Published:Updated:

WWE fighters vs தமிழ் சினிமா ஹீரோஸ்..! - ஒரு ஃபன் கற்பனை #MyVikatan

WWE நிகழ்ச்சி மறக்க முடியாத ஒன்று. அப்படிப்பட்ட நிகழ்ச்சியில் தமிழ் சினிமா ஹீரோக்கள் கலந்துகொண்டால் யார் யாருடன் மோதுவார்கள், அந்தச் சண்டை எப்படி இருக்கும் என்பது குறித்த ஜாலியான கற்பனை கட்டுரை இது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மண்ணிற்குள் புதைத்த பிறகும் எழுந்து வந்து சண்டை போட்டவர் நம் `சர்வம்' ஆர்யா. மகாமுனி படத்தில் அண்டர்டேக்கர் போல நாக்கை வெளியே நீட்டி `மனதை அமைதிப்படுத்தும்' யோகா செய்தவர். இந்த இரண்டு விஷயங்களும் ஆர்யாவை `ஏழு உயிர்' அண்டர்டேக்கருடன் இணைக்கிறது. அது மட்டுமன்றி நான் கடவுள் படத்தின் மூலமான `ஏழாம் உலகம்' என்ற வார்த்தையும் அண்டர்டேக்கரின் `ஏழு உயிர்' என்ற வார்த்தையும் எதோ ஒருவிதத்தில் கனெக்ட் ஆகிறது.

ஆர்யா vs அண்டர்டேக்கர்
ஆர்யா vs அண்டர்டேக்கர்

அண்டர்டேக்கர் அடிவாங்கி படுத்துக் கிடக்கும்போதே சட்டென்று எழுந்து உட்கார்ந்து சுற்றி இருப்பவர்களை அதிர வைப்பவர். அதேபோல நெற்றியில் ரத்தம் ஒழுக தலைகீழாய் நின்று யோகா செய்யும் ஆர்யா விருட்டென்று கண்களைத் திறந்து நம்மை கலங்கடிப்பார்.

இதுமட்டுமன்றி இருவருக்குமே புகை என்றொரு விஷயம் பொதுவாக இருக்கிறது. ஓம் சிவோஹம் பாடலை ஒலிக்கவிட்டு புகை சூழ கறுப்பு உடையுடன் கையில் கம்புடன் வேகவேகமாக நடந்து வந்து மரணமாஸ் என்ட்ரி கொடுப்பார் நான் கடவுள் ருத்ரா. இப்படிப்பட்ட ருத்ராவும் சரி அண்டர்டேக்கரும் சரி எந்த நேரத்தில் என்ன செய்வார்கள் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஆதலால் எந்த ரூல்ஸ்க்கும் அடங்காத நான் கடவுள் ருத்ராவையும் (ஆர்யா) அண்டர்டேக்கரையும் மோதவிட்டால் `இரண்டு விசித்திர மனிதர்கள் அல்லது கடவுளுக்கு நெருக்கமான இரண்டு மனிதர்கள்' மோதிக்கொள்ளும் மேட்ச் என்று ரசிகர்கள் பேரார்வத்துடன் கண்கள் சிமிட்டாமல் பார்ப்பார்கள்.

விக்ரம் vs பூகிமேன்

புழு தின்கும் பூச்சாண்டி பூகிமேனுடன் ராவணன், பிதாமகன், அந்நியன் மூன்றும் கலந்த கலவை விக்ரமை மோதவிடலாம். ராவணன் பட வீரா பாடலின் தொடக்கத்தில் வரும் "மெஹக்கு மஞ்சாலோ" என்ற ஓசையை என்ட்ரி பிஜிஎம்மாக ஒலிக்கவிட்டு ரசிகர்களின் கரகோசத்தை அதிகரிக்கச் செய்து சூப்பரான என்ட்ரி கொடுப்பார் ராவணன் வீரா. ஸ்டேஜ் ஏறி கயிறைத் தொட்டதும் விக்ரமின் உடலில் இருந்து வீரா மறைந்து சித்தன் வந்துவிடுவார்.

விக்ரம் vs பூகிமேன்
விக்ரம் vs பூகிமேன்

காளைபோல் இருந்த ராவணன் வீராவின் ஷோல்டர் இப்போது கொரில்லாவின் ஷோல்டர் போல் குறுகி காணப்படும். சித்தன் அருகே பூகிமேன் போனால் சித்தன் சட்டென்று திரும்பி "வொர்ர்ர்" என்று உறுமினால் போதும் பூகிமேன் ஆடிப்போய்விடுவார். என்னதான் காட்டானாக இருந்தாலும் சித்தன் ஒருவிதத்தில் குழந்தை. அவன் வீழ்வதுபோல் இருந்தால் சட்டென்று விக்ரமின் உடலில் இருந்து சித்தன் போயி அந்நியன் வந்துவிடுவார்.

கண்களை இடமும் வலமாக திக் திக் திக் என அலையவிட்டு பூகிமேனைப் பார்த்து "டேய் சித்தன ஏன்டா அடிச்ச..." என்று மிரட்டி அந்நியன் படத்தில் அட்டைப்பூச்சியை எதிரியின் உடலில் தடவிவிட்டதுபோல் பூகிமேனின் புழுக்களை எடுத்து பூகிமேனின் வாய்க்குள்ளயே திணித்து மரண காட்டு காட்டுவார் அந்நியன். அதையும் மீறி பூகிமேன் எழுந்து நின்றால் தன் உடலில் இருக்கும் ராவணன் வீரா, சித்தன், அந்நியன் மூவரையும் மாறிமாறி வெளியே கொண்டு வந்து தினுசு தினுசான அடியைக் கொடுத்து திணறடிப்பார் நம் விக்ரம்.

தனுஷ் vs ஷேன் மைக்கேல்
தனுஷ் vs ஷேன் மைக்கேல்

தனுஷ் vs ஷேன் மைக்கேல்

இருவருக்குமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உடலமைப்பு. தனுஷ் அளவுக்கு ஷேன் நரம்பன் இல்லையென்றாலும் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது ஷேன் ஒல்லியானவர். அவர் கலந்துகொள்ளும் எல்லா மேட்ச்களிலும் அவரைப் போட்டு பொளந்து எடுத்துவிடுவார்கள். முகம் முழுக்க ரத்தமாய் வடியும். இது அவ்வளவுதான் என்று நாம் நினைக்கும் தருணத்தில் எதிரியின் தாவாங்கட்டையில் "சொத்" என்று ஒரு பேக் கிக் ஷாட் கொடுத்து ஒரே அடியில் ஜெயித்துவிடுவார் ஷேன் மைக்கேல்.

நம்ம கொக்கி குமாரும் அதே மாதிரிதான். எதிரி கேங் சுற்றி நின்று வளைத்து பொளந்து எடுக்க ரத்தம் ஒழுக ஒழுக எழுந்து நிற்பான். "இதோ பாருண்ணா இது இன்னும் நிக்குது" என்று கேலி பேசும் அந்தத் தருணத்தில் ஒரே அடியில் எதிரியை சாகடிப்பான்.

"ஒரே அடி... சும்மா சிங்கம் மாதிரி நின்னான்" என்ற புதுப்பேட்டை அன்புவின் வசனம் தனுஷ், ஷேன் மைக்கேல் இருவருக்குமே பொருந்தும். ஆதலால், இவர்கள் இருவரையும் மோதவிட்டால் "கடைசில யாருதான் ஜெயிப்பானுங்க" என்று சுவாரஸ்யம் வழக்கத்தைவிட மிக அதிகமாய் இருக்கும். வை ராஜா வை படத்தில் வரும் கொக்கி குமார் தீம் மியூசிக்கை ஒலிக்கவிட்டு பொல்லாதவன் க்ளைமாக்ஸ் பைட் சீன் கெட்டப்புடன் தனுஷ் என்ட்ரி கொடுத்து ஸ்டேஜ்ஜை நோக்கி நடந்து சென்றால் கரகோஷத்தால் அரங்கம் அதிரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அர்ஜுன் vs ஜான் சினா

இருவருமே 90'ஸ் கிட்ஸ்களின் மனதை வென்றவர்கள். ஜான் சினா தேசப்பற்று மிக்கவர், முதலில் ஆர்மியில் பணிபுரிந்தவர் என்று ஒரு பேச்சு உண்டு. நம்ம அர்ஜுனும் அதே மாதிரிதான். கையில் தேசியக்கொடியை பச்சைக் குத்தியிருப்பவர், ஜெய் ஹிந்த் என்ற வார்த்தையைக் கேட்டதும் சட்டென்று மக்கள் மனதில் வந்து நிற்பவர். கடல் பட மகுடி மகுடி பாடலின் தொடக்கத்தில் வரும் இசையை என்ட்ரி பிஜிஎம் ஒலிக்கவிட்டு அர்ஜுன் ஸ்டேஜை நோக்கி நடந்து வந்து ஸ்டைலான என்ட்ரி கொடுப்பார். மனதுக்கு மிகவும் பிடித்த இந்த இருவரையும் மோதவிட்டால், "அட ரெண்டு பேருமே நமக்கு வேண்டப்பட்டவனுங்க... இதுல யாருக்குன்னு நான் சப்போர்ட் பண்ணுவேன்..." என்று ரசிகர்கள் குழம்பிப் போய் மண்டையைச் சொறிவார்கள். யார் ஜெயித்தாலும் சரி கடைசியில், இருவரும் கைகுலுக்கி கட்டிப்பிடித்துக்கொண்டு விடைபெற்றால் ரசிகர்கள் உருகிப் போவார்கள். அந்த தருணத்தை ஸ்லோ மோசனில் எடிட் செய்து பின்னணியில் "மனிதம் தாண்டி புனிதம் இல்லை வா... இதயம் தாண்டி இறைவன் இல்லை வா..." என்ற பாடலை ஒலிக்கவிட்டு சோஷியல் மீடியாவில் பகிர்ந்தால் ரெட் ஹார்ட்டீன்கள் அள்ளும்.

அர்ஜுன் vs ஜான் சினா
அர்ஜுன் vs ஜான் சினா

மிஷ்கின் vs உமாகா

மிஷ்கினைப் பற்றி ராம் ஸ்டைலில் சொன்னால் "குங்ஃபூ தெரிந்த குங்ஃபூ பாண்டா", பா.இரஞ்சித் ஸ்டைலில் சொன்னால் "யாருக்கும் அஞ்சாத ஓநாய்." உமாகாவும் அதே மாதிரிதான். எதிரே நிற்பது அண்டர்டேக்கராக இருந்தாலும் கிரேட் காளியாக இருந்தாலும் துளி பயமின்றி நிற்பார். நல்லா சண்டை போடுவாப்ள என்று நம்முடைய பாராட்டுகளைப் பெற்றவர் மிஷ்கின். தாய் மடியில் பாடலின் தொடக்கத்தில் வரும் கைலேஷ் கெர்ரின் "ஹே... ஓஹோ..." என்று குரலோசையை என்ட்ரி தீமாக ஒலிக்கவிட்டு டவுசரும் கறுப்பு கண்ணாடியும் கரண்டப்பட்ட தலையுடனும் மிஷ்கின் மேட்ச்க்கு நடந்து வந்தால் "தி என்ட்ரி ஆஃப் லவ்லி சைக்கோ" என்று அந்த மொமண்டை ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடுவார்கள்.

அப்பாவி, வெகுளி, நக்கல்... காமெடி, சென்டிமென்ட்..! - சார்லி எனும் உன்னத கலைஞன் #MyVikatan

இரண்டு பேரும் சண்டை போடத் தொடங்கி இறுதியில் மிஷ்கின் வென்றுவிட்டால் வீழ்ந்து கிடக்கும் உமாகாவிடம் மைக்கைத் தூக்கிச் சென்று "நீ என் குழந்தடா கண்ணா..." என்று வசனம் பேசி உமாகாவின் நெற்றியில் முத்தமிட்டவிட்டு மீண்டும் தன்னுடைய தீம் மியூசிக்கை ஒலிக்கவிட்டபடி மிஷ்கின் இருளுக்குள் மறைந்து போவார். அந்த மேட்ச் பற்றி ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து மகிழ்வார்கள். அந்த மேட்ச் பற்றிய ரைட்அப்க்கள் லட்சக்கணக்கான கருப்பு ஹார்ட்டீன்களை அள்ளும்.

சிம்பு vs எட்ஜ்

"கெட்டவன்", "காளை" பட சிம்புவை எட்ஜ் உடன் மோதவிடலாம். "ஆமா நான் கெட்டவன்தான்" என்பதை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தும் குணம் இருவருக்குமே உண்டு. சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர்கள். ஆனாலும், இவர்களுக்கென்று ஒரு தனி வினோத ரசிகர் கூட்டம் உள்ளது. "இவன் எங்க ஜெயிக்கப் போறான்" என்று நினைக்கும் தருணத்தில் ஒரே முட்டில் எதிரியை வீழ்த்தி ஜெயித்துவிட்டுப் போவார் எட்ஜ். சிம்புவின் படங்களும் அப்படித்தான். எதிர்பாராத நேரத்தில் எதோ ஒரு படம் பெரிய ஹிட் கொடுக்கும். ஆதலால், இந்த இரண்டு திறமையான வம்பு மனிதர்களையும் மோதவிட்டால் மேட்ச் வெறித்தனமாக இருக்கும். AAA படத்தில் வரும் மதுரை மைக்கேல் தீம்மை ஒலிக்கவிட்டு சிம்பு ஸ்டேஜை நோக்கி நடந்து வந்தால் ரசிகர்கள் "சிங்கம் களம் இறங்கிடுச்சே" என்பதை கோரஸாகக் கூறி கொண்டாடித் தீர்ப்பார்கள்.

சிம்பு vs எட்ஜ்
சிம்பு vs எட்ஜ்

சரத்குமார் vs பட்டிஸ்ட்டா

காரை ஒற்றை ஆளாகத் தூக்கும் வலுவான மனிதர்கள் இவர்கள் இருவரும். இருவருக்குமே நல்ல திடகாத்திரமான உடல்வாகு. குறிப்பாக, இருவருடைய ஷோல்டர்களும் முரட்டுத்தனமாய் இருக்கும். அதுவும் பட்டிஸ்ட்டாவுக்கு எதிரியின் இடுப்பில் முட்டித் தூக்கும் பழக்கம் உண்டு. அதைப் பார்க்கும்போது காளை ஒன்று களத்திற்குள் நிற்பதுபோல் இருக்கும். அந்தப் பட்டிஸ்ட்டாவுடன் சூரியன் பட மொட்டைத்தலை சரத்குமார் மோதினால் இரண்டு முரட்டு காளைகள் மோதிக்கொள்வது போல் இருக்கும். சந்தோஷ் நாராயணின் ஜிகிர்தண்டா அசால்ட் சேது தீம் மியூசிக் அல்லது வட சென்னை ராஜன் என்ட்ரி தீம் மியூசிக்கை என்ட்ரி பிஜிஎம்மாக ஒலிக்கவிட்டு சரத்குமார் ஸ்டேஜ்ஜை நோக்கி நடந்து வந்தால் ரசிகர்கள் மிரண்டு போயி பார்ப்பார்கள்.

சூர்யா vs கெய்ன்

கெய்ன் முகத்தில் ஆசிட் அடித்துவிட்டார்கள் என்று ஒரு பேச்சு உண்டு. அதேபோல காக்க காக்க படத்தில் சூர்யாவின் முகத்தில் ஆசிட் அடிக்க முயல்வது போல் காட்சி வரும். "என்ன மூஞ்சி வெந்துபோகும் அவ்வளவுதான" என்று அசால்ட்டாக நிற்பார் சூர்யா. ஆக, ஆசிட் என்றொரு விஷயம் இருவருக்கும் பொதுவாக இருக்கிறது. அது மட்டுமன்றி கெய்ன் தன்னுடைய அண்ணன் அண்டர்டேக்கர் போல கொஞ்சம் விசித்திரமானவர். அண்ணனுக்கு பாலாவின் நான் கடவுள் ஆர்யா என்றால் தம்பிக்கு அதே பாலாவின் நந்தா சூர்யாதான் பொருத்தமாய் இருக்கும். நான் கடவுள் ஆர்யாவைப் போல நந்தா சூர்யாவின் பச்சை கண்களும் பார்ப்பதற்கு கொடூரமானவை. அவர்களின் பார்வையே மிரட்டும். கெய்ன்னோட கண்களும் கொஞ்சம் உள்வாங்கி வித்தியாசமாய் இருக்கும். ஆதலால் இந்த இரண்டு பயம் அறியான்களையும் மோதவிட்டால் மேட்ச் வெகுசிறப்பாய் இருக்கும். மாஸ் பட இன்டர்வெல் தீம் மியூசிக்கை என்ட்ரி பிஜிஎம்மாக ஒலிக்கவிட்டு நந்தா சூர்யா ஸ்டேஜை நோக்கி நடந்து வந்தால் கொலைவெறித்தனமாக இருக்கும்.

சூர்யா vs கெய்ன்
சூர்யா vs கெய்ன்

ராணா vs கிரேட் காளி

ராணா, கிரேட் காளி இருவருமே நல்ல உயரமான மனிதர்கள். இருவரும் ஒரே உயரம் என்று சொல்ல வரவில்லை. தமிழ் சினிமாவிலயே அதிகமான உயரமானவர் ராணா என்பதால் இந்த ஒப்பீடு. இருவருடைய முகவெட்டு கூட நீள்வாக்கிலான முகவெட்டு. பாகுபலி படத்தில் ஒரு ராட்சத காட்டெருமையை ஒற்றை ஆளாக அடக்கும் காட்சியை ஓரளவுக்கு ரசித்து பார்க்க ராணாவின் பாறை போன்ற திடகாத்திரமான உடல்தோற்றம் மிக முக்கிய காரணமாக இருந்தது. அப்படிப்பட்ட பாகுபலி ராணாவும் மண்டையோடு நொறுங்கமளவுக்கு எதிரியின் தலையை இரு கைகளால் அழுத்திப் பிடித்து ரத்த ஓட்டத்தை நிறுத்தி மயங்க வைக்கும் கிரேட் காளியும் மோதிக்கொண்டால் சும்மா அனல் பறக்கும். பலம் பொருந்திய இரண்டு மலை மனிதர்களும் மோதிக்கொள்ளும் அந்த மேட்ச் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச்சைப் போல ரசிகர்களின் பிபியை ஏற்றிவிட்டு நல்ல வியாபாரம் பார்க்கும்.

- ராசு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு