Published:Updated:

டைப் ரைட்டரில் எந்த வார்த்தை பெரிய வார்த்தை? - வாக்கிங் டாக்கிங் -12

Representational Image
Representational Image

எங்காவது பிரச்சனை நடக்குதுன்னு வையுங்க… இரண்டு தோளையும் உயர்த்தி வைச்சுட்டு இருக்கிறவங்க, வேடிக்கை தான் பார்ப்பாங்க… எந்த உதவியும் செய்ய மாட்டாங்க…

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து குளிர்க்காற்று விசுவிசுவென வீசியது. காலைக் குளிர்! இருந்தாலும் வாக்கிங் போவது மகா கடமை போல திருமதி அழைப்பு இரண்டாம் முறையாக ஒலித்தது.

மளமளவெனத் தயாராகித் திருமதியோடு நடக்கத் தொடங்கினேன்.

நானாகவே பேசத் தொடங்கினேன்.

என்னுடைய பிரண்ட்ஸ் மத்தியில நீ என்னுடைய பொய் கண்டுபிடிக்கிற டெக்னிக் எல்லாம் பிரபலமாயிடுச்சு! குறிப்பா, நான் பொய் பேசும்போது கழுத்தைத் தேய்ப்பேன்னு நீ சொன்னது படுபயங்கரமா வேலை செய்து போல! மத்தவங்க முன்னாடி…சும்மா கழுத்தைத் தொடவே எல்லோரும் பயப்படறாங்க…

Representational Image
Representational Image
மனங்களின் இயல்புகளை எப்போதும் கணிக்க முடியாது. அடிக்கடி நம்மை நாமே தேற்றிக்கொள்வதில் நம்முடைய நிலைப்பும் அது சார்ந்த கவனிப்பும் இருந்து கொண்டே இருக்கும். அப்போதெல்லாம் எதையாவதை வெறித்துப்பார்ப்பது தானே எல்லோரின் பழக்கமும்!
சி.ஆர்

அப்புறம் எஜமானர்கள் நீங்க பொய் சொல்வீங்களாக்கும்… நாங்க எல்லாத்தையும் கேட்டுட்டு ஆமா கொட்டணுமா? அதெல்லாம் பழைய காலம்!

கற்காலமா? தோள்களை உயர்த்திக்கொண்டே கேட்டேன்.

என்னவோ யோசிக்கிறீங்களே?

எப்படி கண்டுபிடிச்ச…

பாக்கெட்டில கையை விட்டுட்டு தோளை உயர்த்தினா… பலமான யோசனைன்னு அர்த்தம் தெரியுமோ?

உண்மையிலேயே எனக்குத் தெரியாது! மனங்களின் இயல்புகளை எப்போதும் கணிக்க முடியாது. அடிக்கடி நம்மை நாமே தேற்றிக்கொள்வதில் நம்முடைய நிலைப்பும் அது சார்ந்த கவனிப்பும் இருந்து கொண்டே இருக்கும். அப்போதெல்லாம் எதையாவதை வெறித்துப்பார்ப்பது தானே எல்லோரின் பழக்கமும்! யோசித்தேன்!

அது தெரிஞ்சா… நான் ஏன்?

உன்னைக்கட்டியிருக்க போறேன்னு சொல்ல வர்றீங்களா…? இந்த டயலாக் கேட்டுக் கேட்டு புளுச்சு போச்சு!

புரிஞ்சா சரி! ”சிட்டுக்குருவிக்கு பட்டம் கட்டினா…

சட்டிப்பானை எல்லாம்

லொட லொடன்னு கத்துமாம்…”

நானா…லொட லொடன்னு பேசறேன்?

பின்னென்ன…எங்காவது பிரச்சனை நடக்குதுன்னு வையுங்க… இரண்டு தோளையும் உயர்த்தி வைச்சுட்டு இருக்கிறவங்க, வேடிக்கை தான் பார்ப்பாங்க… எந்த உதவியும் செய்ய மாட்டாங்க…

நானெல்லாம் அப்படி இல்லை…எங்கெல்லாம் அநீதி நடக்கிறதோ! …

அங்கெல்லாம் போய்… சேவை செய்வீங்களா?

இல்லை… எங்கெல்லாம் அநீதி நடக்கிறதோ! … அங்கெல்லாம் உடனே ஓடிப்போய் வேடிக்கை பார்ப்பேன்!!

அது தானே பார்த்தேன்…

நடந்தா மட்டும் போதாது… கொஞ்சூண்டு யோகா செய்யணும்…

இத்தனூண்டு போதுமா? என விரல்களைச் சுருட்டிக்காட்டினேன்…

தொப்பை குறையற அளவு செய்யணும்…

வாயை திறந்து பேசுங்க!"என அதட்டி வீட்டுக்காரி சொல்லும் அளவிற்கு நான் "பொறுமை"யை கடைப்பிடிக்கிறேன்! எனக்கும் யோகா தேவையா?

