Published:Updated:

பட் அந்த நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு பாஸ்! - அமெரிக்காவும் கொரோனா நிவாரண நிதியும் #MyVikatan

Trump
Trump ( Alex Brandon /AP )

இந்தச் செய்திகளில் ஓரளவு உண்மை இருந்தாலும் அங்கு இருக்கும் மக்களுக்கு அமெரிக்கா என்ன செய்தது என்ற கோணத்தில் நாம் பார்த்தால் பல ஆச்சர்யங்கள் இருப்பது தெரியவருகின்றன ...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அமெரிக்காவில் கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நாம் தினமும் கேட்டு வருகிறோம். அங்கு இதுவரை 12 லட்சம் பேர் இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினம்தோறும் 2000 நபர்கள் வரை மரணமடைகின்றனர். ஊடகங்களிலும் அமெரிக்கா திணறுவதைச் சுட்டிக்காட்டி அதனுடைய நம்பர் ஒன் வல்லரசு இடத்திலிருந்து விலகுவதாக செய்திகள் வெளியிடப்படுகின்றன. மேலும் அதிபர் டிரம்ப் இந்த இடர்பாடான நேரத்தில் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததுதான் இந்த நோய் தொற்று அதிகம் ஆனதற்குக் காரணம் என்ற செய்திகள் வருகின்றன. இந்தச் செய்திகளில் ஓரளவு உண்மை இருந்தாலும் அங்கு இருக்கும் மக்களுக்கு அமெரிக்கா என்ன செய்தது என்ற கோணத்தில் நாம் பார்த்தால் பல ஆச்சர்யங்கள் இருப்பது தெரியவருகின்றன.

இந்த நோய்த் தொற்று காரணமாக நமது நாட்டைப் போலவே அமெரிக்காவிலும் பல வணிக/ தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. மக்கள் அதிக அளவில் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அங்குள்ள தரவுகளின் படி ஏறக்குறைய நான்கு கோடி நபர்கள் தங்களுடைய வேலையை இழந்துள்ளனர்.

Representational Image
Representational Image

இந்த நோய் தாக்கத்திலிருந்து அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதற்கு அதிபர் டிரம்ப் போர்க்கால அடிப்படையில் 2.2 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை நிவாரண நிதியாக வழங்கினார் ( ஒரு ட்ரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி. இந்திய மதிப்பில் இது 15,000 லட்சம் கோடி மதிப்பு ஆகும்).

இந்த நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்டமாக ஒவ்வொரு நபருக்கும் 1200 அமெரிக்க டாலர்களை நிவாரணமாக வழங்கினார்.

அமெரிக்கா தரும் இந்த சலுகை ஆனது 75 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு குறைவாக ஊதியம் வாங்கும் அனைவருக்கும் முழுமையாக வழங்கப்படும். ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சம்பாதித்தால் அவர்களுடைய கூட்டு வருமானம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு இந்த தொகை முழுமையாக கொடுக்கப்படும். அமெரிக்க மக்கள் தொகையில் 43% மக்கள் 75 ஆயிரம் டாலருக்கு குறைவாக ஊதியம் பெறுகின்றனர்.

இதுபோல ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நாட்டுமக்கள் அனைவருக்கும் உதவி செய்வது ஹெலிகாப்டர் மணி என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பணத்தை வழங்குவதன் மூலம் அமெரிக்கர்கள் பொருளாதார இழப்பிலிருந்து ஓரளவிற்குக் காப்பாற்றப்பட்டனர்.

ஒருவர் 75 ஆயிரம் முதல் 100000 ஆயிரம் டாலர் வரை ஆண்டு ஊதியம் பெறுபவர்கள் ஆக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு முழுமையாக இந்த சலுகை கிடைக்காது. இதில் அவர்கள் வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் சற்று குறைவாக இந்த நிவாரணத்தொகை அவர்களுக்கு வழங்கப்படும். ஒருவர் ஆண்டு வருமானமாக ஒரு லட்சம் டாலருக்கு அதிகமான பெரும் பட்சத்தில் அவருக்கு எந்த சலுகையும் வழங்கப்பட மாட்டாது. பெரும் பணக்காரர்கள் இந்த பாதிப்பிலிருந்து தங்களால் தற்காத்துக் கொள்ள இயலும். அதனால் தேவையான மக்களுக்கே அரசின் முழு நிவாரணமும் செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் அமெரிக்கா இந்த சலுகையை வழங்கி வருகிறது

இது மட்டுமல்ல. நமது நாட்டில் வருங்கால வைப்புநிதி போல அமெரிக்க நிறுவனங்கள் தங்களுடைய ஒவ்வொரு பணியாளருக்கும் அவர்களின் பணி நீக்கத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு காப்பீடு எடுக்கப்பட வேண்டும். இந்தக் காப்பீட்டின் படி ஒருவர் வேலை இழந்தால் காப்பீட்டு நிறுவனம் ஒருவருக்குப் பணி இல்லாத ஒவ்வொரு மாதத்திற்கும் அவர் மீண்டும் பணிக்குச் செல்லும் வரை குறிப்பிட்ட தொகையை வழங்கும். இந்தத் தொகை சராசரியாக வாரத்திற்கு 300 முதல் 400 அமெரிக்க டாலர் ஆக இருக்கும். இதன் மூலம் வேலை இழந்த ஒவ்வொருவருக்கும் 1500 டாலர் வரை ஒவ்வொரு மாதமும் கிடைக்கும். இது பழைய நடைமுறை.

Representational Image
Representational Image

இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் அதிகமாக பணிநீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டதால் இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க அமெரிக்க அரசு மேலும் 600 அமெரிக்க டாலர்களை ஒவ்வொரு வாரமும் வழங்கி வருகிறது. அதனால் பணி நீக்க நடவடிக்கைக்கு உள்ளானவர்கள் மாதம் 4300 அமெரிக்க டாலர்கள் வரை பெற முடியும். இந்தச் சலுகையானது ஒவ்வொருவருக்கும் 12 வாரங்கள் என ஜூலை 31 வரை வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் 4300 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் மூன்று லட்ச ரூபாய் ஆகும்).இது பெருவாரியான அமெரிக்க மக்களின் மாத ஊதியத்தை விட அதிகமாகும். இதன் மூலம் வேலை இழந்த அமெரிக்க மக்கள் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. அமெரிக்க மக்களின் வாங்கும் திறனும் பாதிக்கப்படாத காரணத்தினால் நாட்டின் பொருளாதார நெருக்கடிகளும் பெருமளவில் விரைவில் சரி செய்ய முடியும்.

நமது இந்தியர்களில் பெருவாரியான மக்கள் அமெரிக்க நாட்டில் பணிபுரிந்து வருகின்றனர். இதில் கிரீன் கார்ட் பெற்றவர்கள் நிரந்தரமாக அமெரிக்காவில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள் ஆகும். இந்தச் சலுகைகள் அனைத்தும் இவர்களுக்கும் கிடைக்கும். மேலும் பெருவாரியான இந்தியத் தம்பதியர்கள் அமெரிக்க நாட்டில் தங்களது குழந்தைகளைப் பெற்றெடுத்து உள்ளனர். இந்தக் குழந்தைகள் அமெரிக்க பிரஜைகள் அவர். அதனால் இந்தச் சலுகைகள் கிரீன் கார்டு இல்லாமல் இருந்தாலும் ஓரளவிற்கு இந்தப் பெற்றோர்களுக்குக் கிடைக்கும்.

ஆனால் பெருவாரியான இந்தியர்கள் H1B விசா கொண்டு வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு எந்தச் சலுகையும் அரசாங்கத்திடமிருந்து கிடைப்பதில்லை. இவர்கள்தான் தனது சொந்த நாட்டிற்கும் திரும்ப முடியாமல் அமெரிக்க நகரங்களில் தமது வேலையை இழந்து பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு இந்திய அரசு உதவுவது மிகவும் முக்கியமானதாகும்.

Trump
Trump
Alex Brandon / AP

மேலும் அமெரிக்காவில் தனிநபர்களுக்கு மட்டுமல்லாது நிறுவனங்களுக்கும் பலவிதமான சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. ஒரு நிறுவனம் தனது எந்தப் பணியாளரையும் பணிநீக்கம் செய்யாமலிருந்தால் பல சலுகைகளை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் விமானப் போக்குவரத்து போன்ற நிறுவனங்கள் இயங்காததால் அதன் நஷ்டத்தை ஈடுசெய்ய பல சலுகைகளை வழங்கி உள்ளார். இதன் மூலம் அந்த நாடு இந்த நோய்த் தொற்றிலிருந்து விடுபடும் போது பொருளாதார நெருக்கடியிலிருந்து எளிதாக விடுபட முடியும்.

நமது கிராமப்புறத்தில் `யானை படுத்தாலும் குதிரை மட்டம்' என்ற ஒரு பழமொழி உள்ளது. அமெரிக்க நாடு தனது மக்களுக்கு வழங்கியுள்ள சலுகைகளைப் பார்க்கும் பொழுது இந்தப் பழமொழிக்கு நமக்கு நன்கு அர்த்தம் புரிகிறது.

வெளிமாநிலங்களிலிருந்து இந்த ஊரடங்கினால் கடந்த 40 நாள்களாக மாட்டிக்கொண்ட தொழிலாளர்களை ரயில் மூலம் நமது அரசு மீட்டு வருகிறது. அவர்கள் தனது சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்கு ஆகும் ரயில் கட்டணத்தை அந்தத் தொழிலாளர்களிடமிருந்து பெற்று மாநில அரசுகள் ரயில்வேயிடம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியதை நினைவுக்கூர்கிறேன்.

-ஷியாம் சுந்தர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு