Published:Updated:

``ஊரார் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தேன், என் பிள்ளைகள் தானா வளர்ந்தாங்க!" - நெகிழும் ஆசிரியை #MyVikatan

வசந்தா சித்ரவேல்

தொடக்கப்பள்ளி ஆசிரியையான இவர் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கும்போது புதுமையான முறைகளைக் கையாள்வதுண்டு...

``ஊரார் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தேன், என் பிள்ளைகள் தானா வளர்ந்தாங்க!" - நெகிழும் ஆசிரியை #MyVikatan

தொடக்கப்பள்ளி ஆசிரியையான இவர் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கும்போது புதுமையான முறைகளைக் கையாள்வதுண்டு...

Published:Updated:
வசந்தா சித்ரவேல்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கஜா கோர தண்டவத்தின்போது மீட்புப் பணிகளுக்காக 50 லட்சம், கொரோனா தடுப்புப் பணிகளுக்காக 30 லட்சம், நோய்த்தொற்று கண்டறியப்பட்டு மக்கள் உணவுக்கு அவதிப்படும் முதல் நாள் தொடங்கி இன்றுவரை தினம் 200 பேருக்கு உணவு என நம்மை நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறார் ஆசிரியை வசந்தா சித்ரவேல்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள வடகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தா சித்ரவேல். தொடக்கப்பள்ளி ஆசிரியையான இவர் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கும்போது புதுமையான முறைகளைக் கையாள்வதுண்டு.

வசந்தா சித்ரவேல்
வசந்தா சித்ரவேல்

ஆசிரியைகளுக்கு தாய்மை குணம் இயல்புதான். என்றாலும், தன் பிள்ளைகளையும் தாண்டி தன் மாணவர்களைத் தாயுள்ளத்தோடு வழிநடத்துபவர்கள் வெகு சிலரே. அப்படிப்பட்ட ஆசிரியைதான் வசந்தா சித்ரவேல்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்திலிருந்து 10 கி.மீ துாரத்தில் அமைந்துள்ள அண்டர்காடு 'சுந்தரேச விலாஸ்' உதவி பெறும் தொடக்கப் பள்ளியின் ஆசிரியையான இவர் மாணவர்களுக்குப் பாடம் கற்பிப்பதோடு, கற்றலில் புதுமையையும், மாணவர் நலனில் அக்கறையையும் காட்டி வருகிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

56 மாணவர்கள் பயிலும் இப்பள்ளி, சராசரியான அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்று என்று பார்ப்பவர்கள் எளிதில் கடந்துவிட முடியாதபடி, அந்த மழலைகளின் திறமை, ஒரு கணம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

மாணவர்கள், பாடங்களை விளையாட்டோடு இணைந்து பயிலும் வகையில், பனை ஓலைப் பொருள்கள், மண்பாண்டங்கள் மற்றும் மரத்தால் செய்யப்பட்ட கலைநயமிக்க பொருள்கள் என அங்கே காணக் கிடைப்பவை நம்மை பிரமிக்க வைக்கின்றன.

மாணவர்களுடன் ஆசிரியை வசந்தா சித்ரவேல்
மாணவர்களுடன் ஆசிரியை வசந்தா சித்ரவேல்

ஆசிரியை வசந்தாவை சந்திக்கும் வாய்ப்பு சமீபத்தில் எனக்குக் கிடைத்தது. அவர் என்னிடம் பகிர்ந்துகொண்ட தன் பயணத்தை இங்கே பகிர்கிறேன்.

"1992-ல், இப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியில் சேர்ந்தபோது, ஒவ்வொரு வீடாகச் சென்று, பெற்றோரிடம் பேசி, குழந்தைகளைக் குளிப்பாட்டி, உடை உடுத்தி, பள்ளிக்கு அழைத்து வந்து, சிற்றுண்டி வாங்கிக் கொடுப்பேன். சிற்றுண்டிக்காகவே பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு வரத் தொடங்கினர்.

அனைவரையும், என் குழந்தைகளாக நினைத்து, அவர்களுடன் விளையாடி, கல்வியோடு சுகாதாரத்தையும் ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுத்தேன்.

ஐந்தாம் வகுப்பை நிறைவு செய்து வெளியேறும் குழந்தைகள், மேற்படிப்புக்குச் செல்லும்வரை அவர்களைக் கண்காணித்து, தேவையான உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறேன்.

'ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்' என்பர். இது, என் வாழ்வில் நிரூபணமானது.

என் வேலை மற்றும் நான் எடுத்துக்கொண்ட தன்னார்வப் பொறுப்புகள் காரணமாக, என் இரு மகள்கள் மீதும் என்னால் முழுமையான கவனம் செலுத்த முடியவில்லை. ஆனாலும், அவர்களாகவே நன்றாகப் படித்தனர். மூத்த மகள், சென்னையில், தனியார் மருத்துவமனையில் மனநல மருத்துவராகப் பணியாற்றுகிறார். இரண்டாவது மகள், 'நீட்' தேர்வில் நாட்டிலேயே 11வது இடத்தைப் பிடித்ததால், அரசு உதவித் தொகையுடன், டெல்லியில் உள்ள பிரபல மருத்துவக் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்’’ என்று நெகிழ்கிறார்.

கஜா புயலின்போது தன் மகள்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் உதவியுடன் 50 லட்சம் ரூபாய் நிதி திரட்டி, தங்கள் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் 3,000 ரூபாய் வீதம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய வசந்தா, தற்போது கொரோனா ஊரடங்குக் காலத்திலும் 30 லட்சம்வரை நிதி திரட்டி உதவிகள் செய்து வருகிறார்.

ஆசிரியை வசந்தா
ஆசிரியை வசந்தா

இவரது கல்விச் சேவையைப் பாராட்டி, தமிழக அரசின் சார்பில், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது உட்பட 30-க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

வசந்தா டீச்சரின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, 'மாணவர்களின் கனவுகளைக் கைவசப்படுத்திக் கொடுக்க உதவும் தூண்டுகோலே சிறந்த ஆசிரியர்' என்ற மேதகு குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வரிகள் நினைவுக்கு வருகிறது.

தாயுள்ளப் பணி தொடரட்டும் டீச்சர்!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/