Published:Updated:

`ஜோடிஸ்' - சைமஸ் குழுமத்திலிருந்து அறிமுகமானது புதிய காலணி பிராண்ட்!

சைமஸ் குழு, வியாபாரிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் உட்பட தமிழகம் முழுவதும் சுமார் 500 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த சைமஸ் குழுமம் தனது புதிய காலணி பிராண்டான "ஜோடிஸ்"-ஐ அக்டோபர் 17 அன்று சந்தையில் அறிமுகப்படுத்தியது. காணொளி மூலம் நடைபெற்ற இப்பிரம்மாண்டமான வெளியீட்டு விழாவில் சைமஸ் குழு, வியாபாரிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் உட்பட தமிழகம் முழுவதும் சுமார் 500 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

சைமஸ் குழுமத்தின் இயக்குனர் யாசின் முஸ்தபா அனைவரையும் வரவேற்று விழாவைத் துவக்கி வைத்து பேசுகையில், சைமஸ் குழு எவ்வாறு அமைந்தது, குழுவின் பிராண்ட் வியூகம் ஆகியவற்றை விவரித்தார்.

பிறகு, சைமஸ் குழு தயாரிப்பு மேம்பாடு, உற்பத்தி, மென்பொருள் மேம்பாடு மற்றும் விநியோகம் ஆகியவற்றில் தங்கள் விரிவான காலணி அனுபவத்தைப் பயன்படுத்தி அனைத்து வாடிக்கையாளர் பிரிவுகளையும் திருப்திப்படுத்தும் உயர்தர தயாரிப்புகளை வழங்குவதைப் பற்றிப் பேசினார்.

சைமஸ் குழுமத்தின் இயக்குனர் யாசின் முஸ்தபா
சைமஸ் குழுமத்தின் இயக்குனர் யாசின் முஸ்தபா

நிகழ்வின் சிறப்பம்சமாக சைமஸ் குழு சமீபத்திய டிஜிட்டல் மார்க்கெட்டிங் செயல்முறைகள், சில்லறை விற்பனையாளர்களுக்கு பிரத்யேகமான மொபைல் செயலி, சொந்தமாக உருவாக்கப்பட்ட ERP மென்பொருள் பற்றி விளக்கமளித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு