Published:Updated:

தினசரி வெயிலை எவ்வாறு அளக்கிறார்கள்? - வாசகர் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image

``நம்மில் பெரும்பாலானோர், நண்பகல் 12 மணிக்குதான் உயர்ந்தபட்ச வெப்பநிலையை அளப்பதாக எண்ணுகின்றனர். அதுதான் இல்லை.''

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

தமிழகத்தின் அக்னி நட்சத்திரம் இப்போதே ஆரம்பித்துவிட்டது போன்ற ஓர் உணர்வு. தமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை உயர்ந்துவருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன், 5 நகரங்களில் 95 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலைக்கு மேல் உயர்ந்து சுட்டெரித்தது. வரும் காலங்களில் வெயில் உயருமா என்பது குறித்து ஆய்வு செய்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Representational Image
Representational Image

#இன்று வெயில் எவ்வளவு

ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சியிலும் நாளிதழ்களிலும் ஒவ்வொரு நகரத்தின் வெப்பநிலையைத் தெரிவிப்பார்கள்.

நம்மில் பெரும்பாலானோர், நண்பகல் 12 மணிக்குதான் உயர்ந்த பட்ச வெப்பநிலை அளப்பதாக எண்ணுகின்றனர். அதுதான் இல்லை.

ஒரு நாளின் அதிகபட்ச வெப்பநிலையை அளக்க, ஒவ்வொரு நாளும் பிற்பகல் 2 மணிக்கு மேல் 2-30 மணிக்குள் வெப்பத்தை அளவிடுகின்றனர்.

ஏனெனில், அப்போதுதான் வெப்பத்தினால் காற்று சூடாகி அக்காற்றின்மூலம் அளவிடமுடியும்.

குறைந்தபட்ச வெப்பநிலையை ஒரு நாளின் சூரிய உதயத்திற்கு முன்பு கணக்கிடுகின்றனர்.

உதாரணத்திற்கு, 6.20 மணிக்கு சூரிய உதயம் ஆகிறதென்றால் அதற்கு முன்பு உள்ள வெப்பநிலையைக் குறைந்தபட்ச வெப்பமாக அளவிடுகின்றனர்.

வெண்மை நிறப்பெட்டி
வெண்மை நிறப்பெட்டி

#வெள்ளைப் பெட்டி

வேறு வண்ணங்களில் இல்லாது வெள்ளைப் பெட்டியினுள் வெப்பநிலையை அளக்கும் தெர்மாமீட்டர் வைக்கப்பட்டிருக்கும். இது, காற்றுப் புகும் வகையில் தரையிலிருந்து 1.2 மீட்டர் உயரத்தில் நிரந்தரமாய் அமைக்கப்பட்டிருக்கும். ஏனெனில், பூமியின் வெப்பம் தாக்கமலிருக்க இவ்வகை உயரத்தில் வைத்து அளவிடுகின்றனர். மேலும், இப்பெட்டியை வடக்கு நோக்கி இருக்குமாறு அமைக்கின்றனர். ஏனெனில், கிழக்கு மேற்காக வைத்தால் சூரியன் உதித்தல் மற்றும் மறைதலால் இடையூறு ஏற்படாதிருக்க இந்த ஏற்பாடு.

#தெர்மாமீட்டர்

இது ஒரு நாளின் உயர்ந்த மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையை அளக்கப் பயன்படும். U வடிவில் இருக்கும் இக்குழாயில், பாதரசம் மற்றும் ஆல்கஹால் நிரப்பப்பட்டிருக்கும். பாதரசம் கண்ணாடியில் ஒட்டாது. வெப்பத்தினால் உருகாது. சிறிய வெப்பநிலை மாற்றத்திற்கு அதிக அளவிலும் சீராகவும் விரிவடையும்.

Representational Image
Representational Image

இது, அதிகபட்சமாக 115 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலையைக் காட்டும்.

உச்சபட்ச தெர்மாமீட்டருக்குள் பாதரசம் வெப்பத்தினால் விரிவடைந்து, உந்தி மேலே தள்ளி, அந்நாளின் உச்சபட்ச வெப்பநிலையைக் காட்டும். தெர்மாமீட்டரினுள் மற்றொரு திரவமான ஆல்கஹால் உள்ளது. இது, வெப்பநிலை குறையும்போது ஆல்கஹால் சுருங்குவதன்மூலம்

ஊசி, மேல்நோக்கி இழுக்கப்படுவதால் அன்றைய நாளின் குறைந்தபட்ச வெப்பநிலையை குறித்துக்கொள்ளலாம். ஆல்கஹால் -89 டிகிரி செல்ஷியஸ் வரை காட்டும் என்பதால், குறைந்தபட்ச வெப்பநிலையை அளவிட மிகவும் உதவுகிறது.

#சராசரி

உதாரணத்திற்கு, உயர்ந்தபட்ச வெப்பநிலை 38 டிகிரியும், குறைந்த பட்சம் 30 டிகிரியும் பதிவாகியிருந்தால், இரண்டையும் கூட்டி இரண்டால் வகுக்க நமக்கு 38 டிகிரி சராசரி வெப்பநிலை கிடைக்கும். இதுவே அந்நாளின் வெப்பநிலையாகக் கருதப்படுகிறது.

Representational Image
Representational Image

#இடத்திற்குத் தகுந்தாற்போல் மாறும்

வெப்ப அளவுமானி காட்டுகிற வெப்பத்துக்கும், தரை வெப்பத்துக்கும் வித்தியாசம் இருக்கும். ஏனெனில், சில பகுதிகள் அதிக வெப்பமாகவும், மண் சாலைகளில் குறைவான வெப்பமும் பதிவாவதைக் காணலாம்.

கடல் பகுதிகளில் 37 டிகிரி செக்‌ஷியஸ் வரை வெப்பம் பதிவாகி, உட்புறப் பகுதிகளில் 40 டிகிரி செல்ஷியஸ் பதிவானால், அதை அனல் காற்றுடன்கூடிய வெப்பம் என்று சொல்கிறோம். அதாவது, வழக்கமான வெயில் அளவைவிட 4 முதல் 6 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகரித்தால், அதை அனல் காற்று என்று சொல்வோம். இதுவே 6 டிகிரி செல்ஷியஸுக்கு அதிகமாக இருந்தால், கடுமையான அனல் காற்று எனலாம்."

Representational Image
Representational Image

இப்படியே இருந்துவிடுமோ என எண்ணாமல், இப்படி இருக்கக் கூடாது என நினைப்போம்.

வெப்பநிலையைக் குறைக்க நாமும் முயற்சி எடுத்தால்தான் வாழத் தகுந்த பூமியை நன்கு வசிக்கத் தகுந்த பூமியாக மாற்றலாம்.

-மணிகண்ட பிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு