Published:Updated:

`இங்கு வரும் எழுத்தாளர்கள் டெட்லைனுக்குள் வேலை முடிக்காமல் அனுப்பமாட்டோம்!' - அடடே டோக்கியோ கஃபே

Manuscript Writing Cafe ( Manuscript Writing Cafe page )

இந்த கஃபேவுக்குள் நுழைந்ததும், எழுத்தாளர்கள் தங்கள் பெயர், செய்ய வேண்டிய வேலை, அதற்கான டெட்லைன், வேலையைத் தொடங்கும் நேரம், முடிக்க வேண்டிய நேரம் போன்றவற்றை எல்லாம் கார்டில் பூர்த்தி செய்ய வேண்டும். அவர்கள் எத்தனை பக்கங்களை எழுத நினைக்கிறார்கள் என்பதையும் அதில் குறிப்பிடலாம்.

எழுத்தாளர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது, ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் உள்ள Manuscript Writing Cafe. இந்த கஃபேவுக்குள் நுழைந்ததும், எழுத்தாளர்கள் தங்கள் பெயர், செய்ய வேண்டிய வேலை, அதற்கான டெட்லைன், வேலையைத் தொடங்கும் நேரம், முடிக்க வேண்டிய நேரம் போன்றவற்றை எல்லாம் கார்டில் பூர்த்தி செய்ய வேண்டும். அவர்கள் எத்தனை பக்கங்களை எழுத நினைக்கிறார்கள் என்பதையும் அதில் குறிப்பிடலாம். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, அவர்களது வேலை எந்த அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை மேனேஜர் கேட்பார். வேலையை அவர்கள் முடிக்கும் வரை அந்த இடத்தை விட்டு வெளியேற முடியாது.

Cafe
Cafe

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த ரெஸ்டாரன்டில் மூன்று வகையான இருக்கை அமைப்புகள் உண்டு. நான்கு கவுன்டர் இருக்கைகள், 4 சன்னல் இருக்கைகள், 1 டேபிள் இருக்கை என மொத்தம் 10 இருக்கைகள் உள்ளன. அனைத்து இருக்கைகளிலும் லேப்டாப், சார்ஜர், அதிவேக இணைய வசதிகள் இருக்கும். எழுத்தாளர்களை புத்துணர்ச்சியாக்க கெட்டிலில் வெந்நீர், காபி, பிளாக் காபி, ஜாப்பனீஸ் காபி அன்லிமிட்டடாக வழங்கப்படும். வெளியே உள்ள டெர்ரஸில் புகைப்பவர்களுக்கென தனி இருக்கைகள் உள்ளன. இதற்குக் கட்டணமாக, கஃபே முதல் 30 நிமிடங்களுக்கு சீன பண மதிப்பில் 130 யென் வசூலிக்கிறது. அதன் பிறகு ஒவ்வொரு மணிநேரத்துக்கும் 300 யென் வசூலிக்கிறது.

கஃபேவுக்குச் செல்லும் எழுத்தாளர்கள், அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் வேலையைக்கூட அங்குள்ள சூழல் மற்றும் விதிகளால் விரைவில் முடித்துவிடுவதாகத் தெரிவிக்கின்றனர்.

அட!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism