Published:Updated:

முதல்வர் நிவாரண நிதி: வசந்த & கோ சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி!

வசந்த & கோ நிதியுதவி
வசந்த & கோ நிதியுதவி

திரு. விஜய் வசந்த்துடன் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், வசந்த் & கோ நிர்வாக இயக்குநர்கள் வினோத்குமார், தங்கமலர் ஜெகன்நாத் ஆகியோர் உடனிருந்தனர்.

சென்னை தலைமை செயலகத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து கொரோனா நிவாரணப் பணிகளுக்காக வசந்த் & கோ நிறுவனம் சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவியை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வழங்கினார். அருகில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், வசந்த் & கோ நிர்வாக இயக்குநர்கள் வினோத்குமார், தங்கமலர் ஜெகன்நாத் ஆகியோர்.

இது குறித்து நிர்வாக இயக்குநர்களில் ஒருவரும், விஜய் வசந்த் அவர்களின் சகோதரருமான வினோத்குமார் பேசுகையில், "பேரிடர் நிவாரணங்களுக்கு வசந்த & கோ சார்பாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பங்களித்துவருகிறோம். தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்தியாவில் எங்குப் பேரிடர் நிகழ்ந்தாலும், அப்பா முதல் ஆளாகச் சென்று நிவாரணத் தொகையை வழங்குவார். எங்கள் நிறுவனம் சார்பாக அப்பா தொடங்கி வைத்த பணியைத் தொடர வேண்டியது எங்கள் கடமை, இல்லையா? அதன்படி இந்தக் கொரோனா நிவாரண நிதிக்கும் பங்களித்திருக்கிறோம்." என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு