வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
எத்தனையோ சினிமாக்களை பார்த்திருப்போம் .சினிமாக்களின் சில கதாபாத்திரங்கள் நம் மனதிற்கு மிகவும் பிடிக்கும். அதற்கு சில சமயம் காரணம் சொல்லலாம். சில சமயம் காரணம் சொல்ல முடியாது.அப்படி என்மனதிற்கு மிகவும் நெருக்கமான திரைப்பட கதாபாத்திரம்.. . ஒன்று உண்டு.அந்த கதாபாத்திரம் மனதிற்கு ஏன் நெருக்கமானது...?...
அன்றும் இன்றும் என்றும் என் மனதிற்கு நெருக்கமானது....'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் கண்களில் கூலிங் கிளாஸூம், ஜரிகை வேஷ்டி வெள்ளை (சமயத்தில் கலர்)நிற ஜிப்பாவும் ,கைகளில் தங்க காப்பு, கழுத்தில் தங்கச் சங்கிலி மின்ன என்ஃபீல்ட் பைக்கில் பலத்த சத்தத்துடன் வரும் டேவிட் என்கிற கதாபாத்திரத்தில் வரும் தியாகராஜன் தான்!
அண்ணனோடு பிறக்காத நிறைய பெண்களுக்கு ஒரு ஏக்கம் இருக்கும், அது எனக்கு நிறைய உண்டு.

எனக்கு ஒரு அண்ணன் இருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டும் என நான் கற்பனை செய்து வைத்த உருவத்தை அப்படியே திரையில் பிரதிபலித்து இருப்பார் தியாகராஜன். மம்பட்டியான்' தியாகராஜன்... மனதில் பச்சக் கென்று முதன்முதலில் புகுந்து கொண்டது இப்படித்தான்.
அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை அவர் படத்தில் தங்கையை அதட்டி உருட்டி ,மிரட்டும் போதெல்லாம் என்னை மிரட்டுவது போலவே கற்பனை செய்து கொள்வேன்.
யாரிடத்திலும் என்னை விட்டுக் கொடுக்காமலும் ,எனக்காக எதையும் விட்டுக் கொடுப்பவனாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். படத்தில் அவரின் கதாபாத்திரம்சற்று ஒழுக்க மீறலாக இருக்கும் நான் அதை குறிப்பிடவில்லை..
அந்த கதாபாத்திரத்தையும் தாண்டி அவரின் நடை, உடை, பாவனை எனக்கு மிகவும் பிடிக்கும். இதோ இப்பொழுது கூட என் பள்ளிப்பருவ நட்புகளிடம் கேட்டால்... தியாகராஜன் மேல் நான் எவ்வளவு பைத்தியம் என்று சொல்லுவார்கள். கேலி செய்வார்கள். நான் அதையெல்லாம் சற்றும் பொருட்படுத்த மாட்டேன்.

தியாகராஜன் போல் ஒரு அண்ணனுக்காக எதையும் விட்டுக் கொடுக்கலாம். சில நேரங்களில் உரிமையுடன் அண்ணனிடம் இருந்து பொருட்களை தட்டியும் பறிக்கலாம் . (இதுவும் ஒருவித காதல் )
தியாகராஜன் போல் ஒரு அண்ணனிடம் இரவு நேரத்தில் மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு, விண்மீன்களைப் ரசித்து கொண்டே... நண்பனைப் போல் எல்லா விஷயங்களையும் உரிமையோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். எனக்கு பிடித்த போண்டா, ரோஸ்மில்க்கை அவர் வாங்கி தர வேண்டும். நான் உரிமையோடு அவர் தலை முடியை கலைத்துவிட்டுக் கொண்டு(டே)கலாய்த்தபடியே சாப்பிட வேண்டும். என் கைகளால் சாப்பாடு செய்து பரிமாற வேண்டும். புதுசு புதுசாய் கலர்கலராய் உடைகளை வாங்கித் தர வேண்டும் . நான் வாங்கி தந்ததை அணிந்துகொண்டு ,யாராவது அழகாய் இருக்கிறது என்று சொன்னால்.. என் ' தங்கை' தான் வாங்கிக் கொடுத்தாள் என்றும் சொல்லவேண்டும் (அது ரொம்ப ரொம்ப முக்கியம் பாஸ்)

நான் சற்று வால். எல்லோரிடமும் தைரியமாக பேசுவேன் . ஆனால் என் அண்ணன், நான் இப்படி யாரிடமாவது அதிகம் வாய் பேசினால், அளவா பேசணும், தன்னடக்கம் வேணும் என்று நேரம் கிடைக்கிற போதெல்லாம் எனக்கு அறிவுரை சொல்ல வேண்டும் என்று நினைப்பேன்.
அது மட்டுமல்லாமல் அந்த என்ஃபீல்டு பைக்க அண்ணன் ஓட்ட பின்னாடி உட்கார்ந்துட்டு, பாருங்கடா என் அண்ணனோட 'கெத்த"... அப்படின்னு கத்தி சொல்லணும்னு ரொம்ப நாள் ஆசை. திருமணத்திற்குமுன் அண்ணன் உறவு பாதுகாப்பும், திருமணத்திற்குப்பின் மதிப்பும் இருக்கும்... என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. எத்தனை பேர் என்னை 'ஆதிரை' என்று அழைத்தாலும் ..என் அண்ணன் என்று ஒருவர் இருந்து அவர் அழைக்கும்போதுதான் அந்த பெயர் அழகாகும் என்பது என் எண்ணம்.

மொத்தத்தில் தியாகராஜன் போல் ஒரு அண்ணனின் பாசத்தில் நான் வளர வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது. இனி ஒரு ஜென்மம் என்றிருந்தால் 'அலைகள் ஓய்வதில்லை' டேவிட் என்கிற தியாகராஜன் போல் ஒரு அண்ணனுக்கு தங்கையாக நான் பிறக்க வேண்டும். அவனுடன் சண்டை போட வேண்டும். பிரியமாக அவனுக்கு ஊட்டி விட வேண்டும். அவனை(ரை) என் கண்ணின் இமைபோல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
மொத்தத்தில்.
உயிரோட்டமான அகராதியின்
மறுவடிவம் என் அண்ணன்.. என்று சத்தம்போட்டு சொல்ல வேண்டும்.
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.