Published:Updated:

சிறப்புத் திருமணச் சட்டம் என்றால் என்ன? அதற்கான வழிமுறைகள் யாவை? | Doubt of common man

Doubt of common man

ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்களுக்கென தனித்தனி திருமணச் சட்டங்கள் உள்ளன. வெவ்வேறு மதம், ஜாதியினர்களுக்கு இடையே நடைபெறும் (கலப்புத் திருமணங்கள்) திருமணங்களை அங்கீகரிக்கும் சட்டம் சிறப்பு திருமணச் சட்டம்.

சிறப்புத் திருமணச் சட்டம் என்றால் என்ன? அதற்கான வழிமுறைகள் யாவை? | Doubt of common man

ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்களுக்கென தனித்தனி திருமணச் சட்டங்கள் உள்ளன. வெவ்வேறு மதம், ஜாதியினர்களுக்கு இடையே நடைபெறும் (கலப்புத் திருமணங்கள்) திருமணங்களை அங்கீகரிக்கும் சட்டம் சிறப்பு திருமணச் சட்டம்.

Published:Updated:
Doubt of common man

விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் "நான் தமிழ்நாட்டை சேர்ந்த பெண் இலங்கை Refugee ஒருவரை விரும்புகிறேன். அவர் தற்போது ஆஸ்திரேலியாவில் குடியுரிமைக்காக அப்ளை செய்து இருக்கிறார். நாங்கள் இருவரும் திருமணம் செய்து முறைப்படி பதிவு செய்ய இயலுமா?” என்று வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இது குறித்து தமிழ்நாடு பதிவுத்துறை அலுவலர் சங்கத்தினரிடம் பேசினோம்.

Doubt of common man
Doubt of common man

“ தமிழ்நாடு திருமணப் பதிவு சட்டப்படி மணமக்கள் இருவரும் இந்திய குடிமக்களாக இருத்தல் வேண்டும். மேற்கண்ட விவகாரத்தில் பெண் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும், ஆண் இந்திய குடிமகனாக இல்லாத பட்சத்தில் இவர்களின் திருமணம் தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டத்தின்படி பதிவு செய்ய இயலாது. ஆகவே சிறப்பு திருமணச் சட்டப்படி திருமணம் செய்யலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சிறப்பு திருமணச் சட்டம் என்றால் என்ன?

ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்களுக்கென தனித்தனி திருமணச் சட்டங்கள் உள்ளன. வெவ்வேறு மதத்தினர், ஜாதியினர்களுக்கு இடையே நடைபெறும் (கலப்புத் திருமணங்கள்) திருமணங்களை அங்கீகரிக்கும் சட்டம் சிறப்பு திருமணச் சட்டம். இந்தச் சட்டம் 1954-ல் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் section-4-ல் "any two persons" எந்த இரண்டு நபர்கள் வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று உள்ளது. ஆகவே இந்தியரும் வெளிநாட்டினரும்கூட இச்சட்டத்தின் கீழ் அதன் வழிமுறைகளுக்கு உட்பட்டு திருமணம் செய்து கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறப்பு திருமணம் செய்ய என்னென்ன தகுதிகள் அவசியம் ?

1. ஆண் 21 வயதையும் பெண் 18 வயதையும் அடைந்திருக்க வேண்டும்.

2. மணமக்கள் இருவரும் மனதார சம்மதம் தெரிவிக்க வேண்டும்.

3. இருவருக்கும் எந்த மனநல பாதிப்புகளும் இருக்கக்கூடாது.

4. மணமக்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறும் காலத்தில் வேறு துணைகள் இருக்கக்கூடாது. யாரேனும் ஒருவர் திருமணம் ஆனவர்களாக இருந்தால் சட்டப்படி விவாகரத்து பெற்றிருக்க வேண்டும்.

5. மணமக்கள் இருவருக்கும் தடைசெய்யப்பட்ட உறவுமுறைகள் இருத்தல் கூடாது.

சிறப்பு திருமணம் செய்வதற்கான வழிமுறைகள் யாவை?

மேற்கண்ட தகுதிகள் பெற்றவர்கள், திருமணம் செய்வதற்கு ஒரு மாதத்திற்கு (30 நாட்கள்) முன்பு notice of intended marriage என்பதை வழங்க வேண்டும். இந்த நோட்டீஸில் ஆண், பெண் இருவரின் திருமண நிலை, வேலை, வயது, வாழ்விடம், நிலையான முகவரி, தற்போதைய முகவரி ஆகிய விவரங்களை குறிப்பிட்டு அதை திருமண அலுவலரிடம் வழங்கயிருக்க வேண்டும். ஆண், பெண் யாரேனும் ஒருவரின் மாவட்டத்தில் உள்ள திருமண அலுவலரிடம் இவற்றை வழங்கலாம்.

Doubt of common man
Doubt of common man

இதில் குறிப்பிட்ட அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டு பின்னர் அவற்றின் உண்மைத்தன்மை ஆராயப்படும். பதிவு செய்த விவரங்களின் நகலை மக்கள் பார்வைக்கு நோட்டீஸ் போர்டில் போடுவார்கள். 30 நாட்கள் வெயிட்டிங் பீரியட் அளிக்கப்படும். இந்த திருமணத்திற்கு எவரேனும் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும் என்றால் அதை அந்த 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். இந்த எதிர்ப்புகள் அவர்களின் திருமண தகுதிகள் சார்ந்தவையாக மட்டுமே இருக்க வேண்டும். அப்படி ஏதேனும் எதிர்ப்புகள் எழும் பட்சத்தில் எதிர்ப்பு எழுந்த 30 நாட்களுக்குள் அதனை விசாரணை நடத்தி திருமண அலுவலர் முடிவு கொடுக்க வேண்டும். ஒருவேளை திருமண அலுவலர் அந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தால், மணமக்கள் தங்கள் பக்கம் நியாயம் இருப்பதாக எண்ணும் பட்சத்தில், அலுவலர் மறுப்பு தெரிவித்த 30 நாட்களுக்குள் அவர்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். பின்னர் நீதிமன்ற தீர்ப்புக்கு அவர்கள் கட்டுப்பட வேண்டும்.

எதிர்ப்புகள் எழாத பட்சத்தில், 30 நாட்களுக்கு பிறகு மணமக்கள் திருமணம் செய்து கொள்ளலாம். திருமண நாளன்று மணமக்கள் இருவர் மற்றும் 3 சாட்சிகள் நேரில் சென்று Declaration form-ல் கையொப்பம் இட வேண்டும். திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் திருமண அலுவலரும் அந்த ஃபார்மில் கையொப்பம் இடுவார். இத்திருமணம் அலுவலகத்தில் தான் நடைபெற வேண்டுமென்ற அவசியமில்லை.அலுவலகத்தில் இருந்து குறிப்பிட்ட தொலைவுக்குள் எங்கு வேண்டுமானாலும் நடைபெறலாம். ஆனால் அலுவலரின் முன்னிலையில் நடப்பது அவசியம்.

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism