Published:Updated:

தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் கூட்டணி வைத்தால்..? - வாசகர் மேடை கலகல!

வாசகர் மேடை
வாசகர் மேடை

கபில் தேவ்... இந்திய கிரிக்கெட்டை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றவர். அவருக்கு உரிய மரியாதையை வாரியம் அளிக்கவில்லை என்று ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு வருத்தம் உண்டு.

ஒரு மாறுதலுக்கு தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் கூட்டணி வைத்தால் என்ன நடக்கும்?

இந்த நிகழ்வுக்குப் பிறகும்கூட பாஜகவோ காங்கிரஸோ இங்கே ஒரு பலம்மிக்க கட்சியாக உருவாகாது.

- புகழ்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போல கலைஞர் மக்கள் முன்னேற்ற கழகம், எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம், ஸ்டாலின் மக்கள் முன்னேற்றக் கழகம், எடப்பாடி பழனிசாமி மக்கள் முன்னேற்றக் கழகம் என்று பல கட்சிகள் உருவாகும்.

- saravankavi

ராமதாஸ் ரியாக்‌ஷன்: `இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே...’

- pbukrish

`மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் கலைஞர் அம்மா நாமம் வாழ்க’னு பட்ஜெட் உரையின் போது சொல்லுவாங்க.

- urs_venbaa

கமலும் ரஜினியும் கூட்டணி அமைத்து எதிர்க் கட்சியினராக இருப்பார்கள்.

- VijiKumaran1

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பார்கள்..

தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் கூட்டணி வைத்தால்..? - வாசகர் மேடை கலகல!

- madars_paiyan

இந்தக் கூட்டணி பிடிக்காமல் உண்மையான கலைஞர், ஜெயலலிதா விசுவாசிகள் கட்சியிலிருந்து வெளியேறி, தனித்தனியே ஒரு கட்சியைத் தொடங்குவார்கள்.

- RahimGazzali

இந்தக் கூட்டணி அமைந்தால் கவர்னருக்கு பயந்த காலம் மாறி, கவர்னர் இவர்களுக்கு பயப்படும் நிலை வரலாம்.

- jerry.darvey

அரசு இயந்திரத்துக்கு பெட்ரோல் போடுறதா, டீசல் போடுறதான்னு குழப்பம் நேரும்.

- RedManoRed

கலைஞரும் ஜெயலலிதா அம்மாவும் உயிரோடு இருந்தபோது அண்ணன் தங்கைபோலப் பழகியதாகப் பேட்டி கொடுப்பார்கள். அவ்வ்வ்!

- Isaipuyalfan

*

தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் கூட்டணி வைத்தால்..? - வாசகர் மேடை கலகல!

? ஒரு பழைய கிரிக்கெட் வீரர் இப்போதைய இந்திய டீமில் விளையாடலாம் என்றால் யார் உங்கள் சாய்ஸ், ஏன்?

ராகுல் டிராவிட் - தாக்குப் பிடித்து நின்று ஆடுவார்.

- பெ.பச்சையப்பான், கம்பம்

யுவராஜ் சிங். யுவிக்கு அப்புறம் இன்னிக்குவரை இந்திய அணியில் மிடில் ஆர்டர் பிரச்னைதான். ஸோ, பிரச்சனை தீரணும்னா பழைய யுவி என் சாய்ஸ்.

- Iam_SuMu

தமிழில் கமென்ட்ரி செய்யும் அனைத்து வீரர்களையும் மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும். தமிழை இவர்களிடமிருந்து காப்பாற்ற வேறு வழியில்லை!

- balasubramni1

கபில் தேவ்... இந்திய கிரிக்கெட்டை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றவர். அவருக்கு உரிய மரியாதையை வாரியம் அளிக்கவில்லை என்று ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு வருத்தம் உண்டு.

- vaira.bala.12

சவுரவ் கங்குலி . ஸ்டைலான பேட்டிங், அசத்தலான ஆட்டம் என்று சுவாரஸ்யம் கூட்டும் நல்ல ப்ளேயர். முழுமையாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/31uI7yN

- ashokan.ahan

அணில் கும்ளே:டாப் ஆர்டர் மிடில் ஆர்டர் கேஎல் ராகுல் வருகைக்கு பின் நலம்.வேகப்பந்து துறை எப்போதும் இல்லாத அளவு சரியாக உள்ளது.சகள் மற்றும் குல்தீப் தான் அடிக்கடி அடி வாங்குகிறார்கள்,இப்போதைக்கு கும்ப்ளே தான் சரியான சாய்ஸ் (அப்டியே டீம்க்கு உள்ளேயே ஒரு எக்ஸ்ட்ரா கோச்!)

- Daarwinthehero

சஞ்சய் மஞ்ச்ரேக்கர்:

கமென்ட்ரிங்கிற பேர்ல் ப்ளேயர்கிட்ட வம்பிழுக்கிறதே அவருக்கு வேலையாப் போச்சு. அதனால மறுபடியும் அவர கிரவுண்ட்ல இறக்கி விட்டு, மீம்ஸ் போட்டு கலாய்க்கனும்

தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் கூட்டணி வைத்தால்..? - வாசகர் மேடை கலகல!

- RamuvelK

இர்பான் பதான்...ஏன்னா இவர் திறமைய இந்திய அணி நிர்வாகம் சரிவர பயன்படுத்திக்க தவறிட்டாங்க,நல்ல ஸ்விங்&பேஸ் பெளலர்,பேட்டிங்கிலும் சிறப்பா ஆடுவார்

- pbukrish

அசாருதீன்- ஒரு சின்ன ஃப்ளிக் மூலம் பவுண்டரி அடிக்கும் அந்த அழகுக்காக..!

- மயக்குநன்

கெளதம் கம்பீர்...!!!

பிஜேபி ஆளுங்கறதால போற பக்கமெல்லாம் எப்படியாச்சம் மோடி சப்போர்ட்ல ஜெயிக்கவச்சிடுவார்.

- ரமேஷ்.ஏ

வீரேந்தர் சேவாக் - சேவாக்-ரோகித் சர்மா ஓப்பனிங் ஜோடி அதிரடி சரவெடி

- M_SR04

முகம்மது கைப் ரன்னிங் பதில் ஸ்விம்மிங்ல தான் ரன் எடுப்பார். நல்ல ஃபில்டரும் கூட

- M__karthika

இவை மட்டுமா?

> 2030-ல் லவ் புரொபோஸல் எப்படியிருக்கும்?

> விஜய் ஹீரோ - விஜய் சேதுபதி வில்லன். ரெண்டு பேருக்கும் ஆளுக்கு ஒரு டயலாக் சொல்லுங்க.

> மொபைல்போன் - சிறு குறிப்பு வரைக!

- இவற்றுக்கும் வாசகர்கள் நறுக்கென பதிந்தவற்றை முழுமையாக ஆனந்த விகடன் இதழில் காண > வாசகர் மேடை: பார்த்துக்கொண்டும் பேசிக்கொண்டும்... https://www.vikatan.com/news/general-news/vasagar-medai-12th-feb-2020

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு