Published:Updated:

ரயில்களில் நாம் விரும்பும் இருக்கை நமக்குக் கிடைக்காதது ஏன்? -அறிவியல் காரணம் #MyVikatan

Representational Image
Representational Image

இதற்கு காரணம் அறிவியல் என்றால் நம்ப முடிகிறதா? ஆம்!ஒரு இயற்பியல் ரீதியான பாதுகாப்புக் காரணத்தால் தான் இவ்வாறு நடக்கிறது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

திரையரங்கம், பேருந்து மற்றும் கலையரங்கம் போன்றவற்றில் நாம் இருக்கை முன்பதிவு செய்யும் போது, நமக்குப் பிடித்த இருக்கையை முன்பதிவு செய்ய முடிகிறது. ஆனால் ரயிலில் இருக்கை முன்பதிவு செய்யும் போது மட்டும் நமக்கு ரயில்வே ஒதுக்கும் இருக்கை/படுக்கைதான் நமக்குக் கிடைக்கிறது. இது எதனால் என்று யோசித்துள்ளீர்களா?

இதற்கு காரணம் அறிவியல் என்றால் நம்ப முடிகிறதா? ஆம்! ஒரு இயற்பியல் ரீதியான பாதுகாப்பு காரணத்தால் தான் இவ்வாறு நடக்கிறது.

Representational Image
Representational Image

உதாரணமாக நாம் ஒரு திரையரங்கில் இருக்கையை முன்பதிவு செய்கிறோம். அது ஒரு சுமாரான படம் என்பதால் சொற்ப ஆட்களே திரையரங்கில் உள்ளனர் அல்லது யாருமே இல்லை. நாம் ஒரு ஆள் மட்டும்தான் படம் பார்க்க வேண்டும் என்றாலும், அறிவியல் ரீதியில் எந்தப் பிரச்னையும் இல்லை! ஏனென்றால் திரையரங்கத்திற்கு நகரும் தன்மை கிடையாது. ஒரே இடத்தில் நிலையானது.

(மோசமான திரைப்படத்தால் உளவியல் ரீதியான பிரச்சனை வேண்டுமானால் ஏற்படலாம்!)

சரி. நகரக்கூடிய பேருந்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் போது நமக்குப் பிடித்த இருக்கையை முன்பதிவு செய்ய முடிகிறதே என்றால், பேருந்து என்பது சிறிய அளவிலான ஒன்று. அதில் எந்த இருக்கையில் யார் பயணம் செய்தாலும் பெரிதாக பாதிப்பு இல்லை. ஒன்று அல்லது இரண்டு ஆட்கள் மட்டுமே பயணம் செய்தாலும் கூட அறிவியல் ரீதியில் பெரிதாக எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை!

ஆனால் ரயில் என்பது மிக நீளமானது மற்றும் மிகப்பெரியது. இயற்பியலுக்கும் ரயில்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.உதாரணமாக ஒரு ரயிலில் S1 இல் இருந்து S10 வரை மொத்தம் 10 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இருக்கிறதென்றால், அந்த ஒவ்வொரு பெட்டியிலும் 72 இருக்கைகள் இருக்கும்.

ரயில்வே துறையின் பயணிகள் முன்பதிவிற்கான மென்பொருளில் ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள 72 இருக்கைகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. 1 இல் இருந்து 30 வரை முதல் பிரிவு, 31-இல் இருந்து 40 வரை மத்தியப் பிரிவு, 41 இருந்து 72 வரை இறுதிப் பிரிவு.

Representational Image
Representational Image

ஆன்லைனிலோ அல்லது டிக்கெட் கவுன்டர் மூலமாகவே பயணிகள் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் போது, முதலில் நடுவில் உள்ள பெட்டிகளில் (உதாரணமாக S5,S6) உள்ள கீழ் இருக்கைகள் (Lower berths) முதலில் நிரப்பப்படும். RAC- டிக்கெட்டுகளுக்காக Side Lower berths இறுதியாகவே நிரப்பப்படும்.

மேலும் நடுவில் உள்ள பெட்டிகள் உள்ளிட்ட ஒவ்வொரு பெட்டியிலும் மத்தியப் பிரிவு அதாவது 31 லிருந்து 40 வரை இருக்கும் இருக்கைகள் மட்டுமே பயணிகளுக்கு முதலில் ஒதுக்கப்படும். பிறகு அடுத்தடுத்த பெட்டிகளில் உள்ள இருக்கைகள் இவ்வாறு நிரப்பப்பட்ட பின் எஞ்சிய இரு பிரிவுகளுக்கான இருக்கை ஒதுக்கீடு தொடங்கும்.

பயணிகளின் எடை ரயிலின் அனைத்துப் பெட்டிகளிலும் பரவலாக்கப்பட்டு, ஓடும் ரயிலின் புவியீர்ப்பு மையத்தைச் சமநிலைப்படுத்த வேண்டியே இவ்வாறு முன்பதிவு செய்யப்படுகிறது! ஓடும் ரயிலின் புவியீர்ப்பு மையம் சமநிலைப் படுத்தப்படவில்லை என்றால் விபத்து நேரிடும்.

Representational Image
Representational Image

உதாரணமாக முதல் மற்றும் இரண்டாம் பெட்டிகளில் மட்டுமே 144 இருக்கைகள் நிறைந்து, மீதிப் பெட்டிகள் காலியாக இருக்குமாயின், ரயில் வேகமாகப் போகும் போதும், வளைவுகளில் திரும்பும்போதும், பிரேக் பிடிக்கும்போதும் ஆட்கள் உள்ள பெட்டிகள் மற்றும் ஆட்கள் இல்லாத அல்லது குறைவான ஆட்கள் உள்ள பெட்டிகள் இடையே மையவிலக்கு விசையில் பெரும் வித்தியாசம் ஏற்படும்!

எனவே ஓடும் ரயிலின் சமநிலை குலைந்து, பெட்டிகள் வேகமாக முன் பின்னாக அலைக்கழிக்கப்பட்டு ஒன்றின் மேல் ஒன்று மோதிச் சிதறும். பெரும் விபத்து ஏற்படும்.

இதைத் தடுக்கத்தான் ரயில்களில் முதலில் மத்தியப் பெட்டிகளில், Lower berths மற்றும் மத்தியப் பகுதியான 31 முதல் 40 வரையுள்ள இருக்கைகளை நிரப்புகின்றனர். அனைத்துப் பெட்டிகளிலும் மத்தியில் ஆட்கள் நிரப்பப்பட்டு, பயணிகளின் எடை பரவலாக்கப்பட்டு சமநிலை உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, முதல் பிரிவான 1 முதல் 30 மற்றும் இறுதிப் பிரிவான 41 முதல் 72 வரையிலான இருக்கைகள் நிரப்பப்படுகின்றன. இவையும் எடை பரவலாக்கப்படல் - சமநிலைப்படுத்தல் முறையிலேயே நிரப்பப்படுவது கூடுதலான பாதுகாப்பு அம்சமாகும்!

இந்த இயற்பியல் காரணத்தால் தான், விபத்துகளைத் தடுக்க வேண்டி, ரயில்வே துறையாலேயே இருக்கை முறையாக ஒதுக்கப்படுகிறது! ரயிலில் நமக்குப் பிடித்த இருக்கையை நம்மால் முன்பதிவு செய்ய முடியாமலேயே போய் விடுகிறது!

- அகன்சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு