Published:Updated:

``தொப்பையைக் குறைக்க ஈஸியான வழி ஒண்ணு இருக்கு..!’’ - வாக்கிங் டாக்கிங் 11 #MyVikatan

Representational Image
Representational Image

டி ஷர்ட் அணிந்தால் வயது குறைந்த உணர்வு வருவதாக் கூறிக்கொண்டே நடக்க ஆரம்பித்தார். நான் பத்தடி இடைவெளியில் அவரின் பின்னால் நடக்க ஆரம்பித்தேன்.

2பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஆக்சிஜன் சிலிண்டர் என்ன கலர்? - வாக்கிங் டாக்கிங் 10 #MyVikatan

இனியவன் இன்று வித்தியாசமான டி ஷர்ட் அணிந்து வந்தார்.

அதைப் பார்த்தவுடன் சமீபத்தில ட்விட்டர் @naiyandi எழுதிய டுவிட் தான் ஞாபகம் வந்தது.

சட்டைப் பாக்கெட்டில் காசு இல்லாதப்ப டி சர்ட் அணிவதே மேல்! என்ற ட்விட்டை நினைத்து சிரித்தேன்.

என்ன திடீர்ன்னு சிரிப்பு?

உங்க டி ஷர்ட் தான்.

டி ஷர்ட் அணிந்தால் வயது குறைந்த உணர்வு வருவதாக் கூறிக்கொண்டே நடக்க ஆரம்பித்தார்.

நான் பத்தடி இடைவெளியில் அவரின் பின்னால் நடக்க ஆரம்பித்தேன்.

அவரின் டி ஷர்ட் பின்புறம் I’LL BE BACK என எழுதியிருந்தது.

ஏங்க இனியவன், உங்க டி சர்டில் இருக்கிறதுக்கு என்ன அர்த்தம்? யார் சொன்னது?

ஏகப்பட்ட அர்த்தம் இருக்கு…

டேர்மினேட்டர் படத்தில் அர்னால்ட் சுவார்செனேகர் பேசுற வசனம் தான் இது…

ஓ… சிவாஜு படத்தில வருமே… திரும்பி வந்துட்டேன்னு சொல்லு…அந்த மாதிரி

சிவாஜி அல்ல… கபாலி

நமக்கு படப்பெயர் ஞாபகம் வரல… சிவாஜின்னு தான் வாயில வருது…

இந்த மாதிரி ஞாபகம் வைக்க சிவாஜி வாயில ஜிலேபின்னு அடிக்கடி சொல்லுங்க…

அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? முட்டிக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடறீங்க…

அது மொட்டைக்கு முழங்காலுக்கு முடிச்சு போடறது…

மண்டையில நிக்காம… எதாவது சேர்ந்து வந்துடுது…

இது மண்டையில இருக்கிற மண்டேலா விளைவு தான்…

மண்டேலா விளைவா?

அவர் தான் 1980 ல் இறந்துட்டாரே…

walking
walking

இந்த தப்பை தான் எல்லோரும் செய்றாங்க… அவர் சிறையிலிருந்து விடுதலை ஆனது 1990 ல், இறந்தது 2013 ல்! இப்படி மாத்தி ஞாபகம் வைக்கிறது தான் மண்டேலா விளைவு.

சங்க காலத்தில் இந்த விளைவு எப்படி? என கண்களைச் சிமிட்டேன்.

அதுக்கென்ன சொல்லிட்டா போச்சு..

பூ ஒத்து அலமரும் தகைய; ஏ ஒத்து எல்லாரும் அறிய நோய் செய்தனவே- தே மொழித் திரண்ட மென் தோள், மா மலைப் பரீஇ வித்திய ஏனல் குரீஇ ஓப்புவாள், பெரு மழைக் கண்ணே! இது தலைமகன் தன் வேறுபாடு கண்டு வினாவிய பாங்கற்கு உரைத்தது
குறுந்தொகை-72,மள்ளனார்

பாங்கன் தலைவனைப்பார்த்து,” என்னாச்சு ஒரு மாதிரி இருக்கிறாய்? உன் நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரிகிறதே!” எனக்கேட்டான்.

அதற்கு தலைவன்,” நான் பெரிய மலையோரமாக இருக்கும் தினைப்புனம் போனேன்.அங்கே வளர்ந்த தினைகளை கொத்த வரும் குருவிகளை விரட்ட அவள் வந்தாள். அவளைப் பார்த்தேன். அவள் கண்களைப் பார்த்தேன்! காதல் நோய்ப் பற்றிக்கொண்டது. நீ மட்டுமல்ல,எல்லோரும் இதையே தான் கேட்கிறார்கள். எல்லோருக்கும் தெரியும் படி ஆகிவிட்டது!” என்றான்.

இதில் தலைவின் பார்வையில் உண்மையில் எதுமில்லை தான். ஆனால், அவள் பார்வை நோயைத் தந்து விட்டது எனச் சொல்வது தான் மண்டேலா விளைவு.

Walking
Walking

அடடா… நமக்கு தான் மண்டையில எதுமில்லை!

ஒகே I WILL BE BACK…

ஹா… ஹா…ஹா… டெர்மினேடர் பட சூட்டிங்கில அர்னால்ட் ”I’LL”ன்னு உச்சரிக்க தடுமாறியிருக்கிறார். அதனால I WILL BE BACKன்னு மாத்திக்கலாமா?ன்னு அர்னால்ட் கேட்டுகிறார். ஆனா டைரக்டர் ஜேம்ஸ் கேமரான் ஒத்துக்கில… சில சமயம் இப்படி தான் சில வசனம் எதிர்பாராம famous ஆயிடும்…

நானும் உங்கள் மாதிரி வாக்கிங் வரும் போது போட்டுக்க… போன வாரம் இரண்டு சட்டைக எடுத்தேன்… ஒண்ணு இன்னிக்கு போட்டிருக்கேன்!

ஓ… இந்த சட்டைப்பத்தி நான் கேட்கணுமுன்னு தான் டி ஷர்ட் பத்தி பேசிட்டு வந்தீங்களா?

அதைக்கேட்டு இப்ப என்ன ஆகப் போகுது? வீட்டில திட்டு வாங்கணுது தான் மிச்சம்?

என்னாச்சு? லூசா இருக்கா? டைட்டா இருக்கா? உங்களுக்கு தொப்பை அதிகமா இருக்கிறதால BELLY FIT வாங்கியிருக்கணும்!

தொப்பையைக் குறைக்க ஈஸியான வழி சட்டை சைஸை அதிகம் படுத்த வேண்டியது தான்…

நீங்க ரெகுலர் பிட் வாங்கியிருப்பீங்க…

அதென்ன BILLY FIT, REGULAR FIT…?

இடுப்பளவை விட மார்பளவு அதிகமா இருந்தா SLIM FIT, இடுப்பளவை விட மார்பளவு குறைவா இருந்தா BELLY FIT, இரண்டும் சமமா இருந்தா REGULAR FIT…

இதை பிட் அடுச்சு வைச்சுக்கிறேன்…

சைஸ்கூட பரவாயில்லை…

என்னதான் பிரச்சனை?

ஒரு சட்டையில பட்டன் இடது பக்கமும், காஜா வலது பக்கமும் இருக்கு… வீட்டில இது கூட கவனிச்சு பார்த்து வாங்க தெரியலையான்னு திட்டிட்டே இருக்காங்க…எவனோ பட்டனை மாத்தி வைச்சுட்டான்… நானும் பார்க்காம வாங்கிட்டேன்…

ஹா…ஹா…ஹா… யாரும் மாத்தி வைக்கல… நீங்க தான் மாத்தி எடுத்திட்டீங்க..

எப்படி?

லேடீஸ் சட்டையை எடுத்துருக்கீங்க…

அடடா! லேடீஸ் சட்டை என எப்படி கண்டு பிடிக்கிறது?

நம்மள சட்டையில வலது பக்கம் பட்டனும், இடது பக்கம் காஜாவும் இருக்கும், லேடீஸ் சட்டையில இடது பக்கம் பட்டனும், வலது பக்கம் காஜாவும் இருக்கும்..

என்னையறியாமல் நான் போட்டிருக்கும் சட்டையின் பட்டன் எந்தப் பக்கம் இருக்கிறது எனப்பார்த்தேன். அவரு சொன்னது சரியாக இருந்தது சற்று நிம்மதியைக் கொடுத்தது.

-வாக்கிங் தொடரும்

-சி.ஆர்

வானவில் ஏன் வளைஞ்சு இருக்கு? - வாக்கிங் டாக்கிங் 9 #MyVikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு