Published:Updated:

கொரோனாவுக்குப் பிறகான உலகம் எப்படி இருக்கும்? - சும்மா ஒரு கற்பனை #MyVikatan

Representational Image
Representational Image ( Credits ; Pixabay )

தாயக்கட்டை முதல் பரமபதம், தட்டாங்கல் வரை அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்திருப்போம்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

முழுவதுமாய்க் கடந்த ஓர் ஆண்டில், நாம் செலவிட்ட குடும்ப நேரத்தை இந்த ஓரிரு மாதங்களில் கடந்திருப்போம்...

தாயக்கட்டை முதல் பரமபதம், தட்டாங்கல் வரை அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்திருப்போம்...

உங்கள் குழந்தையின் தனித்திறன் எதுவென அறிந்திருப்பீர்கள்.

சமையலறை வேலைகளிலும் சமத்துவம் பரவியிருக்கும்...

உயிரின் மதிப்பும், உறவுகளின் மதிப்பும் உயர்ந்திருக்கும்...

சுய-சுகாதாரத்திற்கான தேவையை உணர்ந்திருப்போம்...

தெருவுக்கு நான்கு புதுக்கவிஞர்கள் முளைத்திருப்பர்...

Representational Image
Representational Image

அலுவல் வேலையில் தொலைத்த பள்ளிப்பருவ கவிதை, ஓவியத் திறன்களை மீட்டெடுத்திருப்போம்...

டிக் டாக்கும் ஃபேஸ்புக்கும், இன்ஸ்ட்டாகிராமும் சலித்திருக்கும்...

பக்கவாட்டு இடுப்பு இரு விரற்கடை பருத்திருக்கும்...

காலையில் கிளம்பி வேலைக்குப்போய் பத்தாண்டுகள் ஆனதாய்த் தோன்றும்...

அவசர அவசரமாய் சமைப்பதும் ஐந்து நிமிடத்தில் உண்ணுவதும் புதிதாய்த் தோன்றும்...

விசில் சத்தம் கேட்டுவந்து குப்பை கொட்டும்போது, அவர்களின் நலத்தையும் விசாரித்திருப்போம்...

ரயில் நிலைய நடைபாலத்தில் தினமும் பார்த்த பிச்சைக்காரர், அம்மா உணவகம் அருகில் இடம் மாறியிருப்பார்.

கடந்த மாதம் உங்கள் செருப்பை தைத்துக்கொடுத்த முதியவர் அமர்ந்திருந்த தெருமுக்கு, காலியாக இருக்கும்...

சாலையோரத்தில் காற்றடைத்த பொம்மைகளுடனும் மூங்கில் நாற்காலியுடனும் வெயிலில் காய்ந்திருந்த கூரைவீடுகளுக்கு நாய்க்குட்டிகள் குடிவந்திருக்கும்...

மாலை நேரம் வழியில் உண்ணும் பானிபூரி விற்பவனைத் தேடியிருப்போம்...

வழக்கமாக கல்லாவை விட்டு நகராத முதலாளி, பரோட்டா மாவு பிசைந்துகொண்டிருப்பார்..

சக்திமானும் மெட்டி ஒலியும் பாதியில் நிறுத்தப்பட்டிருக்கும்...

'அதுக்கெல்லாம்நேரமில்லை' என மீண்டும் ஓட ஆரம்பித்திருப்போம்...

Representational Image
Representational Image

வெளிநாட்டு மாப்பிள்ளைக்கான வரதட்சணை குறைந்திருக்கும்...

வளரும் நாடுகளின் மீது வல்லரசு நாடுகளின் இடையீடு சற்று குறைந்திருக்கும்.

ஓசோன் ஓட்டையும் ஓரளவுக்கு பூசப்பட்டிருக்கும்...

உண்மையில் இறங்கி வேலைசெய்யும் அரசியலாளர்கள், அதிகாரிகளை அடையாளம் கண்டிருப்போம்...

மருத்துவர், செவிலியர், காவலர், தூய்மைப் பணியாளர்கள் மீதான மரியாதை கூடியிருக்கும்...

'எம்புள்ள மட்டும் இருந்திருந்தா, அவளும் வைத்தியம் பாத்து நாலு உசுர காப்பாத்திருப்பா'ன்னு பெருமூச்சு விட்டிருப்பார், அனிதாவின் அப்பா.

-மு.வைரம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு