Published:Updated:

ஆன்லைன் மூலம் டீ விற்பனை... ஆண்டுக்கு 70 கோடி ரூபாய்... கலக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்!

ஒரு தனித்துவமான பிசினஸ் மாடலைக் கண்டறிந்து, உலகம் முழுக்க உள்ள டீ பிரியர்கள் மனதில் இடம்பிடித்திருக்கின்றன இந்த நிறுவனங்கள்.

கல்லூரியில் படிக்கும் இளைஞர்களிடம், ‘‘ஒரு லட்சம் ரூபாய் தருகிறோம். டீக்கடை நடத்துவீர்களா?’’ என்று கேட்டுப் பாருங்கள். யாருமே அந்தத் தொழிலைச் செய்வதற்குத் தயாராக இருக்க மாட்டார்கள். ‘அதெல்லாம் என் கனவுத் தொழில் அல்ல’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள்.

Vahdam Teas
Vahdam Teas

ஆனால், ஆன்லைன் மூலம் அட்டகாசமாக டீ விற்பனை செய்து, அமோகமாக சம்பாதித்து வருகின்றன நான்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள். எல்லோரும் செய்யும் டீ விற்பனைதான், என்றாலும் கொஞ்சம் மாற்றி யோசித்ததன் மூலம் தங்களுக்கென ஒரு தனித்துவமான பிசினஸ் மாடலைக் கண்டறிந்து, உலகம் முழுக்க உள்ள டீ பிரியர்கள் மனதில் இடம்பிடித்திருக்கின்றன இந்த நிறுவனங்கள்.

அந்த நான்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்களைப் பற்றிய அலசல்.

நூறு சதவிகிதம் ஆன்லைன் தேநீர் பிராண்டான ‘வஹ்தாம் டீஸ்’ வெற்றிக்குப்பின்னால் பாலா சர்தா என்ற 25 வயது இளைஞர் இருக்கிறார். 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட வஹ்தாம் டீஸ், தேநீர் விநியோகத்தில் உள்ள இடைத்தரகர்களை நீக்கி, டார்ஜிலிங், அசாம், நீலகிரி, அருணாசலப்பிரதேசம், இமாசலப்பிரதேசம், சிக்கிம், பீகார் மற்றும் நேபாளம் ஆகிய ஏழு பிராந்தியங்களிலிருந்து சுமார் 175 தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சிறு விவசாயிகளிடமிருந்து தேநீரைக் கொள்முதல் செய்து, அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

பொதுவாக, தேயிலை தோட்டத்தில் நீங்கள் பெறும் சுவைக்கும், அறுவடைக்கு ஒரு வருடம் கழித்து நீங்கள் பெறும் சுவைக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. அறுவடை செய்வதற்கும் உலகின் ஏதோ ஒரு நாட்டில் உள்ள நுகர்வோர் அதை வாங்குவதற்கும் இடையில் குறைந்தபட்சம் 12 மாதங்கள் இடைவெளி உள்ளது. ஆனால், உற்பத்தி செய்த 24 - 72 மணி நேரத்திற்குள் தேயிலை விவசாயிகளிடமிருந்து நேரடியாக இலைகளை வாங்குவதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு நல்ல தேயிலையைத் தருகிறது இந்த வஹ்தாம்.

இந்த நிறுவனம் இதுவரை 76 நாடுகளுக்கு இருபது மில்லியன் கப்களுக்கும் மேற்பட்ட தேயிலையை அனுப்பி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் பிராந்தியங்களிலிருந்து பெறப்படும் தேயிலையை டெல்லி கிடங்கிற்கு உடனடியாக அனுப்புகிறது இந்த நிறுவனம். அதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒன்று, டெல்லியில் உள்ள விமான நிலையத்திலிருந்து வேகமாகவும், சுலபமாகவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். இரண்டு, அதன் வறண்ட காலநிலை, வேறுபட்ட தேயிலைகளின் நீண்ட ஆயுளுக்கு மிகவும் பொருத்தமானது.

Bala Sarda
Bala Sarda

டெல்லியில் தேயிலை பேக் செய்யப்பட்டு, ஆர்டர் செய்யப்பட்ட இடங்களுக்கு நேரடியாக அனுப்பப்படுகிறது. அமெரிக்காவிற்கு சராசரி விநியோக நேரம் நான்கு வேலை நாள்கள். ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் தெற்காசியாவுக்கு இது அதிகபட்சம் ஆறு நாள்கள் ஆகும். ஃபெடெக்ஸ், டி.எச்.எல் மூலம் உலக முழுக்க ஃப்ரெஷ் தேயிலையை அனுப்புகிறது இந்த நிறுவனம்.

இந்த நிறுவனம் இதுவரை 76 நாடுகளுக்கு இருபது மில்லியன் கப்களுக்கும் மேற்பட்ட தேயிலையை அனுப்பி இருக்கிறது. வஹ்தாம் டீக்கள் பிரீமியம் 100 கிராமுக்கு 15 டாலர்கள் வரையும், ஒரு பெட்டி தேநீர் பைகள் 4 முதல் 6 டாலர் வரையும் விற்கப்படுகின்றன. இந்த நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் 70 கோடி ரூபாயை ஈட்டுகிறது. இதுவரை முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 30 கோடி ரூபாயைத் திரட்டியுள்ளது. இந்த நிறுவனத்தின் வருவாயில் 98% வெளிநாட்டுச் சந்தைகளிலிருந்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் பெயர் வஹ்தாம் என்று வித்தியாசமாக இருக்கிறதே என இந்த நிறுவனத்தை நிறுவிய பாலா சர்தாவிடம் கேட்டால், சிரித்தபடி சொல்கிறார்... ‘‘என் அப்பாவின் பெயர் மாதவ் (Madhav). இதை அப்படியே திருப்பிப் போட்டேன். வஹ்தாம் (Vahdam) என்று வந்தது. அதை என் நிறுவனத்தின் பெயராக வைத்துவிட்டேன்’’ என்கிறார் பாலா.

எதையும் மாற்றும் ஒரு கப் - சாய் பாய்ன்ட்

Chai point
Chai point

`எந்தவொரு தேநீர் நிறுவனமும், தனக்கு கிடைக்கும் அனைத்து விநியோக முறைகளையும் பயன்படுத்தி லாபம் ஈட்ட முயல வேண்டும்’ என்பது சாய் பாய் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் நிறுவனர் அமுலீக்சிங்கின் கொள்கை. 2012-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனம், இன்று மெட்ரோ நகரங்களில் சுமார் 150 கிளைகளைக் கொண்டுள்ளது. எயிட் ரோடு வென்சர்ஸ், பாரகன் பார்ட்னர் உள்ளிட்ட முதலீட்டு நிறுவனங்கள் இந்த நிறுவனத்தில் சுமார் 200 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.

சாய் பாயின்ட்டின் வணிகத்தின் பெரும்பகுதியான சாய் @ ஒர்க் என்பது, பெரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவிலான நிறுவனங்களின் தேவையை நேரடியாகப் பூர்த்தி செய்யும் ஒரு சேவையாகும். பெரிய கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் வணிகப் பூங்காக்கள் வளாகத்தில் சிறிய கடைகள் அமைக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சிறிய நிறுவனங்களில் தேநீர் டிஸ்பென்சர்கள் மற்றும் அதிக வெப்பம் தாங்கும் ஃப்ளாஸ்க்குகளைப் பயன்படுத்தி பலருக்கும் சுடச்சுட டீ பரிமாறப்படுகிறது.

கடந்த ஆண்டு, இந்த நிறுவனம் சுமார் ரூ.140 கோடிக்கும் மேல் வருவாயை ஈட்டியுள்ளது.

இவை ஆண்ட்ராய்டு ஐ.ஓ.டி (IoT) தொழில்நுட்பத்தினால் இயக்கப்படும் டிஸ்பென்சர்கள். இந்த டிஸ்பென்சர்கள் சுமார் 2000 வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. ஒரு டிஸ்பென்சர் இயந்திரத்துக்கு மாதம்தோறும் சுமார் 2000 ரூபாய் செலவிட, சுமார் ரூ.27,000 லாபம் கிடைக்கிறது. சாய் பாயின்ட் ஆப் மூலமும் தேநீர் டெலிவரி செய்யப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு ஊபர் ஈட்ஸ், ஜொமோடோ மற்றும் ஸ்விகி உள்ளிட்ட சேனல்கள் மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்யவும் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

சாய் பாய்ன்ட்டின் ஒவ்வொரு கப்பிலும் தரமும் சுவையும் நிலையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரே நிறுவனத்திடமிருந்து பால் பெறப்படுகிறது. ஒரே சப்ளையரிடமிருந்து சர்க்கரையும் பெறப்படுகிறது. தேயிலைகள் அசாம், டார்ஜிலிங் மற்றும் நீலகிரியிலிருந்து பெறப்படுகின்றன. பின்னர் அவை ஒவ்வொரு கடைக்கும் அனுப்பப்படுகின்றன. விநியோகச் சங்கிலி அமைப்பு மையப்பட்டிருப்பதால், அனைத்துப் பொருள்களின் மீதும் நூறு சதவிகிதக் கட்டுப்பாட்டினை வைத்திருக்கிறது.

"குடும்ப கஷ்டம், பள்ளிக்கூடத்தை நிறுத்திட்டு பிசினஸ் ஆரம்பிச்சேன்!" சுகன்யாவின் சணல்பை வெற்றிக்கதை!

ஒரு நாளைக்கு சுமார் நான்கு முதல் ஐந்து லட்சம் கப் தேநீரை விநியோகம் செய்கிறது இந்த நிறுவனம். கடந்த ஆண்டு, இந்த நிறுவனம் சுமார் ரூ.140 கோடிக்கும் மேல் வருவாயை ஈட்டியுள்ளது. தேநீர் மட்டும் இல்லாமல், பிஸ்கெட், வடா பாவ் மற்றும் கேக்குகளும் விற்கப்படுகின்றன.

தேநீரை மாற்றி யோசிப்போம் - சாயோஸ்

நவம்பர் 2012-இல் தொடங்கப்பட்ட சாயோஸ் தற்போது என்.சி.ஆரில் (National Capital Region) எட்டு விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது. இப்போது மும்பை மற்றும் பெங்களூருக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

Chayoos
Chayoos

`இஞ்சி கொஞ்சம் அதிகமாக, பால் கொஞ்சம் குறைவாக, ஸ்ட்ராங்க், லைட் என்று பல வகையில் டீ குடிக்க பலர் விரும்புவார்கள். அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதுதான் எங்கள் நோக்கம்’ என்கிறார் சாயோஸ் நிறுவனத்தின் நிறுவனர் நிதின் சலூஜா.

டைகர் குளோபல், சைஃப் பார்ட்னர்ஸ் மற்றும் இன்டாக்டட் கேபிட்டல் ஆகியவற்றின் ஆதரவுடன் இந்த நிறுவனம் சுமார் 17 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது.

இந்த நிறுவனத்தின்அனைத்துக் கடைகளும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு செயல்படுகின்றன. வாடிக்கையாளர்களின் விருப்பங்கள் கேட்கப்பட்டு, அதற்கேற்ப தேநீர் தயாரிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் பிரபலமான கிளை ஒன்று, ஆண்டுக்கு சுமார் நான்கு கோடி ரூபாய்மேல் லாபத்தை ஈட்டுகிறது! இந்த நிறுவனத்தின் அனைத்துக் கடைகளும் அசாம் சி.டி.சி கலவையான தேயிலைப் பயன்படுத்துகின்றன.

ஐந்து ஆண்டுகளில் மேலும் 250 கடைகளைத் தொடங்குவது சாயோசின் எதிர்காலத் திட்டம்.

இதனுடன் இயங்கும் ஃபுட்ஸ் மற்றும் ஸ்னாக்ஸ் பிரிவு சாயோஸ் நாற்பது சதவிகிதத்துக்குமேல் வருவாய் அளிக்கிறது. வடா பாவ், முட்டை பொடிமாஸ் சான்ட்விச் போன்ற உணவுகள் வாடிக்கையாளர்களுக்குப் பிடித்தமானவை.

பெரும்பாலான விற்பனையாளர்கள் எதிர்கொள்ளும் சவால், அளவைக் குறைக்கும்போது தரத்தை எப்படிப் பராமரிப்பது என்பதுதான். `ஒவ்வொரு கப் டீயைக் குடிக்கும்போதும், அது வீட்டில் குடிக்கும் டீயைப் போன்று இருக்கிறது என்ற நினைப்பு வரவேண்டும்’ என்கிற இந்த நிறுவனம்.

நைட்டி பிசினஸ்... மாதம் நாலு லட்சம் வருமானம்! முத்துமாரியின் `மாத்தியோசி' கதை

கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஏழு விற்பனை நிலையங்களைத் திறந்துள்ள இந்த நிறுவனம், கடன் மற்றும் பங்கு மூலம் ஐந்து ஆண்டுகளில் மேலும் 250 கடைகளைத் தொடங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு