Published:Updated:

கொரோனா நிவாரணம்: EssEmm கார்ப்பரேஷன் 600 யூனிட் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் நன்கொடை!

EssEmm கார்ப்பரேஷன்
News
EssEmm கார்ப்பரேஷன்

TzuChi Foundation மூலமாக கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை ஏற்பாடு செய்திருக்கிறது.

Food Processing Automationனில் சிறப்புவாய்ந்த நிறுவனமான கோயமுத்தூரில் அமைந்துள்ள EssEmm கார்ப்பரேஷன், சுமார் 2.5 கோடி மதிப்பிலான, 600 யூனிட் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளைத் தங்கள் சர்வதேச பங்கு நிறுவனமான தைவானில் அமைந்துள்ள The TzuChi Foundation மூலமாக வழங்கியிருக்கிறது.

600 யூனிட்டுகளில், 400 யூனிட்டுகள் EssEmm கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநர் சதீஷ் நாயர் மூலமாக திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியனிடம் வழங்கப்பட்டன; மீதி 200 யூனிட்டுகள் கேரள மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சிக்காக, கோயம்புத்தூர் ஸ்பெக்ட்ரம் ரோட்டரி சங்கம் முதலில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வேண்டியிருந்தார்கள். EssEmm கார்ப்பரேஷன் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து, TzuChi Foundation மூலமாக கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை ஏற்பாடு செய்திருக்கிறது.

தைவானின் TzuChi Foundation-னிடமிருந்து தமிழ்நாடு மருத்துவக் கழகம் மூலமாக தமிழக அரசுக்கு நன்கொடையாக நேரடியாக வழங்கப்பட்டது. அவை பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கும், அரசு சுகாதார மையங்களுக்கும் அனுப்பப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேரள மாநிலத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 200 யூனிட் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் கேரள மருத்துவக் கழகம் மூலமாக NORKA-விடம் வழங்கப்பட்டன.

இது குறித்து பேசிய EssEmm கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநர் சதீஷ் நாயர், “இந்த முன்னெடுப்பின் அங்கமாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நம் நாட்டில் இதுபோன்ற இக்கட்டான காலகட்டத்தில் Tzu Chi Foundation-னின் உறுதுணைக்கும், பங்களிப்புக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொது மற்றும் சமூகத் தேவைகளைப் பூர்த்திசெய்ய நாங்கள் தொடர்ந்து பங்களிப்போம்” என்றார்.