Published:Updated:

ரவி: சிந்தாதிரிப்பேட்டை கால்பந்துச் சிறுவனை ஸ்பெயினுக்கு அனுப்பிய கோச் - ஒரு தன்னம்பிக்கை கதை!

ரவி

எளிய குடும்பம் ஒன்றில் பிறந்த ரவி, மே தினப்பூங்காவுக்கு எதிரில் இருக்கும் சிந்தாதிரிப்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில்தான் படித்தார்.ரவி ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றுகிறார்.

ரவி: சிந்தாதிரிப்பேட்டை கால்பந்துச் சிறுவனை ஸ்பெயினுக்கு அனுப்பிய கோச் - ஒரு தன்னம்பிக்கை கதை!

எளிய குடும்பம் ஒன்றில் பிறந்த ரவி, மே தினப்பூங்காவுக்கு எதிரில் இருக்கும் சிந்தாதிரிப்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில்தான் படித்தார்.ரவி ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றுகிறார்.

Published:Updated:
ரவி
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரிலிருந்து வீடியோ காலில் பேசுகிறான் ராகுல். சிந்தாதிரிப்பேட்டை செக்குமோட்டில், 80 சதுரடி வீட்டுக்குள் இருந்து சாமுண்டீஸ்வரியும் கமலக்கண்ணனும் கண்கள் கலங்க அவனோடு பேசிகொண்டிருக்கிறார்கள்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ராகுல், சிந்தாதிரிப்பேட்டை ஆண்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறான். சிறு வயதிலிருந்தே கால்பந்துமீது தீரா ஆர்வம். பள்ளி மைதானத்தில் பந்தை உதைத்துக்கொண்டிருந்தவனைக் கண்டெடுத்தார் ரவி. முறைப்படி நுட்பங்கள் கற்றுத்தந்து ஆளாக்கினார். ஸ்பெயின் CF FUENLABRADA கிளப் ராகுலை அரவணைத்துக்கொண்டது. மேட்ரிட் நகரில் தீவிரப் பயிற்சியிலிருக்கிறான் ராகுல். 57 வயதாகிறது ரவிக்கு. தினமும் காலையும் மாலையும் சிந்தாதிரிப்பேட்டை மே தினப்பூங்கா மைதானத்தில் அவரைப் பார்க்கலாம். அரைக்கால் சட்டையும் ஜெர்ஸியுமாக விசிலோடு வந்து இறங்கிவிடுவார்.

ரவி
ரவி
சிந்தாதிரிப்பேட்டை வட்டார குடிசைப்பகுதிகளில் வசிக்கும் 10 வயதுச் சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை எல்லோரும் அவரைச் சூழ்ந்துகொள்கிறார்கள். அடுத்த இரண்டு மணிநேரம் அனலாகிறது மேதினப் பூங்கா. அப்பா, கோச், மாஸ்டர் என்று எல்லோரும் கொண்டாடுகிறார்கள் ரவியை.
ரவி
ரவி

எளிய குடும்பம் ஒன்றில் பிறந்த ரவி, மே தினப்பூங்காவுக்கு எதிரில் இருக்கும் சிந்தாதிரிப்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில்தான் படித்தார்.ரவி ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றுகிறார். பந்துகளோடு தினமும் மாலை மேதினப் பூங்காவுக்கு வந்த ரவியை குழந்தைகள் ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள். மெல்ல மெல்ல நெருங்கி வந்தார்கள். அவர்களை சுவீகரித்து பயிற்சி தர ஆரம்பித்தார். ஒரு பள்ளியில் விளையாட்டு ஆசிரியராகப் பணியாற்றும் ரமேஷ் கூட கைகோர்க்க உற்சாகமாக மேலெழுந்தது மேதின பூங்கா கால்பந்து பயிற்சி மையம்.

இப்போது 70க்கும் மேற்பட்டவர்கள் ரவியிடம் பயிற்சி பெறுகிறார்கள். சிறுமிகளும் வருகிறார்கள். குழந்தைகளும் ஆசையாக வந்து பந்தை உதைக்கிறார்கள். எல்லோருக்கும் இடமிருக்கிறது ரவியின் பயிற்சி மையத்தில்.

ரவியிடம் பயிற்சி பெற்ற முரளி செகண்ட் டிவிஷன் வரைக்கும் விளையாடியுள்ளார். எம்.எஸ்.டபிள்யூ படித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் ஹெச்.ஆராகப் பணியாற்றினார். இப்போது சொந்தமாக பிசினஸ் செய்கிறார். மேதினப் பூங்கா பயிற்சி மையத்தின் முதல் செட் மாணவர் இவர். இப்போது ரவியோடு சேர்ந்து பயிற்சியை வலுப்படுத்துகிறார்.

ரவி
ரவி

ராஜூ, மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார். அவரும் ரவியிடம் பயிற்சி பெற்றவர்தான். செகண்ட் டிவிஷன் வரை விளையாடியவர்.வெறும் காலால் பந்தை உதைக்கும் மாணவர்களுக்கு பூட், ஜெர்ஸி என தேவையான அனைத்தையும் ரவியே வாங்கித்தருகிறார். முரளி, ராஜூ போன்ற பலர் எல்லாவற்றுக்கும் பின்புலமாக இருக்கிறார்கள். ரவி, தன்னை நாடி வரும் சிறுவர்களை பயிற்சியில் இணைத்துக்கொள்ள சில நிபந்தனைகளை வைத்துள்ளார்.

கண்டிப்பாக பள்ளிக்கோ, கல்லூரிக்கோ செல்லவேண்டும். படிக்காத சிறுவர்- சிறுமியர்களுக்கு பயிற்சியில் இடமில்லை. பயிற்சியில் இறங்கிவிட்டால், கவனச்சிதறல் இருக்கக்கூடாது. சரியான நேரத்துக்கு வரவேண்டும். எங்கெல்லாம் உதவிகள் கிடைக்குமோ அங்கெல்லாம் சென்று நின்று தன் மாணவர்களுக்காக வாங்கி வருகிறார் ரவி. பள்ளி, கல்லூரிகளில் இடம் பெற்றுத் தருவது முதல் நோட்டுப் புத்தகங்கள் வாங்கித்தருவது வரை அவரது உதவிக்கரம் நீள்கிறது.

சென்னையில் செயல்படும் சில தொண்டு நிறுவனங்கள், உலகெங்கும் உள்ள கால்பந்து கிளப்களுடன் இணைந்து செயல்படுகின்றன. தரமான வீரர்களை அடையாளம் கண்டு அந்நாடுகளுக்கே அழைத்துச் சென்று பயிற்சி அளித்து பிரதான அணிகளில் இணைத்து விளையாடச் செய்கின்றன. அப்படியொரு நிறுவனத்தின் பார்வையில் மேதினப்பூங்கா மைதான வீரர்கள் பட, ஸ்பெயின் வாய்ப்பு அமைந்தது. ஸ்பெயின் செல்ல இரண்டு பேர் தேர்ச்சி பெற்றும் ஒருவருக்கு மட்டுமே போக்குவரத்துக்கான உதவிகள் கிடைத்தன.

கால்பந்து சென்னையின் பூர்வ விளையாட்டு. தெருவுக்குத்தெரு கால்பந்து கிளப்கள் இருக்கின்றன. ஏராளமான இளைஞர்கள் கனவுகளோடு இங்கே பந்துகளை உதைத்துக்கொண்டிருக்கிறார்கள். இத்தனை வளர்ந்த பிறகும் உலகக்கோப்பை கால்பந்தில் தகுதிச்சுற்றைக்கூட தாண்டியதில்லை இந்தியா. ரவி மாதிரி தன்னலம் கருதாமல் களத்தில் நிற்கும் பயிற்சியாளர்களையும் ஸ்பெயின் வரைக்கும் எட்டிப் பிடித்திருக்கும் அடித்தட்டுக் குடும்பத்து ராகுலைப் போன்ற வீரர்களையும் அரசு உற்சாகப்படுத்த வேண்டும்.

வீடியோ வடிவில் ரவியின் கால்பந்தாட்ட பயிற்சியைக் காண....