Published:Updated:

`அன்று வயல்களில் ஓடிய கால்கள்'- ஓட்டப் பந்தயத்தில் சாதனை படைத்த 105 வயது மூதாட்டி!

Gujarat- RamBhai

105 வயது மூதாட்டி ராம்பாய் 200 மீட்டர் தூரத்தை 1 நிமிடம் 52. 17 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

`அன்று வயல்களில் ஓடிய கால்கள்'- ஓட்டப் பந்தயத்தில் சாதனை படைத்த 105 வயது மூதாட்டி!

105 வயது மூதாட்டி ராம்பாய் 200 மீட்டர் தூரத்தை 1 நிமிடம் 52. 17 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

Published:Updated:
Gujarat- RamBhai
குஜராத் மாநிலம் வதோராவில் நடைப்பெற்ற தேசிய தடகளப்போட்டியில் 200 மீட்டர் தூரத்தை 1 நிமிடம் 52. 17 விநாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார் 105 வயது நிரம்பிய ராம்பாய். இதே வயதில் சர்தார்னி மன் கௌர் 100 மீட்டர் தூரத்தை 74 வினாடிகளில் கடந்ததே முந்தைய சாதனையாக இருந்தது. இச்சாதனையை தற்போது ராம்பாய் முறியடித்துள்ளார்.
ராம்பாய்
ராம்பாய்

காத்மா பகுதியின் வயல்களில் மட்டுமே ஓடிக்கொண்டிருந்த ரம்பாயின் கால்கள் தற்போது பல்வேறு தடகள மைதானங்களில் ஓடி பதக்கங்களை வெல்கின்றது. மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகம் என இவர் பதக்கம் வென்ற இடங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சாதாரணக் காலணிகளை மட்டுமே அணிவதை வழக்கமாய் கொண்டிருந்த ரம்பாய் சிறிது காலமாய்த்தான் ரன்னிங் ஷூ மற்றும் ட்ராக்சூட் ஆகிவற்றை அணிந்து போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.

போட்டி முடிந்த பிறகு பேசிய ராம்பாய் "இது ஒரு சிறந்த உணர்வு. நான் மீண்டும் பந்தயத்தில் போட்டியிட விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார். அவரின் வெற்றிக்கான மந்திரம் பற்றி கேட்கப்பட்டபோது " சுர்மா, தஹி (தயிர்) மற்றும் தூத் (பால்) தான் நான் சாப்பிடுகிறேன்," என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism