்ணாடிகள் தயாரிச்சாங்க. அது கேரள பூஜைகள்ல வைக்கப்படுற அஷ்டமங்கல்யம்ங்கிற எட்டு பூஜை பொருள்கள்ல ஒன்னா மாறிடுச்சு.

ஆறன்முளா கண்ணாடி
ஆறன்முளா கண்ணாடி

இப்போ ஆறன்முளாவுல 20 கண்ணாடி தயாரிப்புப் பட்டறைகள் இருக்கு. ஆனால் பாரம்பர்யமான உலோகக் கலப்பு ரகசியம் ஆறன்முளாவில் இருக்கும் 8 குடும்பங்களுக்கு மட்டுமே தெரியும். அதேமாதிரி எந்த அளவுக்கு வெப்பநிலையில அந்த உலோகங்களை உருக்கணுங்கிறதும் அவங்க மட்டுமே அறிந்த ரகசியம்.

1 அங்குலத்துல இருந்து 2 அடி வரைக்கும் ஆரன்முளா கண்ணாடி கிடைக்கும். ரொம்பவே சவாலான தொழில். இந்தக் கண்ணாடி தயாரிக்கிறதுல ரெண்டுவிதமான பணிகள் இருக்கு. கண்ணாடி செய்றது, அதைப் பொருத்துறதுக்கு உலோகச் சட்டம் செய்றது.

நாம வழக்கமா பயன்படுத்துற கண்ணாடி, பாதரசம் பூசப்பட்டது. ஆறன்முளா கண்ணாடியில அப்படி எந்த ரசாயனமும் பூசப்படுறதில்லை. முழுக்க முழுக்க உலோகத்தைப் பக்குவப்படுத்தி பளபளப்பாக்கி உருவாக்கப்படுது இந்த கண்ணாடி.

ஆரன்முளா பஞ்சாயத்தில் இருக்கிற வயல்கள்ல கிடைக்கிற களிமண்ணோட சணல், டை சேர்த்து நல்லா அரைச்சு, கரு உண்டாக்குறாங்க. கண்ணாடியோட வடிவத்துக்கேற்ப இந்தக்கரு செய்யப்படுது. கருவோட முன்பக்கம் வாய்ப்பகுதி வழியா, இந்தக் குடும்பங்கள் மட்டுமே அறிஞ்சிருக்கிற விகிதாச்சாரப்படி செம்பும், ஈயமும் சேர்த்துச் செய்யப்பட்ட உலோகக் கட்டிகளை நிரப்பி வாயை அடைச்சு அதிகம் வெப்பம் தரக்கூடிய பெரிய கரி அடுப்புகளுக்குள்ள வச்சு வேகவைக்கிறாங்க. அந்த வெப்பத்துல ஈயமும் செம்பும் உருகி கருவோட வடிவத்துக்கேற்ற மாதிரி உருவம் பெறுது.

ஆறன்முளா கண்ணாடி
ஆறன்முளா கண்ணாடி

கருக்கள் வெந்து தணிஞ்சதும் அதை எடுத்து மணல் பகுதிகள்ல அடுக்கிக் குளிரவைக்கிறாங்க. பிறகு அதை உடைச்சு இறுகிப்போன உலோகத்துண்டை எடுக்குறாங்க. இதுதான் கண்ணாடியோட மூல வடிவம்.

அந்த உலோகத்துண்டை ஒரு மரச்சட்டத்துல பொருத்தி பக்கங்களைச் செதுக்கி வடிவாக்கி மணல்துகள்கள் கொண்ட காகிதத்துல அழுத்தமா தேய்க்கிறாங்க. தேய்க்கத் தேய்க்க அந்த உலோகம் பளபளப்பா மாறுது. ஓரளவுக்கு கண்ணாடி வடிவம் கிடைச்சபிறகு, தேங்காய் எண்ணெய் வச்சு சாக்கு மாதிரி கனமான ஒரு துணியால தேய்க்கிறாங்க. அந்த பிராசஸ் முடிஞ்சதும் ஒரு வெல்வெட் துணியில தேய்ச்சு பளபளப்பாக்குறாங்க. இதுல கண்ணாடி முழுமையான வடிவம் பெறுது.

10 கண்ணாடிகள் தயாரிச்சா அதுல 6 கண்ணாடிகள் தான் முழுமையான வடிவத்துக்கு வரும். அடுத்து கண்ணாடியைப் பொருத்துறதுக்கான உலோகச் சட்டம் தயாரிக்கணும் இதையும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே தயாரிக்கிறாங்க.

ஆறன்முளா கண்ணாடி
ஆறன்முளா கண்ணாடி

உலோகச் சட்டத்தோட அடிப்படைப் பாகத்தைத் தயாரிக்க டை பயன்படுத்துறாங்க. பிறகு அதை மென்மையான உளிகள், சிறிய ரம்பங்கள் பயன்படுத்தி அறுத்து பளபளப்பாக்குறாங்க. மெழுகுல மூலிகைகள் சேர்த்து செய்யப்படுற அரக்குல கண்ணாடியை இந்த உலோகச்சட்டத்தில பொறுத்துறாங்க. இந்த அரக்கோட செய்முறை ரகசியத்தையும் அந்த மரபுவழிக் குடும்பங்கள் மட்டுமே தெரிஞ்சு வச்சிருக்காங்க.

இந்தக் கண்ணாடிகள் கௌரவச் சின்னங்களா, நினைவுப் பொருள்களாக பரிசுகளாக உலகெங்கும் வாங்கப்படுது. ஐம்பதாண்டுகளுக்கும் மேல் சிறிதும் பழுதாகாம இருக்குங்கிறதுதான் இந்த கண்ணாடிகளோட சிறப்பு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism