Published:Updated:

காளிப்பட்டி நடைப் பயணக் குறிப்புக்கள்! | My Vikatan

நடைப்பயணம்

கட்டுக் கடங்காத கூட்டத்தினால், சுவாமி தரிசனம் செய்யாமல், கோபுர தரிசனம் செய்தோம். பிள்ளைகள் மிளகாய் மற்றும் வாழைக்காய் பஜ்ஜி, டெல்லி அப்பளம் சாப்பிட்டனர்.

Published:Updated:

காளிப்பட்டி நடைப் பயணக் குறிப்புக்கள்! | My Vikatan

கட்டுக் கடங்காத கூட்டத்தினால், சுவாமி தரிசனம் செய்யாமல், கோபுர தரிசனம் செய்தோம். பிள்ளைகள் மிளகாய் மற்றும் வாழைக்காய் பஜ்ஜி, டெல்லி அப்பளம் சாப்பிட்டனர்.

நடைப்பயணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, நேற்றைய நடைப் பயணம், தாரமங்கலத்தில் மாலை 5மணிக்கு ஆரம்பித்து, அதிகாலை 1மணியளவில் நிறைவடைந்தது (32கிலோமீட்டர், 7 மணி 30 நிமிடங்கள்). கொரோனாவால் தடைப்பட்டது மீண்டும் ஆரம்பித்திருக்கிறது.

கடைசி 4 கிலோமீட்டர்களில் மனசும் உடம்பும் கெஞ்ச, அடிமேல் அடிவைத்து, இலக்கை அடைந்தாயிற்று.

ரஜினி சொன்னது போல, மனசு சொல்வதை உடம்பு கேட்பது மிகக் கடினமான ஒன்றாகும்.

வழியெங்கும் மோர், எலுமிச்சை சாறு, சூடான பாதாம் பால், தக்காளி சாதம்.

காக்கா பாளையம் அருகில் சூடான இட்லியும் பொங்கலும் சாப்பிட்டு விட்டு பயணத்தை தொடர்ந்தோம்.

நடைப்பயணம்
நடைப்பயணம்

70-75 வயதுள்ள ஒரு பாட்டி நடந்து வந்தார். ‘அம்மா, கல்லு குத்தலையா? செருப்பு போடலாமே?’ என்றதற்கு, ‘அதெல்லாம் பார்த்தா முடியுமாப்பா? கடவுளைக் காணப் போகையில் செருப்பு அணியக் கூடாது’ என்றார்.

’16 அமாவாசைக்கு நான் மாதேஸ்வரன் மலைக்கு நடைப்பயணம் போயிருக்கிறேன். நீலமலையெல்லாம் தாண்டிப் போவனும். திருப்பதி மலையெல்லாம் சின்னது’ என்றார். ‘வெரசா நடங்க’ என்றபடியே நடந்த அப்பாட்டியின் வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலவில்லை.

நடைப்பயணம்
நடைப்பயணம்

கட்டுக் கடங்காத கூட்டத்தினால், சுவாமி தரிசனம் செய்யாமல், கோபுர தரிசனம் செய்தோம். பிள்ளைகள் மிளகாய் மற்றும் வாழைக்காய் பஜ்ஜி, டெல்லி அப்பளம் சாப்பிட்டனர்.

மனதிற்கும் உடம்பிற்கும் இது ஒரு பரிசோதனை.

வழியில் பெரியவர் ஒருவர் தனது குடும்பத்துடன் நடக்கையில் சொன்னார்: ‘இப்படி காத்தாட குடும்பத்தோட நடக்கிறது எவ்வளவு ஜாலி. உடம்புக்கும் தெம்பு’.

நடைப்பயணம்
நடைப்பயணம்

வீட்டிற்கு வந்தபின் பார்த்தால், ஸ்டேப்ளர் பின் போல ஏதோவொன்று குத்தியிருந்தது. எடுத்து விட்டபடியால் தத்தித் தத்தி நடக்க முடிகிறது. இன்றும் நாளையும் விடுமுறை.

கந்தனுக்கு அரோகரா!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.