Published:Updated:

விஜய் டக்கர்: வந்தாச்சு இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு சேனல் - என்ன ஸ்பெஷல்?

விஜய் டக்கர்

அக்டோபர் 10 முதல் ஒளிபரப்பு தொடங்க இருக்கிற `விஜய் டக்க'ரில் ஒளிபரப்பாக உள்ள சில நிகழ்ச்சிகளின் விவரங்கள் இதோ...

விஜய் டக்கர்: வந்தாச்சு இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு சேனல் - என்ன ஸ்பெஷல்?

அக்டோபர் 10 முதல் ஒளிபரப்பு தொடங்க இருக்கிற `விஜய் டக்க'ரில் ஒளிபரப்பாக உள்ள சில நிகழ்ச்சிகளின் விவரங்கள் இதோ...

Published:Updated:
விஜய் டக்கர்
முழுக்க முழுக்க இளைஞர்களுக்கான என்டர்டெய்ன்மென்டாக இருக்கும் வகையில் புத்தம் புதிய சேனல் ஒன்றைத் தொடங்கவுள்ளது ஸ்டார் விஜய் குழுமம்.

'தமிழில் இளைஞர்களுக்கான முதன்மையான பொழுதுபோக்குச் சேனலாக இது இருக்கும்' என்கிறார்கள். சேனலுக்கு 'விஜய் டக்கர்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. திரைப்படங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன் கலவையான கேம், ரியாலிட்டி ஷோக்களும் இடம்பெற இருக்கின்றனவாம்.

அக்டோபர் 10 முதல் ஒளிபரப்பு தொடங்க இருக்கிற `விஜய் டக்க'ரில் ஒளிபரப்பாக உள்ள சில நிகழ்ச்சிகள் இவை:

காலேஜ் டே

தமிழ்நாட்டிலுள்ள 2கே கிட்ஸ்களை அவர்களின் கல்லூரி வளாகங்களில் சந்திக்கும் நிகழ்ச்சி.

சினிமா காரம் காபி

இளைஞர்கள் கலந்து கொள்ளும் ஒரு சாட் ஷோ. சினிமா செய்திகள், கிசுகிசுக்கள், அப்டேட்கள் குறித்து உரையாடுவார்கள்.

ட்ரக் மேல லக்கு

முழுத்திரை கொண்ட ஒரு விளையாட்டு டிரக்கில் நடக்கும் கேம் ஷோ.

ஸ்டைல் ஸ்டைலுதான்

அவ்வப்போது யூத் ஏரியாவின் காஸ்ட்யூம், மேக்'அப் விஷயங்களில் உண்டாகும் அப்டேட்டுகளை அலசும் ஒரு ஃபேஷன் நிகழ்ச்சி.

ஸ்டாருடன் ஒரு நாள்

பிரபலங்களுடன் ஒரு நாளைச் செலவிடும் நிகழ்ச்சி. பிரபலங்கள் தங்கள் குடும்பம், நண்பர்கள் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பெர்சனல் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளூம் ஷோ.

சம்திங் சம்திங்

இதுவும் ஒருவகையான கேம் ஷோ. ஒரு டேட்டிங் ஷோ, ஒவ்வொரு வாரமும் பொதுமக்களில் சிலர் தங்களுக்கு சரியான பொருத்தத்தை தேடி அடையும் நிகழ்ச்சி.