Published:Updated:

2019 டாப் 25 பரபரா

stalin
பிரீமியம் ஸ்டோரி
stalin

தமிழில் பிடிச்ச வார்த்தை மன்னிப்பு!

2019 டாப் 25 பரபரா

தமிழில் பிடிச்ச வார்த்தை மன்னிப்பு!

Published:Updated:
stalin
பிரீமியம் ஸ்டோரி
stalin

ஜோக்கிழார் சேட்டைகள்!

ப்படியோ முதல்வரானாலும் நாற்காலியை இறுக்கிப்பிடித்து நான்காண்டுகளைக் கடத்தியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, இந்த ஆண்டு செய்தது எக்கச்சக்க காமெடி! கோட்சூட்டின் ப்ளஸ் மைனஸ்களை கோபிநாத்திடம் கேட்டறிந்து, சூட்கேஸோடு விமானம் ஏறினார். அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் என கோபால் பல்பொடி விளம்பரம்போலச் சுற்றிக்கொண்டிருந்தவரை `உலகம் சுற்றும் வாலிபன்' என போஸ்டர் அடித்துக் குதூகலித்தனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

2019 டாப் 25 பரபரா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``நானும் விவசாயிதான். மண்புழுபோல விவசாயிகளின் நண்பனாக நான் இருக்கிறேன்’’ என, தற்காலத்துத் தமிழ் சினிமா ஹீரோக்களைப்போல் விவசாய பன்ச் அடித்தவருக்கு `கடவுள் எனும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி' என போஸ்டர் அடித்து ரத்தத்தின் ரத்தங்கள் மீண்டும் எம்.ஜி.ஆரை ஒரண்டை இழுக்க, ஈ.பி.எஸ்ஸோ, ``அரசியலில் சிவாஜியின் நிலைதான் ரஜினிக்கும் கமலுக்கும் ஏற்படும்’’ என நேரடியாக சிவாஜியையே ஒரண்டை இழுத்தார். ``டாக்டர் பட்டம் பெற்றுள்ளதால் பொறுப்புகள் கூடியிருக்கிறது’’ எனப் பெருமிதப்புன்னகையை அவிழ்த்து விட்டு, மோடிக்கும் சீன அதிபருக்கும் பேனர் வைக்க நீதிமன்றத்தை நாடியதில் ரத்தத்தின் ரத்தங்கள் பலருக்கே ரத்த அழுத்தம் எகிறியது. சேலம் அமெரிக்காபோல் மாறிவருகிறது, மதுரை மங்கோலியாபோல் மாறிவருகிறது, சென்னை சோமாலியாபோல் மாறிவருகிறது என எடப்பாடி உளறிக்கொட்டியதில், மக்கள் கடுப்பில் ஜோம்பிகளாக மாறினர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழில் பிடிச்ச வார்த்தை மன்னிப்பு!

மொரட்டு உ.பி-கள் ஸ்டாலினை பிரியாணிக் கடைக்கும் பியூட்டி பார்லருக்கும் கால்கடுக்க நடக்கவைத்து மன்னிப்பு கேட்க வைத்தார்கள். சென்ற ஆண்டில் அதிகமுறை மன்னிப்பு கேட்டவர்கள் பட்டியலில் `அசுரன்' சிவசாமியையும் `சூப்பர் டீலக்ஸ்' அற்புதத்தையும்விட அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார் மனிதர்.

Stalin,Udhayanidhi Stalin
Stalin,Udhayanidhi Stalin

அப்பா தலைவர் ஆனதால், மகன் இளைஞரணிச் செயலாளர் ஆனார். திருவாரூர் தேர்தலில் உதயநிதி போட்டியிடப் போவதாகக் காலையில் புரளி கிளம்பியபோது `உதயநிதிக்கு என்ன அரசியல் தெரியும்' எனக் கடுப்பான உ.பி-கள், மாலையில், `நயன்தாரா, சந்தானம் ரசிகர்கள் ஓட்டு போட்டாலே ஜெயிச்சுடலாம்' என மனம் மாறியதில் தெரிந்தது உதயண்ணாவின் மகத்துவம். `விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நிற்கவேண்டும்', `விவேகானந்தா நகர் கவுன்சிலர் ஆகவேண்டும்' என விருப்ப மனுக்களையும் அடித்து நகர்த்தியதில் ஆனந்தக்கண்ணீர் விட்டார் இரண்டாம் ஸ்டாலின்.

சங்கத்தைக் கலைங்கடா!

ரசியலுக்கு வந்து கேட்டை ஆட்டத் தொடங்கியதில் இருந்து ஏகப்பட்ட என்டர்டெயின்மென்ட் கொடுத்த தீபா, தீவிர அரசியலிலிருந்து விலகியதுதான் சென்ற ஆண்டின் மிகப்பெரும், தொண்டையை அடைக்கும் துக்கம்.

 தீபா
தீபா

மாதவனைக் கட்சியிலிருந்து நீக்கி, பிறகு கட்சியில் சேர்த்து, டிரைவர் ராஜாவைக் கட்சியில் சேர்த்து, பிறகு கட்சியிலிருந்து நீக்கி எனக் கண்ணாமூச்சி விளையாட்டு காட்டிக்கொண்டிருந்த தீபா, `காலையில ஆறுமணிக்கு போன் பண்ணி தொண்டர்கள் எழுப்புறாங்க' என்று கண்ணைக்கசக்கிப் பொது வாழ்க்கைக்கு வைத்தார் ஃபுல் ஸ்டாப். மாதவன், ராஜா, இத்தணூண்டு கட்சி என்று `முத்து' ரஜினி மாதிரி மொத்தத்தையும் அ.தி.மு.க-வுக்கே எழுதிக்கொடுத்தார். அப்புறம், ஜெயா பயோபிக் எடுப்பவர்களுக்கு எதிராகக் கொடிபிடித்து கோர்ட் ஏறினார்.

வராத போரின் கடைசி குண்டு!

`ஈயம் பூசினமாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும்' என்று எல்லாப்பக்கமும் பூசியவர் `எனக்கு மட்டும் காவிச்சாயம் பூசாதீங்க' என்று காவி ஹோலிக்குக் கடிவாளம் போட்டார். ``பொதுவான மொழி இருந்தால் நல்லது. ஆனால், மொழியைத் திணிக்கக்கூடாது’’ என்று சுத்தவிட்டு சுத்தவிட்டுச் சுடச்சுட சுண்ணாம்பு அடித்தார்.

rajinikanth
rajinikanth

காஷ்மீர் நடவடிக்கையை வரவேற்கிறேன். பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையை வரவேற்கிறேன் என வரவேற்பு அறிக்கை விட்டதிலேயே பிரின்டரில் பாதி மை தீர்ந்துபோனது. தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது எனப் பத்தாயிரத்து முந்நூற்றுப் பதின்மூன்றாவது முறையாகப் பரபரப்புப் பேட்டி கொடுக்க, பிரஷர் மாத்திரையை வாயில் போட்டார்கள் ரஜினி ரசிகர்கள். ``மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணன்-அர்ஜுனன் போன்றவர்கள்’’ எனப் பேசி மகாபாரத மங்காத்தா ஆடினார். இருந்தாலும் `வலையை விரிப்போம்; வாளை மீனு சிக்கும்' என்று வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்தது மோடி அரசு. ஆனால் ரஜினியோ, `ச்சும்மா ஒளி' என்று ஒளிந்து விளையாடுகிறார்.

வேட்டி வேட்டி வேட்டி கட்டு!

புதுப்புது இந்தியாவாகப் பெற்றெடுத்ததாலோ என்னவோ, `இந்தியாவின் தந்தை' என மோடிக்குப் பெயர் சூட்டி, காதணி விழாவும் நடத்திவிட்டு அனுப்பினார் டிரம்ப். தமிழ்நாட்டை வளைச்சே ஆகணும்டா விருமாண்டி என்று விதவித கெட்டப்கள் போட்டார் மோடி. தலதீவாளி வந்த மருமகன் போல வேட்டி - சட்டை கட்டி, சீன அதிபரைச் சிதறவிட்டார்.

மோடி
மோடி

தப்புத்தப்பாய்த் திருக்குறள் சொல்லித் தாறுமாறாய் எகிறவைத்தார். தாய்மொழிக்கெல்லாம் ஆப்புவெச்சு, தாய்லாந்தில் திருக்குறளை வெளியிட்டார். சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு `புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம்' என்று அவர் சூட்டிய பெயரைச் சொல்லி முடிப்பதற்குள் மூன்று ரயில்கள் கிளம்பிவிடுவது பெருஞ்சோகம். சாலியே, தமில்நாட் கோ வண்க்கம்!

மாறி - 3

ஒரே ஆண்டில் மூன்று கட்சிகளில் இருந்து, முப்பரிமாணம் அடைந்து, அந்நியன் விக்ரமுக்கே டஃப் ஃபைட் கொடுத்திருக்கிறார் மனிதர். இருக்கின்ற இடத்திலேயே, இருக்கின்ற மேடையிலேயே இன்னொரு கட்சிக்குத் தாவும் தைரியமும் தன்னம்பிக்கையும் தனக்கு மட்டும்தான் இருக்கிறதென அகில உலகத்துக்கும் உரக்கச் சொன்னார்.

 ராதாரவி
ராதாரவி

நயன்தாரா குறித்து எதையோ பேசப்போய் சர்ச்சைகள் கிளம்ப, `கோலமாவு கோகிலாவையே வம்பிழுக்கிறியா' எனக் கொந்தளித்தனர் லேடி சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக ராதாரவியை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கியது தி.மு.க. அப்புறம் முதல்வர் முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தார். அங்கு என்ன வாய்த்தகராறோ, வாய்க்கால் தகராறோ, அ.தி.மு.க-விலிருந்து நேரடியாக பா.ஜ.க-வில் இணைந்துவிட்டார். இனி ராதாரவி, வேறு ஒரு கட்சியில் இணைய வேண்டுமென்றால் அவரே கட்சி ஆரம்பித்தால்தான் உண்டு எனக் கிச்சுகிச்சு மூட்டினர் நெட்டிசன்ஸ்.

காப்பி சாப்டீங்ளாண்ணா...

புதுப்படங்களின் போஸ்டர்கள், பாடல்கள், டிரெய்லர்கள் வெளியாகும் சமயத்திலெல்லாம், `எங்கேயோ பார்த்த மயக்கம். எப்போதோ வாழ்ந்த நெருக்கம்' எனத் துப்பு துலக்கிப் பார்த்து, துப்ப ஆரம்பித்தனர் சினிமா ரசிகர்கள்.

அனிருத்
அனிருத்

இமான், கௌதம் மேனன், பாண்டிராஜ், அட்லீ என இந்த ஆண்டு ஜெராக்ஸ் கடைகள் ஏராளம். சென்ற ஆண்டில் அரைத்த காப்பிக்கொட்டையை யெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, புதுக் கொட்டையை வறுக்கலாம் என ரசிகர்கள் மனதைத் தேற்றிக்கொண்டு நிற்க, பாதி `வந்தேன்டா பால்காரன்' பாடலும் மீதி `தண்ணிக்குடம் எடுத்து' பாடலுமாகப் பாலும் தண்ணியும் கலந்து மீண்டும் காப்பி போட்டார் அனிருத். நெட்டிசன்கள் ச்சும்மா கிழிகிழித்தனர்.

வந்தா ராஜாவாத்தான், ஸாரி, வந்தாத்தான் வருவேன்!

காலையில் வருவேன், மாலையில் செல்வேன், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறைகளில் விடுமுறை வேண்டும் என ஷூட்டிங் செல்வதற்குக்கூட ஸ்கூல் குழந்தைகளின் டைம் டேபிளைக் கையிலெடுத்தார் லிட்டில் சூப்பர் ஸ்டார். சென்ற ஆண்டு, கால் டாக்ஸி டிரைவர்களைவிட அதிகம் டிராப் செய்தது தானைத் தலைவன் எஸ்.டி.ஆர்தான் என்கிறது ஆய்வறிக்கை!

2019 டாப் 25 பரபரா

`மாநாடு' படம் டிராப் என்ற செய்தி வந்ததும், அதற்குப் போட்டியாக அவரே `மகா மாநாடு' என்ற படத்தை இயக்கி நடிக்கப்போவதாகச் சொன்னார். பிறகு, மாநாடு படத்தில் மீண்டும் நடிக்கப்போவதாகச் சொல்லிவிட்டு, `மகா மாநாடு' படத்தை டிராப் செய்தார். கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கும் படமும் எப்போது டிராப் ஆகும், மறுபடியும் ஸ்டார்ட் ஆகும் என்பது யாருக்கும் தெரியாது. இதெல்லாம்விட போனவாரம் பாட்டுப்போட்ட பெரியாரை டிராப் பண்ணிவிட்டு, ஐயப்பனை பிக்கப் பண்ணியது அதிரடி, காமெடி சரவெடி!

டப்புச்சிக்கு தப்பு தப்பு!

சேரன் ஆர்மிக்கும் மீரா ஆர்மிக்கும் சண்டை. இடையில, இந்த பாத்திமா பாபு ஆர்மி வந்தால் கேங் வார் ஆகிடும் குமாரு' என இணையத்தில் ராணுவத்தளவாடங்கள் அமைத்து ஆர்மிகள் அடித்துக்கொண்டன. `கவினும் லாஸ்லியாவும் காய்கறி வெட்டும்போது செய்யும் காரியத்தைப் பாருங்களேன்' என யூடியூபும் வியூவ்ஸை அள்ளிக்குவித்தது.

2019 டாப் 25 பரபரா

பெண்களெல்லாம் சேர்ந்து ஆண்களை கார்னர் பண்றதாச் சொல்லி, `வி ஆர் தி பாய்ஸ்'னு சொல்லி ஆண்கள் தனி டீம் ஆரம்பிச்சாங்க. நூறு நாள்களில் நூடுல்ஸைவிட அதிகமாய் சிக்கல்கள் ஏற்பட்டு ஒரு நிமிடம் யோசித்துப்பார்த்து, சித்தப்பு சரவணன்போல் `குப்'பென அமர்ந்துவிட்டது தமிழ்ச்சமூகம். கடைசியில், `அன்பு ஒன்றுதான் அநாதை' என்பதே கதை சொல்லவரும் நீதியென கமல் கைகளைக் கட்டிப்பிடித்துச் சொல்லிமுடிக்க, சேரப்பாவைவிடக் குலுங்கிக் குலுங்கி அழுதது ரசிகர் கூட்டம். ஊ...ஊ...ஊ...

அன்னாசி, மீனாட்சி, தீவுக் கதை என்னாச்சி?

கல்கி பகவான் பல சோதனைகளில் சிக்க, இன்னொருபக்கம் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் வீடியோக்களாக இறக்கி கிறுகிறுக்கவைத்தார் நித்யானந்தா. குழந்தைகளைக் கடத்தி அடைத்து வைத்ததாக வழக்கு பாய, காலாவதியான பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு கைலாசாவுக்குப் பறந்தார் நித்தி.

நித்யானந்தா
நித்யானந்தா

இப்போது, தனிநாடு, தனிபாஸ்போர்ட் எனத் தீவுக்கு நடுவிலிருந்து தண்ணிகாட்டிக்கொண்டிருக்கிறார். மாஸ் கிராஃபிக்ஸ் வீடியோக்களில் இருந்து மோட்டிவேஷனல் வீடியோவுக்கு மடை மாறினார். ``நான் தாமதமாக எழுந்ததால், சூரியனைக் கொஞ்சம் தாமதமாக உதிக்கச் சொன்னேன்’’ வகையறா கன்றாவிகளை எல்லாம் இந்த ஆண்டும் காசா, பணமா எனக் கரியை அள்ளிப்போட்டார். கமலா கைலாசா அப்னா மேரா டக்கரு நித்தியே!

ஒரு கதை சொல்லட்டுமா ஒறவே!

விக்கரவாண்டித் தொகுதித் தேர்தல் பிரசாரத்தின்போது, ``ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம்’’ எனப் பேசி, பக்கத்து டேபிள் பில்லுக்கும் அண்ணன் வான்டடாக வந்து மொய் வைக்க, தமிழகம் எங்கும் சர்ச்சை கிளம்பியது.

2019 டாப் 25 பரபரா

தம்பிகளெல்லாம் தட்டச்சில் களமாட, பனங்காட்டுப்படை ஹரிநாடாரைவிடக் குறைந்த வாக்குகள் பெற்று அதிர்ச்சி கொடுத்தது நாம் தமிழர் கட்சி. அண்ணன் செய்த பெருங்கூத்து, சிங்களப்பயணக் கதையின் அடுத்த சீசனை அவிழ்த்து விட்டதுதான். `ஓங்கில் கறி வறுத்துவெச்சுருந்தாய்ங்க. ரசத்துக்குத் தொட்டுக்கிட்டேன். சம்பலைத் தொட்டு சப்பாத்தி சாப்பிட்டேன்' என மிலிட்டரி ஓட்டல் மெனுவை மனப்பாடமாக ஒப்பிக்க, தம்பிகளே டயர்டானார்கள். ``நான் சாப்பிடும்போது பின்னாடி ஒருத்தர் உட்கார்ந்து லிஸ்ட் எடுத்தார்’’ என ஒரேயடியாய் பெரிய அணுகுண்டை வீச, மசாலா வாசம் கமகமக்க மீம்ஸ்கள் பறந்தன.

கொஞ்சம் நடிக்காதீங்க பாஸ்!

டிக் டாக் செயலியைப் பயன்படுத்தவும், டிக் டாக் வீடியோக்களை ஊடகங்கள் பயன்படுத்தவும் இருந்த தடையை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீக்கிய அன்றைய தினத்தை ``நெஞ்சு ஜிகுஜிகுஜா...’’ என சுதந்திர தினமாகக் கொண்டாடித் தீர்த்தனர் டிக் டாக் வாசிகள்.

2019 டாப் 25 பரபரா

`ஏலே செத்தப்பயலே, நாரப்பயலே' என பேப்பர் ஐ.டி-யைத் திட்டித் தீர்த்த ஜி.பி.முத்துதான், சென்ற ஆண்டு இன்டர்நெட் டேட்டாவை ஜிபி, ஜிபியாக முழுங்கிய டிக் டாக் திமிங்கலம். `ஆதித்யா வர்மா' டிரெய்லரின் கீழ், `வணக்கம்டா மாப்ள, பாலா மாமா தேனியிலிருந்து' என குபீர் கமென்ட் போட்டதெல்லாம் வெறித்தனம்! இன்னொரு புறம், சாதிப் பெருமை பேசி, டிக்டாக் செயலியை சாதிச் சண்டை மைதானமாக்கி, வாயிலும் காதிலும் ரத்தம் வழியத் திரிந்தார்கள் சாதி வெறியர்கள்.

நில்...கவனி...செல்!

ரண்டு தேர்தலிலும் மூன்றாம் இடத்தைக்கூட சீமானுக்கும் கமல்ஹாசனுக்கும் பறிகொடுத்துவிட்டு, காலிப் பரிசுப்பெட்டியைக் கண்ணீரால் நிரப்பிக்கொண்டிருந்தார் தினகரன்.

2019 டாப் 25 பரபரா

டி.டி.வி-யின் அரசியல் பயணம் டிடி டி.வி-யாக மங்கிப்போகிறதென நினைத்து டி.டி.ஹெச் பக்கம் தாவினார்கள் அ.ம.மு.க காரர்கள். செந்தில் பாலாஜி, தங்கத்தமிழ்ச் செல்வன், புகழேந்தி என்று கட்சியின் முன்னணித் தலைவர்களெல்லாம் தி.மு.க-விலும் அ.தி.மு.க-விலும் ஐக்கியமானார்கள். கடைசியில், அந்த ஸ்லீப்பர் செல்கள் அவர் கட்சியிலேயேதான் இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது சென்ற ஆண்டில்தான்.

அப்பா... செஞ்சது தப்பா?

`இரண்டு திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி வைக்கமாட்டோம். பத்திரம் எழுதித்தரவா?' என்று வீறாப்பாய்ப் பேசிய ராமதாசும், `டயர் நக்கி' என்று விமர்சித்த அன்புமணியும் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து மாம்பழ ஜூஸில் உப்பை அள்ளிப்போட்டார்கள். ``பூத்தில் நாமதான் இருப்போம்.

2019 டாப் 25 பரபரா

புரியுதுல்ல’’ என `அதாம்லே வர்கீசு' ஸ்டைலில் பன்ச் எல்லாம் அடித்தார். பிறகு என்ன நினைத்தாரோ `என்னை எப்படியாவது ஜெயிக்க வெச்சுருங்க' என, பிரசாரத்திலேயே கண்ணீர்விட்டுக் கதறினார். வந்த ரிசல்ட்டோ அன்புமணியின் அழுகையைக் கூட்டியது. கூடவே, `முரசொலி அலுவலகம் இருக்கும் மண், பஞ்சமி மண்' என ஸ்டாலின் மண்டையையும் சூடாக்கினார். இருந்தாலும், `சட்னி கெட்டுப்போயிடும்னு முன்னாடியே தெரியும். அதான் இட்லிப் பொடி அரைச்சு வெச்சேன்' என்கிறமாதிரி முன்கூட்டியே ராஜ்யசபா எம்.பி சீட் ஒன்றை வாங்கி வைத்துக்கொண்டு கெத்து காட்டினார்கள் மாம்பழ மருத்துவர்கள்.

பன்னீர்ப் புய்ப்பங்கள்!

தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே ஓ.பி.ரவிந்திரநாத் குமாருக்கு எம்.பி எனக் கல்வெட்டு வைத்துப் பக்கத்திலேயே உட்கார்ந்துகொன்டார் முன்னாள் போலீஸ்காரர் ஒருவர். தஞ்சாவூர்ப் பெரியக்கோழியைக் கட்டியது நம்ம ஆட்கதேன்.

2019 டாப் 25 பரபரா

எர்ணாவூர் எருமை மாட்டைக் கட்டியது நம்ம ஆட்கதேன் என மேடையில் ஹெலிகாப்டர் ஷாட் அடிக்கிறேன் என எல்.பி.டபிள்யூ ஆனார் ஓ.பி.ஆர். நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலுவிடம் `முதுகெலும்பு இல்லாத ஆள், உக்காரு' என ஏறு வாங்கிவிட்டு, துக்கத்தைத் தணிக்க மோர் வாங்கிக் குடித்தார். வெளிநாடுக்குச் சென்று விருதுகளை வாரிக்குவித்து வீட்டுக்குத் திரும்பிய பன்னீர் செல்வத்திடம், `ஈ.பி.எஸ் டாக்டர் பட்டம் வாங்கிட்டார். நீங்க ஒரு கம்பவுண்டர் பட்டமாவது வாங்குங்கண்ணே' எனக் கோக்குமாக்குக் கோரிக்கை வைத்திருப்பார்கள் பன்னீரின் புஷ்பங்கள். ஓ.பி.எஸ்ஸும் ஓ.பி.ஆரும் `டாடி டாடி... ஓ மை பேட்டா' எனப் பாட்டுப் பாடிக்கொண்டு ஒரேமாதிரி காஸ்ட்யூமில் திரிந்த காட்சிகளெல்லாம் கனவில் வந்து டார்ச்சர் செய்துகொண்டிருக்கின்றன.

ஃப்ளைட்டு பற பற!

ந்த வருடம் ஃபாரீன் டூர் வருடம். தமிழக அமைச்சர்களின் பாஸ்போர்ட்டில் மானாவாரியாய் எட்டுப் புள்ளி ஒண்ணு கலர்க் கோலம் போட்டு விளையாடினார்கள் குடியுரிமை அதிகாரிகள்.

2019 டாப் 25 பரபரா

ஒருபக்கம் மிஷன் இம்பாஸிபிள் படத்தில் மிஸ்டர் பீன் நடித்ததுபோல எடப்பாடி கோட் சூட் போட்டுக் கலக்க, மறுபக்கம் சாம்பார் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ளக் குடல்கறி ரேஞ்சில் கொடூர காம்பினேஷனில் தோன்றி கேமராக்களுக்கு ஜீரணக்கோளாறு வரவைத்தார் ஓ.பி.எஸ். `ஐ சொய்ங்னு போகுது! ஒன்ஸ்மோர் போலாமா டாடி?' என கிஷ்கிந்தா விளம்பரத்துக் குழந்தைபோலக் குதூகலித்தார் கூடப்போன தென்கரைத் தென்றல் ஓ.பி.ஆர். மற்ற அமைச்சர்களும் உலக உருண்டையைச் சுற்றிவிட்டு ஆளுக்கொன்றைத் தொட்டு அங்கே பறக்க, பேட்டி கொடுக்க ஆளில்லாமல் காற்றுவாங்கின டி.வி மைக்குகள்.

அண்ணியார் அவுட்!

ருகாலத்தில் கெத்தாக இருந்த கேப்டன் கட்சியின் மானத்தை ஏகப்பட்ட பலூன்களில் சிறுகச் சிறுக அடைத்து திசைக்கொன்றாகப் பறக்க விட்டார் பிரேமலதா. காலை பிரேக் பாஸ்ட்டுக்கு ரெண்டு பெரிய கட்சி - நாலு சின்னக் கட்சி, லஞ்சுக்கு ஒரு ஸ்டேட் கட்சி - ஒரு சென்ட்ரல் கட்சி என ஜிம்முக்குச் செல்லும் பாடி பில்டர் போல அண்ணியாரும் அவர் தம்பியாரும் கூட்டணி டயட் சார்ட் பராமரித்ததில் தொண்டர்களே குழம்பிப்போய் வி.ஆர்.எஸ் வாங்கினார்கள்.

2019 டாப் 25 பரபரா

`ஹலோ காமெடி ஸ்லாட்டுக்குத்தான் நான் இருக்கேன்ல' எனக் கொதித்தெழுந்து தி.மு.க-வின் குட்வர்ட்ஸ் கிரேப்வாட்டர் குழந்தை துரைமுருகன் பொங்கப்பானையை உடைக்க, சில்லுச்சில்லாய்ச் சிதறிப்போனது கேப்டனின் கனவு ராஜ்ஜியம். எஞ்சிய துண்டுகளைச் சோத்துப்பசை போட்டு உருட்டி சளைக்காமல் சுதீஷ் மீண்டும் எடுத்துவர, `இதைத்தான் உக்காந்து ஒட்டுனீங்களாக்கும்?’ எனக் கேட்டு வாங்கி மீண்டும் உடைத்தார்கள் தமிழக வாக்காளர்கள்.

சங்கத்தில கிழியாத சட்டை எங்கே இருக்கு?

கிண்டர்கார்டன் க்ளாஸ் லீடர் தேர்தலைக்கூட விட்டுவைக்காத விஷால் மீண்டும் புரட்சித்தளபதி மோடுக்குத் திரும்பிய ஆண்டு இது. இரண்டு அணிகளும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மைக்கைக் கடித்துவைப்பது, மாறி மாறி வழக்கு போட்டு கோர்ட் வாசலில் ஐஸ்பால் விளையாடுவது, போன தேர்தலுக்குக் கடைசியாய் ஹிட்டு கொடுத்த விஷால் அந்த ரெக்கார்டை இப்போதுவரை மெயின்டெயின் செய்வது என அதே காட்சிகள் ரீவைண்டாயின

2019 டாப் 25 பரபரா

. நாடாளுமன்றத் தேர்தலுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இரண்டு கோஷ்டிகளும் உக்கிரமாக மோதிக்கொள்ள, ``ஐயய்யய்ய, இவங்க வேற குறுக்கமறுக்க ஓடிக்கிட்டு?'’ எனக் கடுப்பானார்கள் தமிழக மக்கள்.

நீருக்குள் மூழ்கிடும் தாமரை!

மிழிசையின் கடமையுணர்ச்சியைப் பாராட்டி, கட்சி கவர்னர் போஸ்ட் கொடுக்க, ஆக்டிவ் மோடுக்கு வந்தார்கள் தமிழக பா.ஜ.க தலைவர்கள். இவர்களின் மொரட்டு பர்ஃபாமன்ஸில் சிக்கி கேங் வாருக்கு நடுவே மாட்டிய கோதுமை தோசை போல சுக்கல் சுக்கலானது தலைவர் நாற்காலி.

2019 டாப் 25 பரபரா

`இருக்குற நாலு பேரும் ஆளுக்கொரு தலைவர் பதவி எடுத்துக்கிட்டாக்கூட இன்னும் ரெண்டு போஸ்டிங் காலியாத்தான் இருக்கும்' என நலம்விரும்பிகள் சொன்னதெல்லாம் இவர்கள் காதில் விழவேயில்லை. பொன்னாரை `குருநாதாஆஆஆ' என இழுத்துவந்து கிப்ட் பேப்பரில் படுதோல்வியைப் பார்சலாக்கி மக்கள் கொடுத்தனுப்ப, மறுபக்கம் வழக்கம்போல வீடுவீடாய்ச் சென்று மாத்து வாங்கினார் ஹெச்.ராஜா. `ரைட்டு, இனிமே முட்டுக்கொடுக்க முடியாது' என ஆண்டு இறுதியில் நைசாக ஜூட்டு விட்டார் பி.டி அரசகுமார்.

உளறல்கள் பலரகம், ஒவ்வொன்றும் ஒருவிதம்!

த்தத்தின் ரத்தங்களின் உளறல் மீட்டர் இந்த ஆண்டும் சூடு குறையாமல் தகித்தது.

2019 டாப் 25 பரபரா

ஐ.பி.எல் ஏலத்தில் ஆண்டுக்காண்டு அணிமாறும் யுவராஜ்போல தேர்தலுக்குத் தேர்தல் ஜாகை மாறும் பா.ம.க-வுக்கு `ஆப்பிள் சின்னத்தில் வாக்களியுங்கள்' என திண்டுக்கல் சீனிவாசன் போட்டுப் பார்க்க, மஞ்சள் பழம் பிதுங்கி ரத்தச்சிவப்பானது. `நடிகருங்க கட்சி ஆரம்பிச்சா எடுபடாது, விஜயகாந்த் நிலைமை தெரியும்ல' எனக் கூட்டணிக்கட்சியைப் பற்றியே அமைச்சர் ஜி.பாஸ்கரன் சொல்ல, மொத்தத் தமிழகமும் ஸ்பீடு பிரேக்கரில் ஏறிய டெம்போபோல அதிர்ந்தது. உளறல் குல மாணிக்கம் செல்லூரார், ராஜேந்திர பாலாஜி என வாய்க்கு ரெஸ்ட் விடாமல் பப்ளிசிட்டி தேடிக்கொண்டிருக்கிறார்கள் கரைவேட்டிகள்

அதிரிபுதிரி உதிரி!

'நாங்க கூட்டணில இருக்கோம், ஆனா எதுக்குன்னு எங்களுக்கே தெரியாது' ரேஞ்சில் பா.ஜ.க-வோடு வலம் வந்தார் ச.ம.க-வின் சரத்குமார். `சரி, வந்ததுக்கு பஃபே சாப்பிட்டுப் போங்க' எனத் தட்டை நீட்டினார் மோடி. பார்க்க `தில்லானா மோகனாம்பாள்' பாலையா போல இருந்தாலும் கூட்டணி விவகாரத்தில் என்னத்த கண்ணையா ஆட்டிட்டியூடில் இருந்தார் ஜி.கே.வாசன்.

2019 டாப் 25 பரபரா

இவர்களோடு ஏ.சி.சண்முகமும் சேர, மொத்தமாகத் தூக்கிக்கொண்டு போய்க் குழியில் வைத்தார்கள் தமிழக பா.ஜ.க-வை. ஆனாலும் தாமரையை பிளாஸ்டிக்கில் செய்தாவது மிதக்க விட்டுவிட வேண்டும் என்கிற வெறியில் ஜான்பாண்டியன் உட்பட பலரை தன் நாடோடி வாழ்க்கைக்கு மத்தியிலும் சந்தித்துவருகிறார் மோடி.

நெக்ஸ்ட் பஞ்சாயத்துல மீட் பண்ணுவோம்

அ.தி.மு.க முகாமிலிருந்து காலைக் கவ்வி இந்தப் பக்கம் இழுத்துக் கபடியாடிக்கொண்டிருந்த டி.டி.வி-க்கு அதுவே ரிவர்ஸாகிப்போனதுதான் காலத்தின் கோலம். புழுதிபறக்க வலம்வந்துகொண்டிருந்த மன்னார்குடி டானின் `விக்ரம் - வேதா' செந்தில் பாலாஜியும் தங்கத்தமிழ்ச்செல்வனும் `சரி பங்காளி, இன்னும் சூரியன் கட்சிமட்டும்தான் பாக்கி.

2019 டாப் 25 பரபரா

அங்கே மீட் பண்ணுவோம்' என அப்பீட்டாகி அலற வைத்தார்கள். போனவேகத்தில் சீனியர்களையே ஓரங்கட்டி தி.மு.கவில் பர்ஃபாமன்ஸ் செய்து லைட்டைத் தன்பக்கம் திருப்பினார் செந்தில்பாலாஜி. தங்கத்தமிழ்ச்செல்வனுக்கு ஆடியோ என்றால், பெங்களூரு புகழேந்திக்கு வீடியோ. `இவரு நம்மளவிட நல்லா சர்வீஸ் பண்ணுவார் போலயே' என சி.சி.டி.வி செக்யூரிட்டி கடைக்காரர்களே மிரண்டுபோகுமளவிற்கு விரட்டிவிரட்டி கேமரா, மைக் வைத்து `சித்தன் சவுண்டு சர்வீஸ்' நடத்தினார் டி.டி.வி! `இந்த நேரத்துக்குக் கட்சியை வளர்த்திருந்தா இந்நேரம் தனியா துண்டைப் போட்டுக்கினு உட்கார்ற நிலைமை வந்திருக்காதுல்ல' எனப் பாவமாய் உச்சுக்கொட்டினார்கள் பிரிந்துசென்றவர்கள்.

தென்னைமரத்துக்கு ஒரு குத்து!

நினைத்த நேரத்தில் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு பின்னர் நிறுத்தி பின்னர் மீண்டும் தொடங்கி எனத் தேர்தல் ஆணையம் கண்ணாமூச்சி ஆட, இது தேர்தல் அறிவிப்பா, சிம்புபட அறிவிப்பா எனக் கிறுகிறுவெனத் தலைசுற்றிக் கீழே விழுந்தார்கள் வாக்காளர்கள். `செம மழை வரப்போகுது' என ரமணனாய் மாறி திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்த, வானம் வடிவேலுவாய் மாறி பிம்பிலிக்கா பிலாப்பி என காலி ஜோப்பைக் காட்டியது. `ரெஃப்ரீ...

2019 டாப் 25 பரபரா

அவன் என்னைக் கிள்ளிட்டான்' என அ.தி.மு.க தேர்தல்நேரத்தில் சிணுங்க, எதிர்க்கட்சிகளின் வீட்டுச் சுவர்களில், `இங்கு பிரதி வாரம் ரெய்டு செய்யப்படும்' எனக் கோடு போட்டு எழுதிவைத்தது. `சரி நாமளும் தவத்தைக் கலைச்சுடுவோம்' என மாநிலத் தேர்தல் ஆணையமும் கடைசியாய்க் களமிறங்க, கோர்ட்டுக்கு பீஸ் கட்டியே சொத்தை இழந்துகொண்டிருக்கிறார்கள் எதிர்க்கட்சி ஆட்கள்.

காங்கிரஸ் கலாட்டா!

காங்கிரஸ் இல்லாத டாப் 25 பரபரா வெங்காயம் இல்லாத கொத்துபரோட்டாபோல! சுரத்தே இருக்காது. கோஷ்டி சண்டைக்கு காப்பிரைட் வைத்திருக்கும் தைரியத்தில் இந்த ஆண்டும் குழு குழுவாய்ப் பிரிந்து கதகளி ஆடினார்கள். சத்யமூர்த்தி பவனில் சைலன்ட் மோடில் இருந்த திருநாவுக்கரசரைத் தூக்கிவிட்டு அழகிரியைத் தலைவராக நியமித்ததில் தொடங்கியது தமிழக காங்கிரஸின் நியூ இயர்.

2019 டாப் 25 பரபரா

வந்தவர், 'மாவட்டத் தலைவர்கள் மூன்றுவிதத் தேர்வைச் சந்திக்கவேண்டும்' என முஷ்டி முறுக்க, `நீங்க எந்த சென்டர்ல எக்ஸாம் எழுதித் தலைவரானீங்கன்னு சொன்னா வசதியா இருக்கும்' என எதிர்க்குத்து குத்தினார்கள் கதர்வேட்டிகள். கூட்டணிக்கு வந்தவர்களை கே.என்.நேரு ஒருபக்கம், வைகோ இன்னொரு பக்கம் எனக் கூடிக் கும்மியெடுக்க, `ஹலோ, நாங்க கோஷ்டி சண்டைல மட்டும்தான் வயலன்ட்டு, பார்டர் தாண்டமாட்டோம்' என அடக்கி வாசித்தார்கள். அமித் ஷாவின் பழிக்குப்பழி படலத்தில் ப.சி விக்கெட் விழ, யாருக்கும் வலிக்காமல் கோஷ்டி கோஷ்டியாய்ப் பிரிந்து போராட்டம் நடத்தி சிதம்பரத்துக்கே சிரிப்புமூட்டினார்கள்.

முடிவே தெரியாத மெகாசீரியல்!

வீக்கெண்டு பார்ட்டி பண்ண பாண்டிசேரிப்பக்கம் போனவர்களை முதல்வர் மாளிகையிலிருந்து வந்த அலறல்கள் முழிப்பாகவே வைத்திருந்தன. இந்த ஆண்டும், உபயம்: கிரண் பேடி! கோஸ்ட் கார்டு, பாண்டிச்சேரி போலீஸ், மதுவிலக்குத்துறை என எல்லாரையும் தாண்டி இவர்கள் இருவரும் ராப்பகலாய் ஓவர்டைம் பார்த்து ட்விட்டர் டைம்லைனைக் கலவர பூமியாக்கினார்கள்.

2019 டாப் 25 பரபரா

`ஹெல்மெட் போட்டா ஹெல்த்துக்கு நல்லது' என கிரண் பேடி பிரசாரம் செய்ய, அவர் வெறும்தலையோடு `பறக்கும் ராசாளியே' என பில்லியன் ரைடு செய்ததை போட்டோவாகப் போட்டுத் தாக்கினார் நாராயணசாமி. `எப்பப் பாத்தாலும் நொய்நொய்ன்னு' எனக் கடுப்பாகி நாராயணசாமி தர்ணா செய்ய, `இது புது டைப் யோகா போல' என பதிலுக்கு கவுன்ட்டர் கொடுத்தார் கிரண். `ச்சை, இதென்ன ப்ளேஸ்கூல்ல விட்ட பிள்ளைங்க மாதிரி' என நீதிமன்றமே கிரண் பேடிக்குத் தடா சொல்ல, கொஞ்ச நாள் அடங்கியிருந்து மீண்டும் ஆட ஆரம்பித்துவிட்டார்கள் இருவரும்!ம்பித்துவிட்டார்கள் இருவரும்!