Published:Updated:

மின்னலாய் ஒரு தெளிவு! - லாக் டெளன் டைரீஸ் #MyVikatan

Representational Image
Representational Image ( William Fortunato from Pexels )

பதற்றத்துடன் சுமித்ரா அதை வாங்க கை நீட்டியபோது 'அனு வேற அனன்யா வேறவாம்மா' என்று தன் மழலை குரலில் கேட்டான். சுளீரென்று கன்னத்தில் அறை வாங்கியது போல் உணர்ந்தாள் அவள்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அழைப்பு மணி அடித்ததும் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு வெளியே வந்து பார்த்தாள் சுமித்ரா.

பக்கத்து வீட்டு பாஸ்கர். கூடவே அனன்யா குறுகுறுத்த விழிகளுடன் நின்றது.

வாங்க என்று சொல்லி விட்டு உள்ளே போனாள் சுமி.

'டேய் ஆதித்யா, இங்கே பார் அனன்யா வந்திருக்காடா'

ஆதித்யா வந்து அவளை உள்ளே கூட்டிப் போனான்.

'சொல்லுங்க பாஸ்கர். திவ்யா எப்படி இருக்கா? செக்கப் போகணுமா?'

'அதுக்குத்தான் வந்தேன். ஹாஸ்பிடல் போய்ட்டு வரணும்.

அங்கே போனா ஒரு மணி நேரமாவது ஆகும். அனன்யாவை இங்கே விட்டு போனால்

அங்கே வெயிட் பண்ணுகிற நேரத்தில்

கொஞ்சம் ஆபீஸ் வேலையும் பார்க்கலாம் என்று தான்'


'இப்போ எல்லார் நிலைமையும் அப்படித்தான் இருக்கு.

வீட்டு வேலையும் பார்க்க முடியலை

ஆபீஸ் வேலையும் முடிக்க முடியறதில்லை என்ன செய்றதுன்னே தெரியலை'

'பார்ப்போம் சீக்கிரம் ஆபீஸ் திறக்கணும்

அப்போதான் நமக்கு சரிப்படும்'


சொல்லி விட்டு அவன் வெளியேற மறுபடியும் அவள் தன் வேலையில் மூழ்கினாள்.

Representational Image
Representational Image

விளையாடிக் கொண்டிருந்த இருவருக்கும் பிஸ்கெட்டும் பாலும் கலந்து கொடுத்து விட்டு சமையலறைக்கு வந்தாள்.மலைப்பாக இருந்தது..

'இங்கும் அங்கும் பாதை உண்டு

இன்று நீ எந்த பக்கம்?'

என்பது போல கிச்சனா, ஆபீஸ் வேலையா என்று தடுமாறி விட்டு அவசர அவசரமாக முக்கியமான வேலைகளை முடித்து விட்டு வெளியே வந்தாள்.

எது முக்கியம் யார் முக்கியம் என்று பல கேள்விகள் மனதில் எழுந்தன.

ஆபீஸில் இருந்தால் அந்த வேலை மட்டும் தான் மனதில் இருக்கும். வீட்டிலும் அதே மாதிரி என்ன என்ன செய்ய வேண்டும் என்று ஒரு திட்டம் இருக்கும்.இப்போ

எல்லாமே குழப்பம் தான்.

``பல வீடுகளில் வீட்டில் தானே இருக்கிறாய்''

என்று மேலும் மேலும் பொறுப்புகளை சுமத்தும் பெரியவர்கள். சமயம் தெரியாமல் விளையாடும் சின்ன குழந்தைகள்.

'பீலி பெய் சாகாடும்' திருக்குறள் தான் நினைவில் வருகிறது.

அப்பாடி! இந்த கொரோனா வைரஸ் இன்னும் எத்தனை நாள் நம்மை உண்டு இல்லை என்று செய்யப் போகிறதோ?

வெளியில் எங்குமே போக முடிவதில்லை.

எதற்கெடுத்தாலும் ஆயிரத்தெட்டு நடைமுறைகள்

அரசாங்கம் மட்டுமா முழிப் பிதுங்குகிறது நாமும் தான்.

தங்கை குழந்தை அனுவை போய் பார்க்க முடியவில்லை.

வாங்கி வைத்த விளையாட்டு சாமான்கள் அப்படியே அலமாரியில் தூங்குகின்றன.

செல் ஒலித்ததும் சிந்தனை கலைந்தது.

பாஸ்கர் தான்.

எதிர் பாராத விதமாக திவ்யாவுக்கு ப்ரெஷர் அதிகமாகிவிட்டதால் உடனே சிசேரியன் ஏற்பாடு பண்ணுகிறார்களாம்..‌

இரவு மட்டும் அனன்யாவை பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கும்

அவன் குரலில் தெரிந்த கவலையும் வேதனையும் அவள் மனதையும் கஷ்டப்படுத்தியது.


'கவலை படாதீங்க பாஸ்கர் ' ஆறுதல் சொல்லிவிட்டு குழந்தைகளை கவனிக்கப் போனாள் அவள்.

Representational Image
Representational Image
VARAN NM from Pexels

வேலை அதிகம் தான். சிரமம் தான். ஆனாலும் என்ன செய்வது?

இந்த காலக்கட்டத்தில் நம்மால் இந்த உதவியாவது செய்ய முடிகிறதே என்று ஒரு ஆறுதலும் வந்தது.

எவ்வளவு பேர் களத்தில் இறங்கி உணவு , மருந்து என்று இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மனதில் லேசாக ஒரு பெருமிதமும் வந்தது.

காலையில் கசங்கிய உடையும் கலைந்த தலையுடனும் பாஸ்கர் வந்து பையன் பிறந்த விவரம் சொன்னபோது சந்தோஷப்பட்டதுடன் நீங்கள் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு வாருங்கள்.

அவள் இங்கே இருக்கட்டும் என்று சொல்லவும் முடிந்தது.


கொஞ்ச நேரம் கழித்து பிள்ளைகள் இருவரும் தூங்கி எழுந்து வந்த போது உற்சாகமாக அவர்களை எதிர் கொண்டாள் சுமித்ரா.

'அனன்யா உனக்கு ஒரு குட்டி தம்பி பாப்பா பிறந்திருக்கிறான் தெரியுமா?'

அது கண்களை கொட்டிக் கொண்டு விழித்தது.

ஆசையாக அதை அள்ளி எடுத்து கன்னங்களில் முத்தமிட்டாள்.

என்ன நினைத்தானோ தெரியவில்லை ஆதித்யா ஓடிப்போய் புதிய ஒரு விளையாட்டு பொம்மையை கொண்டு வந்து அவள் கைகளில் திணித்தான்

'டேய் இது அனுவுக்கு வாங்கியது'

பதற்றத்துடன் சுமித்ரா அதை வாங்க கை நீட்டியபோது 'அனு வேற அனன்யா வேறவாம்மா' என்று தன் மழலை குரலில் கேட்டான். சுளீரென்று கன்னத்தில் அறை வாங்கியது போல் உணர்ந்தாள் அவள்.

அதுதானே!

என்னவோ பெரிதாக செய்து கொடுத்து விட்டதாக நினைத்திருந்தாளே.

இந்த பேதம் மனதில் இருக்கத்தானே செய்கிறது.

அம்மா என்ன செய்யப் போகிறாள் என்று தெரியாமல் விழித்த ஆதித்யாவையும் அனன்யாவையும் பார்த்து சிரித்தபடி இருவரையும் கட்டி அணைத்துக்கொண்டாள் அவள்.

-காந்திமதி உலகநாதன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு