ஹலோ வாசகர்களே...
செய்திகளுக்காக தினமும் Vikatan.com-ஐத் தொடர்ந்து ஃபாலோ செஞ்சுட்டு வர்ற நீங்க ரொம்பவே ஷார்ப்பான ஆளாத்தான் இருப்பீங்க...
அப்படி ஷார்ப்பான ஆளான உங்களை, `வெறும் செய்தியோட மட்டும் விட்டுடக்கூடாதுன்னுதான், வாசிப்பைத் தாண்டி, `சொல்லியடி' மாதிரியான சொல் விளையாட்டையும் (Word Game) அறிமுகப்படுத்தினோம். இன்று உங்கள் ஆதரவால் 100 நாள்களைத் தாண்டி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது சொல்லியடி.

அந்த கேமுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவுதான், இன்று `வார்த்தையோடு விளையாடு' உருவாக காரணம். இதென்னா புதுசா என்கிறீர்களா?
உங்கள் மொழித்திறனை உசுப்பிவிட்டு, தினமும் மூளைக்கு டெஸ்ட் வைத்து, உங்களுக்கு நீங்களே சபாஷ் சொல்ல வைக்கும் Word Game-களின் இன்னொரு வெர்ஷன்தான் இந்த `வார்த்தையோடு விளையாடு'.
இன்று முதல் நம்முடைய விகடன் இணையதளத்தில் தினந்தோறும் இடம்பெறப்போகும் இந்த `வார்த்தையோடு விளையாடு' கேம், ஆடுறதுக்கு ரொம்ப சுலபம்... அதே சமயம் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.
`சுலபம், சுவாரஸ்யம்லாம் இருக்கட்டும்; எங்கே, எப்படி விளையாடுறதுன்னு சீக்கிரம் சொல்லுங்க!'ன்றதுதான இப்ப உங்க மைண்ட் வாய்ஸ்?! சொல்றோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
`வார்த்தையோடு விளையாடு' கேமை எப்படி விளையாடணும், விதிமுறை என்னன்னு சுருக்கமா பார்த்திடலாம்...
- தினந்தோறும் கொடுக்கப்பட்டிருக்கும் 7 எழுத்துகளில் இருந்து அதிகபட்ச சொற்களைக் கண்டுபிடிக்கிறதுதான் இந்த கேம்.
- ஆனா கூடவே இன்னொரு சேலஞ்சும் இருக்கு பாஸ்... அது என்னான்னா... நீங்கள் கண்டுபிடிக்கும் அனைத்து வார்த்தைகளிலும், இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் அந்த ஒற்றை நடு எழுத்து கட்டாயம் வரணும்.

- அடுத்ததா, கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து எழுத்துகளும் சேர்ந்து வரும் அந்த ஒற்றைச் சொல்லையும் கண்டுபிடிக்க வேண்டும்.
- நீங்கள் இன்றைக்கு கண்டுபிடிக்க வேண்டிய வார்த்தைகள் எவ்வளவு என்பதையும், அவை எத்தனை எழுத்து என்பதையும் அருகில் இருக்கும் கட்டங்களை வைத்து யூகிக்கலாம்.

- விகடன் அகராதியில் உள்ள சொற்கள் மட்டுமே இங்க இடம்பெறும். சில சொற்கள் அகராதியில் இருந்தாலும், அன்றைக்கு நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய சொற்களில் இல்லாமலும் போகலாம். எனவே, கட்டங்கள் அனைத்தையும் முடித்துவிட்டாலே அன்றைக்கு நீங்க வின்னர்தான்!
இன்றைய கேமை விளையாட இங்கே க்ளிக் செய்யவும்.

- எவ்வளவு யூகித்தும் விடை கண்டுபிடிக்க முடியவில்லையா? அடுத்த நாள், Yesterday answer பகுதிக்குச் சென்று விடைகளைத் தெரிந்துகொள்ளலாம்.
அவ்வளவுதான் பாஸ்