ஹா…ஹா… ஹா… திருமதியின் சிரிப்பில் எதோ உள்ளர்த்தம் இருப்பதாக தோன்றிற்று.

Representational Image
Representational Image

நீ ஜீனியஸ்…

அப்படியெல்லாம் பெரிய வார்த்தைகளைச் சொல்லாதீங்க…

ஏன்…

ஜீனியஸ்க்கு ஸ்பெலிங் கூட ஒழுக்கமா டைப் அடிக்கத் தெரியாது… சொல்லுங்க பார்ப்போம்!

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே டைப்பிங் போயிருக்கிறேன்…

அப்படியா?

அப்படிதான்…

எங்கே ஸ்பீடா அடிக்கிற TRICK சொல்லுங்களேன்!

YOU CAN’T TEACH AN OLD DOG NEW TRICKS..

ஹலோ…இதெல்லாம் டூ மச்…

அட… உண்மையிலேயே இது டைப் ரைட்டிங் ஸ்பீடு வர்ற அடிக்கிற வாக்கியம் தான்.

எங்கே…TYPEWRITER –ல் நாம ஒரே வரிசையில…இருக்கிற எழுத்துக்களை வைச்சு டைப் அடிக்கிற பெரிய வார்த்தை என்ன சொல்லுங்க…

கம்ப்யூட்டர் கீ போட்டில வேண்டாமா? அதே பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?

தப்பிக்க பார்க்காதீங்க…

கொஞ்சம் ஈஸியான கேள்வி கேட்கலாமே…

எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்கள்? அந்த மாதிரியா?

எட்டுக்கால் பூச்சிக்கு இன்னொரு பேர் என்ன தெரியுமா?

நான் திருப்பிக்கேட்டேன்…

சொல்லிட்டா… இன்னிக்கு உப்புமா தான்! டீல் ஒகேவா?

”சோளச்சோறு திண்ணமாட்டேன்

சொன்னபடி கேட்கமாட்டேன்..

கம்புச் சோறு திண்ணமாட்டேன்

கம்முன்னு இருக்கமாட்டேன்

நெல்லுச் சோறு வேணும்- நீ

நெனெச்ச படி நடப்பேன்” எனப்பாடினேன்…

ஹா…ஹா…ஹா… எப்ப பாரு உங்களுக்குச் சோறு தான்!

உப்புமா வேண்டாம்! ரொட்டி டோஸ்ட் போதும்..

ஏன் ரொட்டி…

அது தானே staff of life, வாழ்வு காக்க வந்த பணியாள்!

ஹா… ஹா… ஹா… LATRO DECTUS TREDE CIMGUTTATUS…

எதாவது கெட்ட வார்த்தையில திட்டுரியா?

உங்களைத் திட்ட அவ்வளவு பெரிய வார்த்தைத் தேவையா?

ஜர்க் ஆனேன்.

அதென்ன பின்ன?

இந்தப் பேருடைய எட்டுக்கால் பூச்சிக்கு இன்னொரு பேரு கறுப்பு விதவை தெரியுமா?

அய்யய்யோ… எனக்கு சிலந்தின்னு மட்டும் தான் தெரியும்…

walking
walking

ஓ… அது ஆண் சிலந்தியோட சந்தோசமா இருந்துட்டு அந்த ஆண் சிலந்தையை அடிச்சு கொன்னு வலையில வீசிடும்…அதனால அந்த பேரு…

அட சாமி! அதொரு டைப்பான சிலந்தி போல! என்றதும் திருமதியின் பார்வையில் கோபம் தெரிந்தது.

என்ன ஒரு டைப்பா முறைக்கிற?

அந்த டைப் ரைட்டரில எந்த வார்த்தை பெரிய வார்த்தை?

TYPEWRITER…

டைப் ரைட்டரில் தான் கேட்கிறேன்…

கீ போர்டில ஒரே வரிசையில இருக்கிற எழுத்துக்களை வைச்சு டைப் அடிக்கக்கூடிய பெரிய வார்த்தை TYPEWRITER…

டைப் ரைட்டரா?

அட TYPEWRITER… தான்! வார்த்தையே அது தான்…

பதிலுக்கு நான் எதாவது கேட்க வேண்டுமே…


சரி… சின்ன வார்த்தை சொல்லேன்!

”அய்”யோ பெரிய கேள்வியா இருக்கே!

அய்ய்யா…சிக்கிட்டியா?

ஹலோ…ரொம்ப பரவசப்படாதீங்க “I” தான் விடையே!

அடுத்த முறை கீ போர்டில் செக் செய்ய வேண்டும் என நினைத்துக்கொண்டே, வேறு எந்த வார்த்தையும் பேசாமல் நடக்க ஆரம்பித்தேன்…

-டாக்கிங் தொடரும்

-சி.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு