Published:Updated:

தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு... உங்கள் கருத்து என்ன? #NewEducationPolicy

2019 ஆம் ஆண்டில் தேசியக் கல்விக் கொள்கையின் வரைவை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

தேசியக் கல்விக் கொள்கை
தேசியக் கல்விக் கொள்கை ( விகடன் )

தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவை மத்திய அரசு முன்வைத்துள்ளது. இதில், மும்மொழிப் பாடமுறை, மூன்று வயதைத் தொட்ட குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வி, 3,5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு, 9-ம் வகுப்பு முதலே தொழிற்கல்வி, கல்லூரியில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு, நான்கு ஆண்டுகளாக்கப்பட்ட ஆசிரியர் படிப்பு ... எனப் பல விஷயங்கள் விவாதத்துக்குரியதாக உள்ளன. இக்கொள்கை வரைவு குறித்து, பொதுமக்களின் கருத்துகளை ஜூன் 30-ம் தேதி வரை அனுப்பலாம் என அறிவித்துள்ளது மத்திய அரசு. அதனால், விகடன் மக்களின் கருத்துகளை மத்திய அரசுக்கு அனுப்பும் விதமாக நடத்தும் இந்த சர்வேயில் கலந்துகொண்டு உங்கள் கருத்துகளை அவசியம் தெரிவியுங்கள். உங்கள் எண்ணங்களை எங்கள் வழியாக வெளிப்படுத்துங்கள்.  

தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு என்றால் என்ன?

நம் நாட்டில் கல்வியை மேம்படுத்த உருவாக்கப்படுவது தேசியக் கல்விக் கொள்கை. 1968-ம் ஆம் ஆண்டு இந்திராகாந்தி பிரதமராகப் பதவி வகித்தபோது, முதல் தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. அதன்பின், 1986, 1992 ஆம் ஆண்டுகளின் கல்விக் கொள்கைகள் வரையறுக்கப்பட்டன. அதன்படி, 2019 ஆம் ஆண்டில் தேசியக் கல்விக் கொள்கையின் வரைவை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 

தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு பள்ளிகளில் என்னவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும்?

பல முக்கியமான மாற்றங்கள் கல்வியில் உருவாக்குவதில் தேசியக் கொள்கையின் பங்கு உண்டு. பள்ளியில் எந்த வயது முதல் கட்டாயக் கல்வி, வகுப்பறை நடைமுறையில் சீர்திருத்தம், கற்பித்தல் முறை உள்ளிட்டவற்றை மேம்படுத்தவும் உதவும்.

தேசியக் கல்விக் கொள்கை 2019 வரைவில் இருக்கும் சாதகமான அம்சங்கள் என்னென்ன? 

படிப்புக்கு இணையாக, இசை, யோகா, கைவினைப் பொருள்கள் தயாரிப்பது கற்றுத்தருவது. பாடத்திட்டத்தில் அறக்கல்வி இணைக்கப்படும். கேந்திரா வித்யாலயா பள்ளிகளின் தரத்தில் பள்ளிகளை அமைத்தல். 

தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவில் இருக்கும் பாதகமான அம்சங்கள் என்னென்ன?

3, 5, 8 -ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்துவது. மும்மொழிக் கல்வி அவசியமாக்குதல், கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு வைத்தல், ஆசிரியர் படிப்பை நான்கு வருடங்களாக உயர்த்துதல், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இந்தியாவுக்குள் அனுமதி அளித்தல்.

தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு... உங்கள் கருத்து என்ன? #NewEducationPolicy
download
தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு... உங்கள் கருத்து என்ன? #NewEducationPolicy
download

இப்போது, தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு தொடர்பாக உங்கள் கருத்துகளை சமர்ப்பியுங்கள்! குறிப்பு:  1) தங்கள் பெயர் மற்றும் மெயில் ஐ.டி. அவசியம். அதுதான் இந்தக் கருத்துகளின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும்!

Vikatan